எது சுழுமுனை
அடியேனுக்கு ஒரு கூமுட்டை குரு வாய்ச்சாரு..அசாதரணமான ஞானம் கொண்டவரு தானுங்கோ..ஆனா மக்களுக்கு தான் அவர் சொல்ற ஞானம் புரிய மாட்டேங்குது....அவர் சொல்றார் சுழுமுனைண்ணா ரெண்டு புருவத்தின் மத்தி இல்லைண்ணு..நான் என்ன செய்ய..ரெம்ப குழம்பி போயிட்டேன்...யப்பா இவர் கிட்ட இருந்தா நம்மல மொத்தமா குழப்பி விட்டிருவார்ண்ணு நெனச்சு அவரை விட்டுபுட்டு வந்துட்டேன்..
மனுஷன் சொல்றத பார்த்தா ஏதோ உண்மை இருக்கும்போலேண்ணு இப்ப உள்ளுக்குள்ளா ஒரே வருத்தமா இருக்கு..நான் என்ன செய்யணும் சொல்லுங்க மக்கா...சின்ன குழந்தைங்க இருக்காங்களே..பிறக்கிறப்ப அதுங்களுக்கு கண்ணு ரெண்டும் எங்கயோ நட்டுக்கிட்டு நிக்கும் பாருங்க, அது தான் சுழுமுனைண்ணு சொல்லி அடம்புடிச்சுகிட்டு இருப்பார்,குருவுக்கு நாம சொல்லிகுடுக்கமுடியுமா என்ன,’இல்ல ஓய்...சுழுமுனைண்ணா புருவமத்தி தான்..அப்படித்தான் எல்லா ஞானியர்களும் சொல்லியிருக்காங்கண்ணு?’
ஒரு பாடல் வேற அப்பப்ப பாடுவாரு..நில்லுங்க, அத பார்த்து எடுத்து போடுறேன், நீங்களே நிதானிச்சுக்கோங்க..அவர் சொன்னது மெய்யா அல்லது நான் சொன்னது மெய்யாண்ணு.....
“””வாறான பிரம்மத்தின் நடுவே மைந்தா
வந்ததடா ரவிமதியும் சுடர்மூன்றாகி
கூறாக பின்னியடா கீழேபாயும்
கூறுகிறேன் இருகண்ணில் ஒளிவைகேளு
வீறான அண்டவுச்சி முனைகம்பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுதுபோலே
நேரான இருகண்ணில் பின்னலாகி
நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே.
பாரப்பா பரப்பிரம்ம ஒளிவினாலே
பத்தியே நரம்புவழி பாயும்போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவதாகி
அண்டமெல்லாம் ஏகமாய் தெரியலாச்சு
காரப்பா நரம்பென்ற விழுதுவட்டம்
கபாலத்தில் முக்கூறாய் சுழுனையாச்சு
வீறப்பா காதுக்கும் நாக்குக்கும்தான்
வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்ககேளே.
கேளப்பா மூலமடா லிங்கந்தன்னில்
கிருபையுடன் கண்ணுக்கு கீழ்மேலாக
நாளப்பா தமர்போல பிடரிமார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பினூடே
வாளப்பா அண்டமுட்டி உயரமைந்தா
வலுவாக முன்சொன்ன நரம்பினூடே
கேளப்பா சேர்ந்துமிக பின்னலாகி
சிறந்திடவே புருவமத்தி ஆகும்பாரே.
பாரடா புருவமத்தி யேதென்றாக்கால்
பரப்பிரம்மமானதொரு அண்டவுச்சி
நேரடா முன்சொன்ன நரம்புமத்தி
நிலைத்ததடா சுழினையென்று நினைவாய்பாரு
வீரடா அண்ணாக்கின் நேரேமைந்தா
மேவடா மனந்தனையும் செலுத்தும்போது
காரடா சுழுனையில் மனந்தான் பாய்ந்து
கலந்தைந்துபூதமும்தான் ஒன்றாய்போமே.
போமடா முன்சொன்ன நரம்பினூடே
பூரித்து ரவிமதியும் சுடர்தான் மூன்றும்
ஆமடா பின்னியுந்தான் கீழேபாரும்
அந்தரங்கந்தன்னை பார்க்க அடங்கிபோகும்
நாமடா வெளிதிறந்து சொல்லிவிட்டோம்
நாதாந்தபிரம்ம நாட்டந்தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்டவுச்சி
உறுதியுடன் சித்தமதை ஊணிப்பாரே.
~(காகபுசுண்டர் ஞானம் 80
மெய்பொருள் என்பது அழிவில்லாத பொருள், எக்காலத்திலும் அழியாத பொருள். அழிந்து போகிர எந்த பொருளும் மெய்பொருள் கிடையாது.அழிந்து போகிர பொருட்கலை தீட்சை பண்ணுபவன் குருட்டுகுரு என்பதில் சந்தேகமே கிடையாது. பீரப்பாவின் ஞானரெத்தின குரவஞ்சிக்கு 32க்கு போவோம்,”அன்றுமின்றுமழியாத பொருளென்னடி சிங்கீ-இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருள் சிங்கா”.இது தான் ரகசியம் பரிபாஷை ஒண்ணும் இல்லாத மெய்பொருள்பாடல்
102-பொல்லா குபிர்களும் வருங்குற்றமும் பொருந்தா பிணிதுன்பம் பலவாபத்தும் நில்லா வறுமையும் மனச்சலிப்பும் நினைப்பு மறப்பும் வந்தெய்திடாமல் எல்லா வினைகளும் முசீபத்தும் வந்தென்னை அணுகாமல் காத்தருள்வாய் அல்லா வுனை புகழ்ந்துன்னோடிரப்பேன் அடியேன் துஆப்பேறி டேற்றுவாயே” என்கின்ரார்.இதிலிருந்து ஞானபுகழ்ச்சி என்பது பீர் அப்பா அவரின் துக்கங்கலை, அவரின் வேண்டுதல்களை, அவரின் குறைகலை, விண்ணப்பங்கலையே குறித்து பாடுகின்ரார் என்பது தெளிவாகின்ரது அல்லவா?
இது போல அவரின் பிரவி குருட்டை தீர்த்து இரண்டு கண்களிலும் பார்வை மறைப்பை நீக்குவிக்குமாறு பாடுகின்ரார்.உங்களுக்கு இதை போதகம் பண்ணினவர் ஒன்றை சொல்லாமல் மற்றொன்ரை காட்டி திரித்து கூறியிருக்கின்ரார் போல. பிரப்பா பிரவிகுருடர் என்பதை உங்களுக்கு மறைத்து வைத்துவிட்டு, இந்த பாடல்கள் எல்லாம் நமது கண்களில் ஏதொ குருடான மறைப்பு இருக்கிரது போலவும், அந்த மறைப்பை மாற்றவே பீரப்பா இப்படி பாடல்கள் பாடியிருக்கிறார் போலவும் திரித்து கூறியிருக்கின்ரார்.அவ்வளவுதான் இதன் விஷயம். குருடன் பாடினான், அதை கேட்டு குருடு இல்லாதவ்னும் குருடனாக பாவித்து பாடுகின்ரான்
வள்ளலார் கிட்ட ஒரு பெந்தகோஸ்தே காரனை கொண்டு போனா அவன் உடனேயே “பாவியே மனந்திரும்பு, தெய்வராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது” என சொல்லுவான்.அது போலத்தான் நம்ம குருமார்கள் நிலையும். சும்மா இருக்கிறவனை போயி நீ பாவி என்பார்கள், உன் கண்ணில் பாவ மறைப்பு இருக்கிறது என்பார்கல், நீ மனந்திரும்பாமல் போனால் உனக்கு தெய்வராஜ்ஜியம் இல்லை என்பார்கல். ரெண்டு பேரும் ஒண்ணு தான் சொல்றாங்க.பெந்தகோஸ்தகாரன் ஒரு பாவமும் இல்லாதவனை போயி பாவி என சொல்லுவான்.குருட்டு குரு சும்மா இருக்கிற கண்ணுல பாவ மறைப்பு இருக்குண்ணு சொல்லுவான்.அவ்வளவுதான்.
No comments:
Post a Comment