பரம்பரை பரம்பரையாக பல குருமார்களும் மிக ரகசியமாக இந்த நாயோட்டி மந்திரம் என்பதை பெரும் பாதுகாக்கபட்ட பொக்கிஷமாகவே வைத்திருந்தனர்.ஆனால் பலகாலம் அடி பணிந்து பின் துடர்ந்து செலவிட்டு கடைசியில் கிடைக்கிறதென்னவோ “சி” எனும் மந்திரம் தான்.இதை பலபேரும் சொல்ல கேட்டிருக்கேன்.உண்மையில் இவர்கள் “நாயோட்டி” மந்திரம் அறிந்தவர்கள் அல்ல.இவர்கள் சொல்லும் நியாயம் "சீ” என நாயை ஓட்டுகின்றார்களாம். அதனாலத்தான் இது நாயோட்டி மந்திரமாம்.என்னா ஒரு -----த்தனமான கற்பனை. விஷயம் கிடப்பது எங்கே? இவர்கள் சொல்லுவது எங்கே?..இதுவா நமனை ஓட்டும் மந்திரம்
பஞ்ச பூத கலப்பான உடலில் அமுதம் சதா சிந்திகிட்டு தான் இருக்கு....நாம தான் தெரியம இருக்கோம்.பாடுபட தேவையில்லை..எல்லாம் “முடிச்சு’ தான் வெச்சிருக்கு பத்துமாசமான கற்பக நிலையில் எல்லாம் அமைக்கவேண்டிய முறையில் அமைத்துத்தான் இந்த ‘காயாபுரி கோட்டை’ கட்டி வெச்சிருக்கு.ஒண்ணும் பிரிக்கவும் வேணாம் சேர்க்கவும் வேணாம்.அமுதை எங்கிருந்து சதா சிந்திகிட்டு இருக்குண்ணு மட்டும் புரிஞ்சா பொதும்
பரதம் எனும் சுக்கில ரசமும் கெந்தியெனும் கருவண்டமும் சேர்ந்து உருவான பிண்டம் பத்துமாதம் கரு உலையில் வெந்து உருவாகி அண்ட பிண்டமாக முடிந்து பிரந்திருக்கிரது.அதனுள் சேர்க்க வேண்டியது எல்லாம் அருமையாக சேர்த்து உருக்கி அமைக்கபட்டுள்லது. சிந்தி போகிற அமுதை சிந்தாமல் அருந்தினால் சிந்தாமணியில் கற்பகாலம் வாழலாம்.
No comments:
Post a Comment