ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.
ஆதியில் இருந்த பொருள் இரண்டாக பிரிந்தது “ஓம்-னம” என அண்டமும் பிண்டமும் ஆச்சு.
நம என்பதை நாம நமஸ்கரிக்கும் விதமாக புரிஞ்சுண்டிருக்கோம், ஆனா தத்வார்த்தம் என்பது வேறு. எப்படி பிரணவத்துக்கு தத்வார்த்தம் இருக்குதோ அது போல நமவுக்கும் இருக்குது. இவை இரண்டும் ஆதியானவையே.. சர்வ பிரபஞ்சமும் சர்வ ஆற்றல்கலும் இந்த நமவில் ஒடுக்கம்
ஓம் என்பது ஆன்மீகம் எனில் நம என்பது பவுதீகம்.பிரபஞ்ச காரணீ, மாயாகாரணீ. கீதையில் கண்ணன் கூட மாயையின் தன்மையை அளக்கமுடியாது, அதை விவரிக்கமுடியாத தன்மை கொண்டது என்கிறார்.புரிந்துகொள்ளமுடியாதது மாயை.விசித்திரமானது, எல்லையில்லாதது.பிரணவத்தை போல
ஓம் என்பதில் ஒரு ஒடுக்கம் உள்ளது ஆனால் நமவுக்கு ஒடுக்கம் கிடையாது..சர்வ வியாபினி, சர்வ பஹிர் வியாப்தினி,சர்வ குருத்வாஹர்ஷிணி,சர்வ விக்ஷேபிணி என பலமுகம்
நம என்பது காரியபடாமல் போனால் சித்தி பிராப்தி இல்லை.மாயா பந்திதமாகவே இருப்போம்
சிறு குழந்தைகல் மண்ணும் நீரும் கொண்டு தான் விளையாடுவார்கள், அதனால் இதை விளையாட்டு பொருள் என மறைப்பாக சொல்லுவார்கள், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்றால் அது இது தான் இறைவனும் மண்ணும் நீரும் கொண்டு படைத்தழித்து விளையாடுகின்ற பொருள் என சொல்லலாம்.சிருஷ்ட்டி சம்ஹாரம் போல
ஓம் என்பது ஆன்மீகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றால் நம உடலை கற்பமாக்கும் செயல்திரம் கொண்டதுவாம் என சொல்லுகின்றனர் அறிந்தோர் சிலர்
No comments:
Post a Comment