Friday, November 4, 2022

நியாயம்-தீர்ப்பு-கூமுட்டைத்தனம்

 நியாயம்-தீர்ப்பு-கூமுட்டைத்தனம்


கோழி ஆகாயத்துக்கு போனாலும் கூவிகிட்டு தான் இருக்குமாம்.அது போலத்தான் பல கூமுட்டைகளும் ஆகாயத்துக்கு போன கதை.

மீன நாதர் சித்தர்களில் பெரும்பிரசித்தி பெற்றவர்,நேரடியாகவே இறைவனிடம் உபதேசம் பெற்றவர்.அப்படிப்பட்ட மீனநாதர் ஒரு சமயம் ஒரு பெண்ணரசு நாட்டுக்கு போயி அகப்பட்டுகிட்டார்.அங்க ஆண்களே கிடையாது, மொத்தமும் பெண்கள் மட்டும் தான்.நாளடைவில் மீனநாதர் தன் இருப்பை மறந்து விட்டார்,தன்னையும் அவர்களில் ஒருவராக பெண் என ஆழ்ந்து உணர்ந்து ஐக்கியபட்டு போனார்.

போனவர் பொனார்ண்ணு கிடக்காம அவர் சீடர் கோரக்கர் தன் குரு நாதரை தேடி அலைஞ்சாராம். எங்கு தேடியும் குரு நாதரை காணோம்.அப்படி ஒருநாள் கோரக்கரும் இதே எடத்துக்கு வந்து சேர்ந்தார்.சபையில் ஆனந்த நர்த்தனம் ஆடும் தேவ மங்கையர்கள் குழாம்,எங்கும் இன்பமயம், பரவசத்தின் உச்சத்தில் அனைவரும் திளைத்திருந்தனர்.

அந்த சபையில் ஒரு அழகிய ராஜ கன்னிகையின் அழகு கோரக்கரை ஈர்த்தது,அவள் தன்னை மறந்து சங்கீதத்தில் லயித்திருந்தாள்.உற்றுப்பார்த்த கோரக்கர் அதிர்ந்து போனார். ஆளு நம்மாளு தான், சீடர் குருவ்ன் இருப்பை பார்த்து அதிர்ந்து போனார்.அப்புறம் குருவுக்கு அவர் இருப்பின் தன்மையை புரிய வைக்க கோரக்கர் பட்ட பாடு பெரும்பாடாக விவரிக்க கிடக்கின்றது.

ஞனத்தின் உச்சிக்கு போன புத்தரை மாரன் வந்து சோதித்த கதை என ஏராலம் புத்தசரிதத்தில் கானலாம், பெண்ணாகவும் பேயாகவும் பல கூத்தடிக்கும் இந்த மாய மயக்கங்களை ஞானப்பாதையில் சஞ்சரிக்கும் அனைவரும் எதிர் கொண்டு தான் ஆகவேண்டும்.

ஏசுபிரான் நாற்பது நாள் நோன்பு முடித்து எழுந்த போது சாத்தான் அவரை சோதிக்க எதிர்பட்டானாம், எது வேண்டுமானாலும் கேள் கொடுக்கிறேன், ஒரு முறை என்னை பணிந்து எனக்கு சலாம் சொல் என கேட்டதாம்.இப்படி பல செம்மல்களும் இந்த கட்டத்தை கடந்து தான் ஆகவேண்டும் என்பது நிதர்சனம்.

உன்னை தேவர்களுக்கு தேவனாக வைக்கிறேன், உன்னை நியாயத்தீர்ப்பு கர்த்தராக வைக்கிறேன், உன்னை விட பெரியவன் வேறு யாருமில்லை, நீ தான் ஆதி குரு கர்த்தாதி கர்த்தர், சித்தாதி சித்தர்ண்ணு சொல்லி மயக்கிற தருனம் வரும்போது மயங்கினவன் கதி என்னாகும்.இறமாந்து அலைப்புண்டு போவான். அவன் சொல்றது ஒண்ணும் நடக்காது ஊரே பார்த்து ஏளனம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்படுவான்.எல்லாம் சித்தர்களும் எல்லா ஞானிகளும் தன்னை அடக்காமல் தன்னிலை மறந்து போனால் வரும் வினை இது.

ஏறுவதற்க்கு எத்தனையோ படிகள் இருக்கும், இவன் கண்ணுக்கு அது ஒன்றும் தெரியாது போகும்.நான் கடைசி நிலைக்கு வந்துவிட்டேன், என்னை கடந்து யாரும் போகவில்லை, நான் தான் முதல் ஆள் இந்த நிலைக்கு வந்தவன் என ஏமாந்து போவான்.நான் தான் நாட்டாமைண்ணு வரும் நினைப்பு இவனை அதள பாதாளத்துக்கு தள்ளிவிடும்.தேவை இல்லதவற்றை உளறிகொட்டிகிட்டு இருப்பான்.தேவையானது எதுவென சொல்ல இவனுக்கு குருவும் வாய்க்காது, ஏனெனில் இவன் குருவுக்கும் அந்த பக்கம் போய் விட்டேன் என நினைத்து இறமாந்து இருக்கிறவன்.

இப்படியான கோழிகள் நிறைய கூட்டில் இருந்து தப்பிச்சு திரிகின்றன, ஜாக்கிரதை மக்கா...கர்த்தர் அங்கே இருக்கிறார், கர்த்தர் இங்கே இருக்கிறார் என யாராவது சொன்னால் நம்பாதேயுங்கள் என ஏசு பிரான் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னே சொல்லிட்டு போயிட்டார்.நாம தான் இன்னமும் கூம்முடைகலாக நியாயத்தீர்ப்பு கர்த்தர்களை நம்பிகிட்டு இருக்கோம்.

No comments:

Post a Comment