குருடர்கள் ஞானம் பெற முடியுமா?
நம் உயிரை பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.
இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.
ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.
என பல சற்குருமார்களும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என ஆராய்வது அவசியம். அல்லாவிட்டால் துர்மரணம் அடைந்து விடுவது நிச்சயம்.
கண்மணி என்பது பார்வை செயல்படுமிடம் என்பது தெரியும். காது போன்ற ஏனைய இந்திரியங்கள் எவ்வாறு மனதுக்கு செயல் ஆற்ற உதவுகிறதோ அவ்வண்ணமே கண்ணும் செயல் படுகிறது. ஐந்து இந்திரியங்களின் மூலம் அறிவானது செயல்பட்டு நமக்கு உலக நிகழ்வுகளை அறிவுக்கு கொண்டு வருகிறது.ஒளி என்பதோ ஓசை என்பதோ கண்ணிலோ காதிலோ இருப்பது அல்ல. அது இந்திரியங்களின் மூலம் அறியப்படுவதாகும். தூங்கி கிடக்கும் போது கண்ணில் ஒளி இருக்காது, ஏனெனில் அப்போது அறிவானது கண்களினூடே செயல்படாது.அல்லாது கண்மணியில் தான் உயிர் இருக்கிறது என்பது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அதினால் எந்தவொரு பயனும் நிகழ்ந்து விடப்பொவதில்லை என்பதை மனதில் கொள்வது நலம்.
முதலில் கண்மணி மத்தியில் ஊசிமுனை அ்ளவு ஒரு துவாரம் இல்லை என்பதனை தெளிந்து கொள்ளுங்கள்... ஒளி ஊடுரும் தன்மையினாலான ஒரு அமைப்பே உள்ளது... சந்தேகம் இருந்தால் ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்... அந்த அமைப்பானது விரியவும் சுருங்கவும் கூடிய ட்தன்மையில் உள்ளது. கண்ணாடியில் எப்படி ஒளி ஊடுருவுமோ அதே படி இங்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது..... திரைகள் என்பவை ஆன்மாவை மூடி இருக்கும் தன்மை உடையது... அது கண்மண் தவத்தினால் கண்ணீர் பெருக்கினால் உருகும் தன்மை கொண்டது இல்லை. சுக்கிலத்தில் இருக்கும் போதே திரையானது இருக்கும்... அது கண்மணியில் வருவது கிடையாது. ஒரு மனிதன் வினை திரை அகலாது செத்து போனால் அவன் கூட இந்த கண்மணியும் கூடவே செல்லாது அல்லவா? அப்படி இருக்கும் போது அவனுடைய வினைதிரையானது எங்கிருக்கும் என ஆலோசிப்பது நலம்... ஆன்ம ஸ்தானம் என்பது உடம்பை பற்றியதி இல்லை, அதாவது தூல பொருள் இல்லை... உடம்பாலது தூலம்,, மனம் சூட்சுமம், அதையும் கடந்தது ஆன்மா...அது தூலமான உடம்பில் ஒரு இடத்தில் இருப்பது இல்லை... அப்படி இருக்காது , ஏனெனில் சூட்சுமமானது தூலத்தில் அடையாளமாக இருக்காது... தூலம் என்றால் அதற்க்கு நிறை இருக்கும், கொள்ளளவு எனும் இடம் இருக்கும்... அப்படி சொல்லப்படும் ஒன்று பருப்பொருள் எனப்பெடும்...ஆன்மா பருப்பொருள் இல்லை..அதற்க்கு எடை இல்லை,.. இடம் இல்லை...அப்படி இருக்க எப்படி அது தூலத்தில் இருக்கும் என சிந்திப்பது நலம்.... தேவை இருந்தால் இதற்க்கும் ஆழமாக விவாதிகலாம்....
