Friday, November 4, 2022

அவதூதர்களும் அம்பரர்களும்

 அவதூதர்களும் அம்பரர்களும்

நாம சஹஜமாக பார்க்கும் ஒரு கூட்டம் மகான்கள் தான் அவதூதர்கள் என கருதி வணங்கி ஏதோ பெரிய மகாசித்தர்கள் என சொல்லி பூசித்து ஏவல் செய்து பணிவிடை காட்டி அவர்களையே சுற்றி திரிந்து கொண்டிருக்கிறோம், ஆலயங்கள் சமாதிகள் மணிமண்டபங்கள் என ஏராளமான வழிபாட்டு தலங்களை இவர்களின் அடக்கத்தலங்கலாக கட்டி பூசை புனஸ்காரங்கள் செய்தும் வருகின்றோம்.ஆனால் உண்மையில் இவர்கள் அவதூதர்களா என யாரும் கேள்வி எழுப்புவதில்லை.அசிங்கமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிகொண்டிருக்கும் ஒருவனை நாலு பேர் சொல்லக்கேட்டு அவதூதர்கள் பதவி கொடுத்து வணங்கி நிற்கிறோம்..பைத்தியக்காரத்தனமாக தனக்குத்தானே அர்த்தமில்லாமல் புலம்பி திரிபவனையும் அவதூதர் என சொல்லி பல்லாக்கு கட்டி சுமந்து திரிகின்றோம். மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாக திரிபவனுக்கும் இவர்களுக்கும் என்ன தான் வித்யாசம் என கேட்டால் ஒன்றுமில்லை.உண்மையில் இவர்கள் அவதூதர்கள் இல்லை என்பதே உண்மை.


யாரும் நிரந்தரமாக அவதூதர்களாக இருப்பதில்லை, அப்படி நிரந்தரமான அவதூதர் எனும் பதவி யாருக்கும் இல்லை என்பதே இதன் நிதர்சனம். எல்லா ஞானிகளும் அவதூதர்கள் தான். ஞான அவத்தைகளில் ஒன்று தான் அவதூத அவத்தை.ஜாக்கிரத் அவத்தைக்கும் முழு தூக்கத்துக்கும் மத்தியில் சொப்பனாவத்தை என ஒன்று இருப்பது போல, எல்லா ஞானிகளும் இந்த அவதூத அவத்தையை கடக்காமல் ஞான நிலைக்கு வருவதில்லை.ஒவ்வொரு ஞானப்படிநிலைகளுக்கும் மத்தியில் இப்படியான அவதூத அவத்தைகள் இருக்கின்றன.அவரவர்கல் கடக்கும் படிநிலையை பொறுத்து இந்த அவதூத அவத்தையில் நீளமானது கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கும். நாற்பத்தெட்டு நிமிடம் முதல் நாற்பத்தெட்டு வருடம் வரைகும் இந்த அவதூத நிலை நீடிக்ககூடும்.இது ஒரு ‘கடவுநிலை’ அனுபூதியல்லாது நிரந்தரமான ஒன்று இல்லை. எல்லா ஞானவான்களும் இந்த கடவுநிலையின் ஊடாகவே கடந்து மேல் நிலைகளுக்கு வந்துள்ளனர். அப்படியெனில் இங்கே அவதூதர்கள் என நாம் கட்டி வைத்திருக்கும் கோட்டைகள் யாருடையது?. உண்மையில் உங்களுக்கு நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.பைத்தியங்கல் அவதூதர்கலாக இருப்பதில்லை, அவதுதர்கள் ஞானிகளாக மிளிர்வர் என்பதே உண்மை. நிரந்த பைத்தியத்துக்கு மருந்தில்லை, .அது ஞானியாக மலராது.

அவதூதர்கள். அவதூத அவத்தையில் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு உருமாற்றம் பெற்று செல்லுபவர்கள்.முதல் நிலையிலும் அவர்கள் தெளிந்தவர்களாகவே இருப்பார்கள்,அடுத்த நிலையிலும் தெளிந்த நிலையிலேயே இருப்பார்கள்.ஆனால் சொல்லப்படும் அவதூத அவத்தை என்பது ஒரு இண்டர்மிட்டண்ட் நிலையே ஒழிய நிரந்தர நிலை அல்லாமல் இருப்பதினால் அவர்களிடத்தில் பைத்தியம் குடி இருக்காது.ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் குடியேறும் போது உண்டாகும் ஒவ்வாமை போன்றதே அவர்களின் அவதூத நிலை.அவர்கள் செல்லும் பாதயை நிச்சயம் நன்றாக உணர்ந்திருப்பார்கள்,பாதை தவறி பிறழ மாட்டார்கள்.இந்த அவதூத நிலையிலும் கூட அவர்கள் மக்களை மேல்நிலைக்கு இட்டு செல்லும் உன்னத பணியை நிரைவேற்றுவார்கள், தன்னலம் கருதாமல் சதா சிவக்கலப்பிலேயே இருப்பார்கள்.பைத்தியம் என்பது தன்னிலை இழந்த தன்மை.அது தான் வித்யாசம்

No comments:

Post a Comment