ஓதுவது எல்லாம் அறிந்து ஓதாவிடில் அது திருவாசகம் ஆனாலும் சரி திருவருட்பா ஆனாலும் சரி சும்மா பாட்டு மட்டும் தான் நடக்கும்... ஈசன் சேவடி சேராது, இறைவன் கேட்க்கமாட்டான்.
இறைவன் கேட்க்க பாடுவதே பாட்டு. அதற்க்கு தன்னுக்குள் இறை இருக்கும் தலம் கணு அந்த இறைவனிடம் பாடி தோத்தரிக்கவேண்டும்.
அவர் கிட்ட பாடாம அடுத்தவன் வீட்டுல போயி பாடிகிட்டு இருந்தா அவருக்கு என்ன லாபம் நமக்கு என்ன லாபம்?.. செத்து தொலையவேண்டியது தான்...
இதை தான் கிறிஸ்த்து சொல்லுவார், “நீங்கள் என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள். அவர் சத்தத்தையும் கேட்டதில்லை. பிறகு எப்படி நான் சொல்லுவதை ஏற்றுகொள்ளுவீர்கள்?”
ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்
அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே
இப்படி அகார ஜிவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு
மனம் வாக்கு காயம் இவை மூன்றிலும் “சாட்சியை” கொண்டு வருவதே “உண்மை சித்த வித்தை”...அது வராமல் சும்மா மூச்சு பயிற்ச்சி என மட்டுமே நடைமுறை வித்தை கருதப்படும்...அதில் சாட்சி இல்லை...சத்தியம் இல்லை.. செத்த வித்தையாக இருக்கும்....நிரபராதியான ஆத்மா இருக்காது....புரிகிறவர்களுக்கு புரியட்டும்
இந்த நிரபராதியான ஆத்மாவையே “ஈஸ்வரன்’ என அழைக்கிறார்கள்...ஆனால் வருத்தத்துடன் சொல்லிகொள்வதென்னவென்றால் ஜீவனே தான் ஈஸ்வரன் என தவறாக கொள்கின்றனர்...அதனால் அகங்காரம் பெருகுகிறது.. ஜீவனே தான் ஈஸ்வரன் எனில் அங்கு ஜீவேஸ்வர ஐக்கியம் என எப்படி வரும்?...ஐக்கியம் என்பது இரு வெவ்வேறு பொருள்களின் சங்கமம். அல்லாது ஒரு பொருள் உருமாறி மற்றொன்றாக தோற்ற,ம் பெறுவதுவல்லவே...

No comments:
Post a Comment