கண் தானம் பண்னுவது தெரியுமில்லையா... செத்தவர் கண்மணியில் இருக்கும் இந்த ஒளி ஊடுருவும் அமைப்பையே அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து வேறொருவருக்கு தானம்மாக செய்கிறார்கள்... அப்போது இந்த கண்மணியில் இருக்கும் வினையானது கந்தானம் பெற்றவருக்கு போய் விடுமா என்பதை ஆழமாக விசாரியுங்கள்... அப்போது கண்மணி தவத்தின் பொய் தோற்றம் புலப்பெடும்
மட்டுமல்ல கண்மணி தவத்தினால் எவனொருவனும் கண்மணியினூடே உள்ளே புகுந்து போகமுடியாது. எனெனில் புகுந்து செல்லவேண்டுமெனில் முதலில் அவன் கண்மணியின் வெளியில் இருக்கவேண்டும். ஆனால் அவன் இருப்பதொ உள் எனப்பெடும் ஆன்மீக ரகசியஸ்தானத்தில் தான். அதையே இருதயம் என்பார்கள். உள்ளெ இருப்பவனாகிய அவன் எப்படி வெளியில் இருந்து கண்மணி வழியே உட்புகுவான்? அப்படி புகவேண்டுமெனில் அவன் ரெண்டு மணி வழியாகவும் ஏக காலத்தில் உட்செல்வானா? அப்படி செல்லமுடியுமா என்பதை சற்று அறிவுடையவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா?
💓💓💓
Kirubanandan Palaniveluchamy உண்மையை பல கோயாபல்சுகள் மறைக்கிறார்கள் இப்படி சின்ன விஸயத்தை மட்டும் செய்தாலே கடவுளை அடைந்து விடலாம் என்பது பலருக்கு கவர்ச்சியாகவும் உள்ளது
Jayamohansamy Mohan நல்ல தகவல்.
Gokulakrishnan Gokul பாவம் அறியாமை முகத்தில் கண்கொண்டு பார்க்கும் மூடர் காண்
Tvl Sankaralingam கண்மணி விளக்கம்
அருமை!
Jayamohansamy Mohan கண்ணில் பார்பது எல்லாம் உண்மை அல்ல.நேரில் பார்த்து உண்மை உணர்வது உண்மை.மனம் இயங்காமல் கண்ணிற்கு வேலை இல்லை.
லிங்கேஷ்வரன் ஐயா சூரியன் சந்திரன அகாரம் உகாரம் 8'2என்று கண்ணை ஏன் குறிப்பிட்டார்கள்
Shivaya Nama SivaKumar அய்யா 8க்குள்2அ 8ம்2ம் 10அ../ திருவடி தீட்சை நயண தீட்சை 2ம் வேறுவேறா அய்யா
Hseija Ed Rian தெரியலியே...குருநாதரும் போயிட்டார்...இருந்திருந்தா கேட்டிருக்கலாம்
Paranivasan தூல சூக்கும உடலில் குறித்து கூறியிருக்கிறீர்களே, ஆம் சூக்கும பொருளின் விரிவே தூலம் ஆகும் ஆக சூக்குமம் காரணம் தூலம் காரியம் ஆகும் என்னில் சூக்குமம் அப்படியே அடையாளப்பட்டு தோன்றாமல் அதன் விரிவே தோன்றும் அப்படியென்றால் தூலத்தின் ஆதியை நோக்கிட காரண ஆன்மாவைக் காணலாமோ. தெரியல
Hseija Ed Rian சூக்குமத்தின் விரிவே தூலம்.. தூலம் உடலெனின் சூக்குமம் உயிராம்... இவை இரண்டினும் உள்ளுறை ஆன்மா என பரபடுவது மனமே தான்.. .காரணம் என்படுவது அது சூக்குமத்திற்க்கும் தூலத்துக்கும் காரணம் என கொள்ளதகாது, எனில் இவை மலர காரணி மனமே ஆம் எனவே.
Hseija Ed Rian அகாரம் உயிரே உகாரம் பரமாய் மகாரம் மலமாய் வரு முப்பதத்துள் என வரும் திருமந்திர கருத்தும் இதை சார்ந்தே தான்....மகாரம் மலம் எனபடுவது மனமாகிய மலகுற்றமுடைய ஆன்மாவேவென அறியபடும்
Paranivasan அந்த கரணங்களுள் ஒன்றல்ல அவை சந்தித்ததுவே ஆன்மா என்றால் மனம் அந்த கரணங்களுள் ஒன்று தானே.
Paranivasan அகாரம் உயிர் மகாரம் மலம் என்று தெளிவாக தெரிந்தது அப்ப மலத்தால் கலப்புற்ற உயிர் ஆன்மா என்று கொள்ளவோ.
