Thursday, November 3, 2022

ஈம்

 ====“ஈம்”====


நாம் பொதுவாக முதலெழுத்து என்றால் அது அகரம் என்போம் அல்லவா? ஆனால் அகரம் முதலெழுத்தா என கேல்வி எழுப்பினால் இல்லை எனத்தான் பதில் சொல்வேன், ஏனெனில் நமக்கு முதலெழுத்து தெரியாது.

ஆனா.. ஆவன்னா என நாம் முதலில் எழுத்து படிப்பது பள்ளிகூடத்தில் சென்று தான் அல்லவா?.. அப்போது அதற்க்கு முன் பேசும் திறன் நமக்கு இல்லையா? ..இருக்கிறது..ஒரு குழந்தை முதல் முதலாக உச்சரிக்கும் உயிரெழுத்தே முதலெழுத்து. எந்த மொழியை தாய்மொழியாக கொண்ட குழந்தையும் முதல் முதலாக இயற்கையிலேயே உச்சரிக்க பழகிகொள்ளும் எழுத்தே முதலெழுத்து. அது இயற்கை உண்மை எழுத்து.

”அ-இ” எனும் இரு எழுத்துக்களின் கூட்டு கலப்பாக இருக்கும் ஒரு உச்சரிப்பே முதலெழுத்து, அதுவே ஆதி அகரம். இந்த ஆதிஅகரத்தை சின்ன மழலை குழந்தைகள் உச்சரிக்க காணலாம். ஆனால் நாம் அந்த எழுத்தை மறக்கசெய்துவிடுகிறோம். குழந்தை உச்சரிக்கும் போது அந்த ஆதிஅகரமானது “எ” போன்று ஒலியாக வெளிப்படும். சற்று மழலையிடம் கற்றுகொண்டால் இது புரியும்.

’அ-இ-உ“ மூன்று உச்சரிப்புகளும் மூல உச்சரிப்புகள்., இவை மூன்றும் மூன்று வர்ணங்கலைகொண்டவை, மூன்று நாடிகளாக இயக்கம் பெற்றிருக்கின்றன. அகரம் இடது, உகரம் வலது, இகரம் மத்தியம் என நிலை. இந்த இகரத்தை குண்டலினீ என்பார்கள். போதமுறும் போது “ஈம்” என தெளியும்.ஆதிஅகரம் அக்கினியாகவும், இகரம் அந்த அக்கினியின் வெளிச்சமுமாகவும் விளங்கும். இது சர்வ மந்த்ரார்த்த சூட்சுமம்.

No comments:

Post a Comment