Thursday, November 3, 2022

மனம்

 மனம் தன்னைத்தான் சுட்டி ‘நான்’ என்கிறது என புரிந்து கொள்ளாமல் வேறு எதையோ மற்றொரு பொருளை தான் ‘நான்’ என்கிறது எனும் மயக்கம் விடையற்ற தேடுதலுக்கு உத்வேகம் உருவாக்கி தேடி தேடியே தோல்வியை அடைகிறது மனம்

மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்

ஏனெனில் மனத்தை தவிர அங்கு மனத்தின்ல் தேடுவதற்க்கு ஒன்றும் இல்லை.அதுவே தான் நானாக இருக்கிறது.இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை தேடுகிறாய் ஞானதங்கமே

பேய் பிடித்த நாய் வருகிறவன் போகிறவன் என எல்லோரையும் கடிக்கும்...அதுபோலவே மனமும் ‘நான்’ யார் என தெரியாமல் தனக்கு கிடைத்ததையெல்லாம் ‘நான்’ என எண்ண ஆரம்பிக்கும்....உடலை நான் என்னும்.உயிரை நான் என்னும்...பிராணனை நான் என்னும் இந்திரியங்களையும் நான் என்னும்.

===================================

ஆனால் மனம் எனும் பேய்இதை நம்ப மறுக்கிறது..அது ஆகாயத்தின்மேலே குடியிருக்க்ம் ஏதோ ஒரு கற்பனைஆண்டவரின் துணையே பெரிது எனநினைப்பூட்டுகிறது..அதையே நம்பசொல்லுகிறது...மனம் மனத்தையேஏமாற்றுகிறது...இருப்பதைஏற்றுகொள்ளமறுத்து விட்டு இல்லாததைஏற்றுகொள்ள வலியுறுத்துகிறது..மாயபிசாசே அப்பாலே போ.

சிவ சிவாகலிகாலம்...மனமே கேட்டு படி...அங்ககைலாயத்துல இருந்துகிட்டு சிவனார்பிரபஞ்சத்தை படைத்தார் என்பதைகற்றுணர் ..மனமே...ஏய் உன்னையத்தான்மனமே உன்னையத்தான்...ஏன்பிதற்ருகிறாய் என் மனமே ஏன்பிதற்றுகிறாய்...நீயும் மாயசொப்பனத்தின்வடிவழகு கண்டுமலைத்தாயோ...சிதம்பரத்தில் வாதவூரார்கண்ட சிவன் பொற்சிலைக்குள் மாயமாய்மறைந்ததையும் கண்டாயோ..ஏய் மனமேஇன்னும் தெளிவிலையோ உனக்கு..ஏய்அழகிய பல உலகங்கலை உன் சிற்றணுதொகுப்பால் காட்டி வித்தை புரியும்மனமே நீ உனராயோ..

கண்டதெலாம் அனித்தியமேகேட்டதெலாம் பழுதெ நீ உண்டதெலாம்மலமே என வள்லல் பெருந்தகை பாடிசென்ரது கூட உணராமல்இருக்கின்றாயோ மனமே...நீ திருந்துவதுஎப்போது...உன்னையே கட்டி மேய்த்துஓய்ந்து விட்டேன் மனமே..என்று நீ உன்கற்பனை கொட்டைக்குளிருந்து மீண்டுவரபோகிராய்...யுகங்கள் எத்தனையாககற்பனைகட்டிகொண்டாய்...கற்பாந்தங்கள்எத்தனையென கனவுகட்டிகொண்டாய்...இது தான் உன் நித்தியவேலையோ என் மனமே..உணர்வாய்திரும்பி எழு என் மனமே மாய்ந்துவிடாதே..கற்பனை சாகரத்துள்மீழ்கிவிடாதே...ஏய் கொள்லிபிசாசேஉன்னைத்தான் சொல்லுகிறேன்..ஏன்இப்படி பிதற்றல்?..ஏன் இந்தமயக்கம்..எண்ணிலொகோடி தேவர்கள்ஆமே என எண்ணிலொகோடிதவமிருந்தாயே..இன்னுமா உன் மயக்கம்மாறவில்லை..??விழி மனமே விழி

===================================

No comments:

Post a Comment