Hseija Ed Rian உயிருக்கு மலம் வராது..அது சிவரூபம்
Paranivasan உயிர், மலம் அப்படி னா என்னவென்றே தெரியாது. மெய்ஞானியர் உணர்ந்து சொன்னதை . உணராது அப்பதங்களைப் பயன்படுத்தி பேசுவது நான் ஒருபோதும் அதை தெளிவாக அறிந்து கொள்ள உதவாது என தோன்றுகிறது இது சரியா ?
Paranivasan உயிர் மலமோ , சிவமோ ஏதோ ஒன்றுடன் சேர்ந்துதானே இருக்கும்.
Hseija Ed Rian Im speaking what i have experienced sir
K Nagasubra Maniem சுவாமி விரஜானந்தா, தயானந்தர் குரு, ஒரு அற்புத ஞானி , குருடர்...!
Hseija Ed Rian ஞானி எப்படி குருடர் ஆனார்?
K Nagasubra Maniem ஞானி எப்பொழுதும் குருடன் அல்ல. ஞானமற்றவர்களே குருடர்கள். ஆனால், உலக வழக்கப்படி கண் தெரியாதவன், உலகை பார்கமுடியதவன் குருடன். ஒன்றே பலவாகக் காண்பவன் மனித உணர்வில் உள்ளவன். அவனுக்கு காண்பது கண் வழியாகவே. கண்ணா காண்கிறது? கண்ணிலிருந்து காண்பவன் யர்ர்? பிணம் கண்ணிருந்தலும் கானுமா? எனவே காண கண் மட்டும் போதாது. ஆன்ம உணர்வே கண் காண உதவும். ஞானி கண் இல்லாமலேயே ஆன்ம உணர்வு மூலம் காண்பான். அவனுக்கு எல்லாம் அவன் மயமே.. ஐம்புலன் இருந்தும் அல்லது இல்லாமலும் ஞானியால் எல்லா செயலும் முடியும். ஞானி எப்படி குருடர் ஆனார் என்ற கேள்வி குருடர் ஞானி ஆனார் என்பதே பதில். ஞானி ஒரு உருவம் அல்ல. ஞானி ஒரு ஆன்மா ஆகிவிட்டவன். ஒரு உடல் அல்ல. எல்லா உடலிலும் அவனே உள்ளன். எல்லார் கண்ணிலிருந்து காண்பதும் அவனே. தன கண் வழியாக மட்டுமே பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அவன் அமரத்தன்மை அடைவது இப்படியே. அவன் உடல் அவன் அல்ல. எல்லா உடலும், எல்லா மனமும் எல்லா உயிரும் அவனுடையதே. இதுவே அன்பின் பயன். அன்பே அவன்.
Hseija Ed Rian ஆமாம் ஐயா..உண்மை
Jayamohansamy Mohan மனிதனாக பிறந்தவனுக்கு கண் பார்வை இல்லையென்றாலும் மனமானது உணர்கிறது..ஆன்மா என்பது எண்ணங்களின் தொகுப்பு....இந்த ஆன்மாவின் உதவியால் மனம் இயங்குகிறது...ஒருவனின் துர்மரணம் அவனுக்கு மாயா உருவம் இருப்பதை போல் ஆன்மா மனமும் அங்கே இயங்குகிறது...சுத்த ஆன்மா பரவெளியில் எங்கும் பிரயாணம் செய்ய தகுதி கொண்டது..துர்ஆன்மா இருந்த இடத்திலே தன் மனதின் எண்ணங்களை நிறை வேற துடிக்கிறது....
ஆன்மாவே நல்லது கெட்டததிற்கு துணையாக உள்ளது..காரியம் காரணம் மனமே எடுக்கிறது...அதனாலே மனதிற்கு ஆன்மா மூலமாகிறது...மனதிற்கு எண்ணங்கள் தேவைபடுகிறது... இதை நிறைவேற்ற உடல் தேவை..உடல் இயங்க உயிர் தேவை...
எண்ணங்கள் அற்று மனதை இழந்து ஆன்மாவை கொண்டு வாழ்பவனுக்கு அதே உடல் போன்ற சூட்சுமம் வேலை செய்கிறது.....இதுவே உலகம் இருக்கும் வரை பரிமாணிக்கிறது.
No comments:
Post a Comment