Friday, November 4, 2022

சிவலோகம் வைகுந்தம்

 செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்
பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்
              
இத்தரை மீதினில் இந்த நாளில்
இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்”=பாரதியார்

மனதுக்கு ஒரு கற்பனை தேவை, எதயாவது சதா கற்பித்து கொண்டிருக்கும். சிலந்தி சதா வலையை பின்னி பின்னி அதிலேயே தான் சிக்கி செத்து போகுமாம், அது போல.

ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் கற்பனை செய்து உருவாக்கி வைத்த கற்பிதங்கள் தாம் நாம் காணும் சமயமத சாத்திர கலா பேதங்கள், இவையனைத்தும் மனதின் உருவாக்கங்களே.மனதுக்கு உணவாக செய்யபட்டுவித்த செய்பொருட்கள் தாம், மாறாக ஒன்றிலும் உண்மையில்லை என்பதே உண்மை.

அவற்றின் மேலான கற்பிதம் ஒன்றுண்டெனில் அது தான் கடவுள் உருவகம், எங்கோ ஏதோ கடவுள் ஒருவர் சர்வ வல்லமையுடன் திகழ்கின்றார் எனவும், அவர் சாகா நிலை கொண்டவர் எனவும், பிறக்காதவர் எனவும்,சர்வ வரங்களையும் சித்திகளையும் வழங்க வல்லவர் எனவும் இட்டுக்கட்டி கதை புனைந்து சென்றிருக்கின்றனர் நம் மகான்கள்.என்ன சொல்ல இவை அனைத்தும் அவரவர்கள் மனகற்பனைகளே.

எத்தனை பெரிய ஞானநிலைக்கு ஏறினவர்களும் கூட இந்த கற்பனை மயக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் சிக்குண்டே போயிருக்கின்றனர்.ஒரு சிலர் மட்டுந்தான் இதன் நிஜசொரூபத்தை உணர்ந்து கடவுள் என்பது கற்பனை என்றும், அது ஒரு உபாயமாக மனதை கடக்க வைக்கப்பட்ட உபாதி எனவும் தெளிந்து அதை கடந்து சென்றிருக்கின்றனர்.

ஏனையர் தன் மனதாலேயே கடவுள் எனும் ஒரு தத்துவத்தை தன் மன வலிமையினாலே உருவாக்கி உணவூட்டி உணர்வூட்டி உரையாடி ஒன்றாய் கலந்து தானும் கடவுளும் வெவ்வேறு என மயங்கி, தன் மனதின் ஒரு கூறாம் கடவுள் எனும் மன கற்பனைக்குள் மாட்டி அறிவிழந்து நிற்கின்றனர்.மனமொன்றே ‘தான் என்றும் அவன் என்றும்” கூறுபட்டு நிற்கின்றது. உண்மையில் “தான் என்றும் அவன் என்றும்” இருப்பதெல்லாம் பேதமே, மனதின் கூறுபட்ட நிலையே,துவைதமே.

No comments:

Post a Comment