Thursday, November 24, 2022

தயவும் தவமும்

தயவும் தவமும் இந்த சென்மத்துலே மோட்ச வீட்டில் புகுந்து கொள்ள வேண்டாமா, அப்போ எவ்வளவு சமயம் நாம் ஒவ்வொருவரும் சீவகாருண்ய வசத்தராயிருக்க வேண்டும்? கணக்கிட்டு பாத்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும் ,ஒவ்வொருவரும் எத்தனை நேரம் சீவகாருண்ய முனைப்பாய் இருக்கிறீர்கள் என்பது, அப்படித்தானே?. ஒரு நாளில் எத்தனை நிமிடம் என்று சொல்லுங்கள், உள்ளம் தயவுடன் இருக்கிறது?. பசிப்போருக்கு உணவளிக்க வேண்டும், அது தலையாய கடமை,அதுவே சீவ காருண்யம் என கொண்டு உணவளிக்கலாம். ஆனால் பாருங்கள் நூறு பேரிடம் பணம் வாங்கி ஒரு கும்பலாய் கூடி, சாப்பாட்டை ஏந்திகொண்டு பசி இல்லாதவர்களுக்கு பரிமாறி கொண்டிருக்கும் ஒரு கூட்டம், ஒரே அமர்களம், கேட்டால் சீவகாருண்யமாம். பசித்து இளைத்து, கண்கள் பஞ்சாகி உள்ளே சென்று பெரிய மனுஷங்கள் கிட்டே உக்காந்து சாப்பிட்டா திட்டுவாங்களோண்ணு பயந்து வெளியிலே ஒரு மூலைலே ஒதுங்கி நிக்கும் ஒரு கூட்டம்,எங்கே போகுது சீவகாருண்யம்? இதுவா சீவகாருண்யம்? இதுவா தயவு? பசித்து துக்கித்து நிற்பவனை கண்டால் உடம்பில் ஒருவித நடுக்கம் தென்பட ஆரம்பிக்கும்,அது பசியால் வாடினவன் உணவு கொண்டபின் அவன் கண்களில் ஏற்படும் பூரிப்பை கண்டபின்பே தணியும்,இதுவே தயவு. அப்படி நாள் முழுக்க தயவுடன் இருப்பதே தவம். இது வராமல் மோட்சவீடு என்று சொல்லிகொண்டு திரிவது வெறும் பகட்டுக்கு வார்த்தை ஜாலம் மட்டுமே,செத்து பிணம் நாறுமே ஒழிய மோட்சமில்லை

No comments:

Post a Comment