Thursday, November 24, 2022
சத் சங்கம்.
== சத் சங்கம்.===
அறிவு என்பது சற்குருபிரான் தயவால் கிடைப்பது என்பது நிச்சயம்.. ஆனால் அது அவரால் நிகழ்வது இல்லை...சீடனின் ஆழ்ந்து செல்லும் திறத்தால் நிகழ்கிறது...தூங்குற சீடனுக்கு சித்தர் குருவாகி வந்தாலும் பயனொன்றுமில்லை
உங்களுக்கு நீங்களே தான் குரு.. உங்கள் அறிவே உங்கள் குரு... உங்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் உங்கள் அறிவு தான்
புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும்.
ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....
ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வலவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை..குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பஹ்டில்லை...வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்..அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது...அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது...வித்தையே குருவாகின்றது...இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....
இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க , அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.
----❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment