=====பீர்====
‘சுகமுறும் பேயோடு அலிபு சென்றொரு சுழி அறிந்துயர் துளியொடு அகமுறும் கடலதில் வலம்புரி தனில் அடைந்தொரு தரளமாய் அஹ்மதின்னிரு பதம் என் அன்புற மனம் மகிழ்ந்து உன்னோடு இரந்த நான் முகம் மலர்ந்தெனை முடுகி வந்து உயர் முறைமை தந்தருள் முதல்வனே=பீர் முஹம்மது ஒலியுல்லாஹ்.
அன்றொரு நாள் சொல்லெணா அனேகம் கோடி காலம் முன் றஹ்மத் எனும் பெருங்கடல் ஹயாத்துல் கைபார் என பெயர் கொள்ளுமுன் ஆத்தும மர்ம ஜலக்கடலாக நிறை கொண்டிருந்தது, அது இது என சொல்லெணா பரப்புடன் நிறை விரிந்து பரந்துள்.
அன்று ஆங்கு, “பே”யெனும் ஓர் சொல் உயர்ந்து அலிபை கொண்டுயர்ந்து உயர் “றே’ எனும் சொல்லை சார்ந்து கண்மணியாம் வலம்புரி ‘மீம்” எனும் சொல்லுக்குள்ளாய் அமர்ந்து அஹ்மது முஹம்மதுவாய் மலர்ந்து ”பீர்முஹம்மது” என பெயர் கொண்டது.
”பே” எனும் சொல் அரபு சொல்லாதிக்கத்துக்கு அப்பாற்பட்டு பெர்சிய நாட்டு சொல்லாதிக்கத்துக்குட் பட்டதாகும்.(peer).
No comments:
Post a Comment