வள்ளலாரே மறைப்பாகத்தான் சாகாத தலையறிந்து சின்னம் பிடி வேகாத கால் அறிந்து சின்னம் பிடி என சொல்லி போயிருக்கிறார்...மக்களை ஆண்ட இருளில் இருந்து கொஞ்சமாவது முன்னேறவைக்கும் முயற்ச்சியே ஜீவகாருண்யம், சிம்பிளாக விஷயத்தை சொல்லிவிட்டு போயுள்ளார்..இது புதிய கருத்து ஒன்றுமில்லை, பழையது தான் , அதிகம் ஆழமாக விளக்கியுள்ளார்கள்..அவ்வளவுதான், ஆனால் மறைஞான விஷயங்களை எல்ல மக்களும் புரிந்து செயலுக்கு கொண்டுவருவது என்பது கடினம், ஆனாலும் ஆசை தான், எல்லோரும் முக்தி அடையவேண்டும் என, அவரின் சிடர்களை கூட பாருங்கள், யாரும் அடைந்ததாக தோன்றவில்லை, ஏனில் பேசுவது சுலபம், செயல் கடினம், மக்களால் கடினமக இறை அன்போடு அன்மீகத்தில் செயலாற்றமுடியாது..கோடியில் ஒருவன் வருவான், அவன் மறையானதை எடுத்துகொள்ளுவான், அவனின் தீரம் அளப்பரியது, அவனே அடைவான், வேறுயாரும் அடையபோவதில்லை, சும்மா வறட்டுஞானம் பேசி திரியலாம்
ராப்பகல் ஜெபித்து பாருங்கள் புலப்படும்...மனம் அதற்க்கு அடிமையாகிவிடும், சும்மா எந்திரத்தனமாக நாம் சொல்லாமலே ஜெபம் நடக்கும்..எந்த பிரயோசனமும் இருக்காது... ஆனால் பஞ்சாக்கரத்தின் உண்மை அறிந்து என்னசெய்ய்வேண்டுமோ அதை செய்தால் நடக்கிறது ஞானவாழ்க்கை.... அட்சரங்கள் எல்லாம் ஒரு மாயாஜால விளையாட்டு தான் , மறைத்து கட்டிவிட்டார்கள்
No comments:
Post a Comment