சாக பழகுவதே சகஜ நிட்டை...சாகாத கால் பிடித்து செத்து செத்து சாகாதிருப்பது சகஜ நிட்டை.
சித்தர்களை அசுத்த மாயாகாரிகள் என வள்ளலார் சொல்லுவது உண்மையே...ஏனெனில் அவர்கல் சுத்த வித்தையை அறியாதவர்கள்...அதையே வித்த்யா தத்துவம் எனவும் அமானிதம் எனவும் புகலுவர்கள்...அதற்க்கு மேம்பட்டது அருள் நிலை, அதற்க்கும் மேம்பட்டது சத்திய நிலை.ஏசு பிரான் அடைந்தது சத்திய நிலை, வள்ளலார் அடைந்தது அருள் நிலை.....சன்மார்க்கம் என்பது சுத்த வித்தை நிலை.....சுத்த சன்மார்க்கம் அருள் நிலை....சித்தர்கள் நிலை அதற்க்கும் கீழான அசுத்த மாயாகாரிய நிலை, அதனாலேயே அவர்களுடைய நூல்களில் சன்மார்க்க விரோதமான பலதும் காண கூடும்
சித்தர்கள் நூல்களில் உயிர்கொலை இருக்கும், மாமிச மருந்துகள் சொல்லபட்டிருக்கும், துர் மந்திரவாதங்கல் ஓட்டியம் சல்லியம் எனும் மாரன காரியங்கள் சொல்லபட்டிருக்கும்...இப்படியுள்ள பொருள்கல் எப்போதும் சுத்த வித்தியா நிலைகளில் வராது
.அருள் நிலை சாதனைகள் என்பது மூக்கின் ஊடே சரிக்கும் வாயுவினை கொண்டோ, கன்களில் ஒளிரும் ஜீவ கலைகலைகொண்டோ ஏனைய ஆதார சக்கர அனுஷ்ட்டான அனுபவ அனுபோக சாத்திய நிலைகளில் ம்யற்ச்சிகளினால் வருவது இல்லை. வெளிமுயற்ச்சியின்றி அருள்நிலை சாதனைகலெனும் ஆன்ம சாதனைகலால் வருவதாகும்.....அதற்க்கு “அறிவே ஆதாரம்”...வேறு புற கருவிகளோ கரணங்களோ தேவை இல்லை.
வள்ளலார் ஒரு ‘வல்லவனை’ குறிப்பிட்டுள்ளார்...அவன் பூட்டிய பூட்டை யாரும் திறக்க வரவில்லை என கூறுகிறார் என்பதை கவனிக்கவும்.....வள்ளலார் முன்னேறியது அருள் மார்க்கம்...கிறிஸ்து அடைந்தது சத்திய மார்க்கம்...இது தான் வேறுபாடு
வள்ளலார் அருளே வடிவமானவர் கிறிஸ்து சத்தியமே வடிவானவர்...அதனாலேயே பைபிள் “ அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மிடையே வாசம் பண்ணினார் “ என்கிறது
சன்மார்க்கத்திற்க்கு சாதனையாக இருப்பது கருனை எனும் தயவு....கிறிஸ்துவுக்கு சாதனையாக இருந்தது சத்தியம் எனும் வார்த்தை
மந்திரமோ, முத்திரையோ, வாசியோ, தாரனையோ, தியானமோ முக்கியத்துவமாக அருள்நிலை சத்திய நிலைகளில் கிடையாது...அதனாலேயே வள்ளலார் கூட தியானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை
ஆமா...அது அப்படித்தான்....ஏனெனில் சிவானந்த பரமஹம்சரை போன்று வேறு யாராலும் “தாமரை நூல் “போன்று கதியெடுக்க கற்று கொடுக்கபடுவதில்லை
கொடுப்பார்கல்..எப்படியென்றால் மரம் அறுப்பதை போன்று...வயற்று பகுதியோ ஏனைய அவயங்களோ எந்த விதமான சலனமும் இன்றி...தாமரை நூல் போன்று....நெஞ்சம் குழியிலோ தொண்டை குழியிலோ சின்ன துள்ளல் மாத்திரமாக கதியெடுக்க வேண்டுமெனில் ஒரு தடவை கூட உபதேசம் பெற வேண்டியதேயாம்
நூறு வருடம் விடாமுயற்ச்சியுடன் மரம் அறுத்தாலும் “ஒடுக்கம்” நேராது...”ஒடுக்கம்” என்பது நுணுக்கமான ஒரு விஷயம்...அது தெரிந்தாலே வாசி வசமாகும்...அடங்கும்....நிமிடத்திற்க்கு நிமிடம் அடங்கி உடம்பு வியர்க்கும்....15 நிமிட நேரத்தில் வியர்வை வரும்
