சன்மார்க்க சாதனை
அன்பான சன்மார்க்க பெருமக்களே....
எல்லோரும் அறிந்திருக்கிற விஷயங்களில் ஒன்று சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் சாதனை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதே, அப்படியல்லவா?.. ஆனால் சன்மார்க்கத்தில் சன்மார்க்கிகள் செய்வதற்க்கு “சாதனை உண்டு”... அதை சன்மார்க்கிகள் செய்யத்தான் வள்ளலார் பணிந்துள்ளார்.
பேருபதேசம் பகுதி வள்ளலாரால் கடைசியாக வழங்கப்பட்ட பெரருள்... அதை சற்று பார்ப்போம்.
"இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
"அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி"
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்" என்னும் பிரமாணத்தால் உணர்க.””””
மேற்சொன்னது பேருபதேச பகுதி என்பதை கவனிக்கவும்.... இங்கு தான் சாதனை விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது "அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதற்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்... நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்... ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்ரு ஆழமாக புரிந்தால் அல்லது புரிதல் வராது.
அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது """"பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்””””””.
இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம். கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது, “வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை. வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “அறிவு" என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள். இதை சற்று ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன்.
அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”... இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது... அதனையே "இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன்.
மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டிதருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.”””” என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம்
No comments:
Post a Comment