வாசியும்(Wa-chi) வூசியும்(Wu-Chi)
இங்க வாசியே ஒழுங்கா வரல,இப்படி இருக்கற சமயத்துலயா வூசி என நீங்கள் கேக்கிறது புரியறது.ஆனா என்ன செய்ய சொல்லாம போக கூடாதுல்ல.அதன் சொல்லாம சொல்லிகிட்டு போவோம்ண்ணு போறேன். ”காதற்ற வூசியும் வாராது காண் கடை வழிக்கே” என பட்டினத்தடிகள் மகனின் பாடலை விளக்க போன ஏதோ கூமுட்ட விளக்கம் தெரியாம ஏதோ “ஊசி”ண்ணு பொருள் சொல்லிகிட்டு போனான்.அவனுக்கு எப்படி நான் சொல்லி புரிய வைப்பேன், இந்த வூசி வேற அந்த ஊசி வேறேண்ணு?.
காது தான் ஊசிக்கு பயனானது,காது அற்று போன ஊசி பயனாகாததுண்ணு இவன் பொருள் சொல்றான், தன் மகன் எழுதி வைத்த ஓலை துணுக்கில் குறிக்கப்பட்டிருந்த குறிப்பு தான் இது. இந்த வரியை பார்த்ததும் பட்டினத்தார் திடுக்கிட்டு மனம் மாறி சன்யாசம் பெற்றார் என கதை விட்டு கொண்டிருக்கிறது ஒரு குட்டம், அதை அப்படியே நம்பி செல்கிறது மற்றொரு கூட்டம்.மகனாக வந்த சிவபெருமானாரே பட்டினத்து அடிகளாருக்கு இப்படி ஒரு ஓலையையும் ஒரு காதற்ற ஊசியையும் அனுப்பி வைத்தார் என்கிறது கதை.
சரி, பட்டினத்து அடிகளாருக்கு ஒரு ஓலை துணுக்கில் இப்படி ஒரு பாடலை எழுதி அனுப்பிய அவர் மகன் எதுக்கு ஒரு காதற்ற ஊசியையும் கூட அனுப்பி வைத்தார் என்று இந்த மக்கள் கேட்ப்பதில்லை. ஓலையில காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே என ஓலையில் மட்டும் எழுதி அனுப்பினா பட்டினத்து அடிகளாருக்கு என்ன புரியாமலா இருந்திருக்கும், எதுக்கு அது கூட ஒரு காதற்ற ஊசியும் கூட அனுப்பினாராம் மகன்?. தந்தயர் காதற்ற ஊசியை முன்னர் பார்த்திருக்கமாட்டாரா, அல்லது காதற்ற ஊசி என ஒன்று அவருக்கு தெரியாதா என்ன?.சற்று யோசித்து பாருங்களேன்.
No comments:
Post a Comment