உயிர் மேல் தூக்கும்...பாதத்தில் இருந்து...பாம்பை கண்டவுடன் உயிர் சடாரென மேல் நோக்கி கிளம்புவதை போன்று உயிர் உள் வலியும் இதுவே “ஊர்த்துவ கதி
பழைய வித்த்யார்த்திகளுக்கு கண்ட பூட்டு தெரியும்...புது தலை முறைக்கு கண்டபூட்டு கிடைக்கபெறவில்லை....அதனால் மேலும் கீழும் என்பது மட்டும் செய்வார்கள்...நுணுக்கம் தெரியாது....யாராவது இருந்தால் அதை சென்ரு பெற்ரு கொள்ள நலமாயிருக்கும்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை----இது வள்ளுவர் கூற்று,.இதில் “செவிச்செல்வம்” என்பது ஒரு மாபெரும் சாதனை விஷயம்......எல்லாவற்றையும் விட இதை பெற்றுகொண்டவர் புண்ணியவன்
சித்தவித்தையும் செவி வழியாக உபதேசிக்கபடுவதேயாம்...அனால் அதன் உண்மை தன்மையினை வித்தியார்த்திகள் எல்லோரும் அறிந்திலர்...அறிபவர் ஒரு சிலரே....அவர்கள் மட்டும் புண்ணியவான்கள் என சுருங்க சொல்லலாம்
கிரியை பண்ணுவதோ சித்த வித்தை பண்ணுவதோ விஷயம் அல்ல,, நிங்கள் பண்ணலாம் அல்லது பண்ணாமல் இருக்கலாம்....நம்பிக்கை இல்லாமல் இவையெல்லாம் பண்ணி பிரயோஜனம் என்ன?...பண்னுவது நம்பிக்கையுடன் இருப்பில் எல்லாம் நலமே....ஒரு சிறுகல்லை கடவுளால் ரொட்டி ஆக்கமுடியும் என கிறிஸ்து நம்பினார்...அந்த நம்பிக்கை நமக்கு இல்லாமல் கடவுள் நம்பிக்கை இருந்து பயன் என்ன?
கடவுளை நம்புவதே ஒரு சாதனை சங்கதி....அதை விடுத்து கடவுள் நேரில் இருந்திருந்தால் எவனாவது நம்புவானா/..இல்லை....இதோ நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்து கிரியா ..இதர வித்தைகள் அனைத்தும் எட்ட முடியாத விதத்தில் இருக்கும் அனந்த சம்பூரன ஆதி தேவனை எட்டுவதற்க்கு எனும் நம்பிக்கையிலே செய்ய்ப்படுகின்றன...ஆனால் உண்மை என்பது இவற்றால் எட்டமுடியாத நிலையிலேயே அப்போதும் இறை உள்ளது என்பதுவே...அதற்க்கே இந்த நம்பிக்கை
இந்த மூணும் இகத்தில் இல்லாத விஷயங்கள்...சத் விசாரம் என்ன என்பது தெரிந்தால் இது மூன்றும் தெரிந்தாகி விட்டது. சத் என்பது சத்தியத்தை குறிக்கிறது....அதையே தேட வேண்டும்...அதையே கேட்க்கவேண்டும்...அதையே திறக்க வேண்டும்
சித்த வித்தை வாங்கும் போது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் இடையில் ஒரு விளைக்கை கொளுத்தி வைப்பாங்க...உண்மையில் சித்தவித்தைக்கும் அந்த விளக்கிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....அது ஒரு “சாட்சி”...அப்படி “நிரபராதியாகிய சாட்சியை” வைத்து வித்தை கொடுப்பார்கள்...அதை “சத்தியம்” என கூறுவார்கள்...ஆனால் வித்தை வாங்கிய பிற்பாடு வாழ்க்கையில் ஒரு வேளைகூட அந்த “சாட்சி”யாக இருக்கின்ற விளக்கை யாரும் கவனிப்பதில்லை. அந்த சாட்சியை மறந்து விடுகின்றனர்...அதையே நாம் கடவுள் என்கிறோம்...வித்யார்த்திகள் “நிபராதியான ஆத்மா” என்பார்கள்..ரெண்டும் ஒன்றுதான்சாட்சியை மறந்து விடவேண்டாம் என்பதே என் எளிமையான வேண்டுகோள்...வித்தை எதுவாக இருப்பினும் செய்யுங்கள்...நிரபராதியான சாட்சி உங்கள் அருகில் “சத்தியமாக” இருப்பதை மற்ந்து விட்டால் வித்தையினால் பலன் இல்லைஇதையே கிறிஸ்து “ரெண்டு பேர்கலது சாட்சி” மெய்யென்று சொல்லி இருக்கிறதே...”நானும் என் பிதாவுமாக இருக்கிறோம்”..ஆதலால் என் சாட்சி மெய்யானது சத்தியமானது என சொல்லுகிறார்...இதை புரிவது என்பது மிக கடினமான ஆன்ம சாதனை மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்
இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே
சாட்சியை கொள்வது சித்தவித்தையின் ஒரு அங்கமே...அதை மறுக்கமுடியாது...வாழ்நாள் முழுதும் சாட்சியில்லாமல் கட்டலை இல்லை...கட்டலை இல்லாமல் உபதேசம் இல்லை.....ஆதலால் “சாட்சியை” இதுவரை கருத்தில் கொள்ளவில்லையெனில் இனி முதல் கொள்ள அன்போடு அழைக்கிறேன் சகோதரமே
வித்தையும் , சாட்சியும் சதா உறவோடு இருக்க பழகவேண்டும்....என்பதே கட்டலைகளில் பிரதானமாக இருக்கிறது அதையே நாம் வித்யார்த்திகள் சத்தியம் என சொல்லி ஏற்றுகொண்டுள்ளோம்...அதை மறக்கவும் முடியாது , மறுக்கவும் முடியாது....புரிதல் இல்லாமல் போவது ஆன்ம விளக்கம் தடைபடுவதாலே...அது “சாட்சியை கொண்டு வரும் போது விளக்கமடையும்...ஏனெனில் சாட்சி என்பது விளக்காகும்...அது விளக்கும் தன்மை உடையது...உண்மை
வெளியே இருப்பவை வெளியே இருப்பவை அல்லவே...அவை உள்ளின் பிரதிபலிப்பே...உள்ளின் புர தோற்றமே..உள் என்பதுவே வெளியாக பரினமித்துள்லது...உள் என்பது வெளியின் மறு புறம்...வெளி என்பது இருக்கும் வரை உள் என்பது இருக்கும்...இது ரெண்டும் அற்றதே சாட்சி...எனும் அத்வைதம்...ரெண்டற்ற தன்மை
நாம்’ நம்மை அறியும் வரை வெளி இருக்கும்...அறிந்தால் வெளி இல்லை...அதுவரைக்கும் ..நாம் நாமல்லவே...அப்போது சட்சி இருக்கத்தானே வேண்டும்...நாம் தான் எல்லாம் எனில் வித்தை எதற்க்கு
அப்போது “சாட்சியான ஆதமா “ வேண்டாம் என்கிறீர்களா?..ஐம்புலன்களின் சாட்சியான மனமே தான் ஐந்து திரி விளக்கு என்கிரீர்களா? ...இது யார் கொடுத்த விலக்கம் ஐயா/..சற்று தெரிந்து கொள்ளலாமா?......சத்திய வாசகம் சொல்லும் போது மட்டும் நிரபராதியான ஆத்மாவை சாட்சியாக கொண்டு வித்தையை பெற்ற பிறகு அந்த சாட்சியான ஆத்மா வேண்டாம் என்கிறீர்களே...இது யாருடைய கட்டளை என்பதனை அறிந்து கொள்ளலாமா
தோன்றி மறையும் மனம் எப்போது சாட்சியானது/. ஐம்புலன்களுக்கு சாட்சியான மனம் தான் ஐந்து திரி விளக்கு என யார் விளக்கம் கொடுத்தது?.. தூக்கத்தில் மனம் இருப்பதில்லையே ..அப்போது ஜீவனுக்கு சட்சி யாது?...மனமும் இந்திரியங்களும் தனித்து இயங்கும் தன்மை பெற்றதில்லையே...அது எப்படி சாடசியாக பரிணமித்தது
கடவுளே.... .@@@@@ !!!!!! அறிவுண்ணு ஒண்ணு இல்லாம ஐம்புலன்களால் ஆவதென்ன யாசகன்? ஜடமான பிரபஞ்ச பொருளும் சித்தான நாமும் வேறல்ல என்கிறீர்கள்...உங்கள.
சொல்லி வாரத பாத்தா வெளிச்சத்தில் இருந்து தான் இருள் உண்டாச்சுண்ணு சொல்லுவீங்க போல... யாசகன் நிச்சயம் அப்படி இருக்காதல்லவா?...இப்புவி என்பது மாயா சொரூபம்..அப்படியென்றால் மாயா சொரூபம் நாம் தான் என்றாகி விடுகிறதல்லவா?
தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை====அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?
மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு? அதுவும் மஹா மந்திரம் என சொல்லபட்டுள்ளது?...ஏன் “தயவு” என மட்டும் சொன்னால் மக்களுக்கு புரியாதா என்ன?..எதற்க்கு நீண்ட ஒரு மந்திரம்
கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி
சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?
விஜயகுமார் சு இறயின் நாவாவளிகளை காதில் உள்வாங்கும் போதும் அதுகுறித்து எழும் சிந்தனைகள் விளைவால் அறிவு விலாசமாகி தன்னையும் தன்னை சுற்றி உல்ல பொருள்களை விசாரித்து அறிந்து ,இந்த படைப்புக்கு காரணமான பரத்தை விசாரித்து விளங்குவதாக இருக்கலாம் ஐயா
Hseija Ed Rian ஆகாயமும் நட்சத்திரங்களும்...சூரியனும் கோள்களும் எல்லாம் இகலோகத்தை சார்ந்ததே அல்லவா?...பரம் என்பது பரலோகத்தை சார்ந்ததுவல்லவா? சு...ஐயா சொல்வது விஷயம் உள்ளது
”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்.....துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்
அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன....சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன
நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்
இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறதுதோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்
Hseija Ed Rian ”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...
Hseija Ed Rian “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்
Hseija Ed Rian திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.
Hseija Ed Rian அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்
Hseija Ed Rian இங்கு நான் கூறும் விஷயங்கலை வாசிப்பவர்கல் ஆழமாக விசாரணை செய்தாலொழிய சொல்லுவது விளங்காது...தயவு செய்து ஆழமாக செல்ல வேண்டுகிரேன்...மற்றவர்களுக்கு இது பிரயோசனமற்றது
Hseija Ed Rian இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்.... கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...
Hseija Ed Rian அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்
Hseija Ed Rian அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்
Hseija Ed Rian கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....
Muthu Kumar ஐயா, எல்லாவற்றையும் அறியும் அதற்கு நம் தோத்திரம் கேட்காமலா போய்விடும். //"அவர்" கேட்கின்றார் எனும் "உண்மை நிலை" உடையவர்களுக்கு// தயைகூர்ந்து மேலும் விளக்குங்கள்
Hseija Ed Rian இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்
Hseija Ed Rian உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை
Hseija Ed Rian நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல
No comments:
Post a Comment