Thursday, November 24, 2022
அரபு எழுத்தும் உடலும்
மனிதனுடைய உருவம் முழுக்க அரபு எழுத்துக்களால் சுட்டப்படுகின்றன.இதை இல்முல் ஹர்ப் அதாவது அட்சரங்களின் ஞானம் என்பார்கள்.சூபி ஞாநிகள் அனைவரும் இக்கலையை தெரிந்தவர்கள்.செய்குல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு முதல் தக்கலை பீர்முஹமது ஒலியுல்லாஹ் வரை இக்கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவர்களே.இன்சானை குறிக்கும் இந்த ஹர்பில் முதலாம் எழுத்து அலிப் என்பது புருவமத்தியாகும்.பே எனும் இரண்டாம் எழுத்து வலப்புருவமாகும்.தே எனும் மூன்றாம் எழுத்து இடப்புருவமாகும்.ஸே எனும் எழுத்து நெற்றியாகும்.ஜீம் எனும் ஐந்தாம் எழுத்து தலையாகும்.ஹா எனும் ஆறாம் எழுத்து வலத்தோளாகும்.ஹாஆ எனும் ஏழாம் எழுத்து கண்ணாகும்.தால் எனும் எட்டாவது எழுத்து வலது முழங்காலாகும்.த்தால் எனும் ஒன்பதாவது எழுத்து இடது முழங்காலாகும்.றா எனும் பத்தாவது எழுத்து வலது விலாவாகும்.ஷ எனும் பதினொராம் எழுத்து இடது விலாவாகும்.ஸீன் எனும் பன்னிரெண்டாவது எழுத்து வலது மார்பாகும்.ஷீன் எனும் பதிமூன்றாவது எழுத்து இடது மார்பாகும்.ஸாத் எனும் பதினாந்காவது எழுத்து வலது செவியாகும்.ழாத் எனும் பதினைந்தாவது எழுத்து இடது செவியாகும்.தொ எனும் பதினாறாவது எழுத்து வலது கரண்டையாகும்.ளொ எனும் பதினேழாவது எழுத்து இடது கரண்டையாகும்.ஐன் எனும் பதினெட்டாவது எழுத்து வலது கரமாகும்.கைன் எனும் பத்தொன்பதாவது எழுத்து இடது கரமாகும்.பா எனும் இருபதாவது எழுத்து வலது புறங்கையாகும்.காப் எனும் இருபத்தொன்றாவது எழுத்து இடது புறங்கையாகும்.ஹாப் எனும் இருபத்திரெண்டாவது எழுத்து முதுகெலும்பாகும்.லாம் எனும் இருபத்து மூன்றாம் எழுத்து தொடைப்பொருத்தாகும்.மீம் எனும் இருபத்துநாந்காம் எழுத்து நெஞ்சு முதல் மூளை வரை ஆகும்.நூன் எனும் இருபத்தைந்தாம் எழுத்து உயிரின் நிலையாகும்.வாவ் எனும் இருப்பத்தாறாம் எழுத்து தொப்புளாகும்.ஹ எனும் இருப்பத்தேழாம் எழுத்து இருதயமாகும்.லாமலிப் எனும் இருபத்தெட்டாவது எழுத்து மூச்சாகும்.அம்ஸ் எனும் இருபத்தொன்பதாவது எழுத்து விந்தாகும்.அரபு எழுத்துக்கள் மொத்தம் இருபதொன்பது.யா எனும் முப்பதாவது எழுத்து .இதை சூக்கும எழுத்து என்பார்கள்.இந்த முப்பது எழுத்தின் இருப்பிடம் தாந் சிர்ருல் இன்சாந் ஆகும்.
அங்கம் எங்கும் அரபெழுத்து அமைந்திருக்குது !
ஆதி ரப்பின் அற்புதங்கள் மறைந்திருக்குது !
நுக்கதது தலையாச்சி !
நீண்ட அலிபு உடலாச்சி !
ஐந்து பூதங்களின் சங்கமத்தின் மேனியாச்சி !
மறைந்திருக்கிறான் மன்னன் மறைந்திருக்கிறான்!
மண்ணு விண்ணு மாளிகையில் ஒளிந்திருக்கிறான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment