இருதயம்
கடவுள் என்ற தத்துவப் பொருள் இருக்கும் இடம், அனைத்து மத வேதங்களிலும் ஒரே மாதிரியாகக் கூறப்பட்டிருந்தாலும் மதப் பிண்ணணி கொண்ட மடங்கள் இதற்கு மாற்றுக் கருத்தைத்தான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறது.
*சைவமதம் ஈசன் "இருப்பிடம"் இருதயம்* என்றும்
*வைணவம் "இருதய கமலவாசன்" என்றும்
*கிருத்துவம் புனித "இருதயம்" என்றும்
*இஸ்லாம் கல்பென்ற "இருதயத்தில்" அல்லா உள்ளான்* என்றும்
ஒத்த கருத்துக் கொண்டிருந்தாலும் வேதத்தில் பயிற்சியும் பாண்டித்யமும் பெற்ற இன்றைய ஆன்மீக சிந்தனாவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர்கள் நடத்தையாகிய பிற மத சகிப்புத்தன்மை இல்லாத ஒன்றினால் வெளிப்படுகிறது.
காரணம் இங்கே "இருதயம்" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் அறியா காரணத்தால் அறிவில் பேதமாகி அது தேகத்தில்முடிவடைகிறது. உயிர்நிலை என்ற உயர்ந்த ஞானம் வேதத்தை வார்த்தையாகக் கற்றுணர்ந்தவர்களுக்கு
புரியாத அறியாமையால் இது நிகழ்கிறது.
*இருதய இடத்தை அறியும் வினையே மனிதகுலம் ஆற்றவேண்டிய பணியாகும்.*
சொல் பிறந்த இடம் எங்கே?
முப்பாழ் எங்கே?
துவார பாலகர் எங்கே?
நல்ல சங்கு நதி எங்கே?
வைகுண்டம் எங்கே?
நாரணன் ஆழ் இலை மேல் படுத்தது எங்கே?
அல்லல்படும் ஐம்பூத ஒடுக்கம் எங்கே?
ஆறுஐந்து இதழ் இரண்டும் முளைத்தது எங்கே?
சொல்ல வல்லார் உண்டானால் அவரை
நாமும் தொழுது வணங்கி குருவென பணிந்து
வழங்கல் ஆமே
குருவே சரணம்.
No comments:
Post a Comment