Thursday, November 3, 2022

சாலை ஆண்டவர்கள்

 சாலை ஆண்டவர் சொல்லுவதை பாருங்கள்,”"வாயுணவு இந்ந அனித்திய உடலை வளர்ப்பதற்காக என்று யாவற்றிராளும் அறிவார்கள். ஆனால் செவியுணவு எது,அது எதற்காகத் தரப்பெற்றது என்பது தான் எவருக்கும் எட்டவில்லை.


னித்திய தேகமெடுத்து வாழ்வதுதான் செவியுணவின் பலன் என்று இந்ந அகில உலகத்திற்கும் அறிவிக்கவே னாம் வந்நுள்ளோம். அந்ந வுணவை யார் கையில் தரப்பெற்று இந்ந உலக முழுதினுக்கும் வழங்ஙப்பெற வேண்டுமோ அவர்கள் கையிலே இறைவன் அதை ஒப்படைத்தாயிற்று. அந்நச் செவியுணவின் பலனை ஏராளமானபேர் இங்ஙுபெற்றிருக்கிறார்கள். இனியும் பெற விரும்புவோர் பெற்றுக் கொள்ளலாம்."

"மனிதனின் அற்பவாழ்வு உடலை வளர்ப்பதற்காக இவனுக்கு உண்ண வாயைக் கொடுத்தான். ஆனால்கற்பகோடி காலப் பேரின்ப னித்திய உடல் வளர் வாழ்வினுக்காக இவனுக்குச் செவியைக்கொடுத்துள்ளான்.

வாயில் சுவை உணர்வது மிருகம் - செவியில் சுவை உணருவோர் தேவர்கள்."


மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்.

--சாலை ஆண்டவர்கள்


சிவன் ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, எட்டா நாள், ராஞானஸ்னானம், லயிலத்துல் கதிர் ரா முதலான எல்லா குல தலைஇரவுகளையும் ஒரே இரவாக்கி தர வல்லது சாலைத்தமிழ்.ஒருவனுக்கு சேன்ற வயதையெல்லாம் மீட்டுத்தந்து சிரஞ்சீவி ஆக்கவல்லது நம் சாலைத்தமிழ்.இதைப்பார்க்கிலும் பெரிய காரணமும் அதிசயமும் மனுவின் உயிர்க்கு வேண்டியது வேறெங்கே உள்ளது?.இதை தேடி வராமல்,பல்லாயிரகணக்கில் செலவு செய்துகொண்டு பலனாளும் அலைகிறார்களே,எங்கே என்ன அதிசயம் கண்டார்கள்?.

=சாலை ஆண்டவர்கள்

உன் மூச்சு சொற்படி கேட்கிறதா? அல்லது சொற்படி கேளாமல் அன்னியமாக இருக்கிறதா ?
-அன்னியமாய் சத்துருவாய் இருக்கிறது . அதை உன் சொற்படி கேட்கச் செய்கின்றவர்களே ஆசான் , னீ அவரிடத்தில் அன்னியமின்றி பழகினால் உனது சுவாசமும் அன்னியமில்லாமல் உன் சொற்படி கேட்கும்.

-திருவருட் கொரல் திருவாக்கியம்:- 135


னித்தியமாகிய பேரின்பத்தை அடைய*
*ஒரு ஜீவன் முத்தரின் அன்புக்கு இவன் பாத்திரவானாக இருந்நால் போதும் .*
ஆனால் , மெய்யான ஜீவன் முத்தர் கிடைப்பதுதான் அருமை . அது கிடைத்துவிட்டால் போதும் 
- சர்வக்ஞ வாழ்வுவரம் இவன் கைக்கு வந்நுவிடும் .
மேலே சொன்னோமே ,
அது போல ,
அவர்கள் திரு முன்னர் னாற்பதடிக்குப் பக்கத்தில் போனாலே அவருடைய பவர் எட்டிவீசி அடிக்கிறது என்றால் , அது என்ன லேசான ஜீவ கரென்டாகவா இருக்கும்! 
இவனாகவே தன்னறிவில் சாய்ந்நு என்ன தவம் செய்து கிழிக்கப்போகிறான் ?
ஜீவனிருக்கும் எல்லைக்கு இவன் போனால் அது எட்டி உதைக்குதே !
இது பிரத்தியச்ஷ அனுபவமல்லவா ? 
இதைக்கூட தெரியாதபடிக்கு 
வாயில்வந்நபடி 
கன்னே பின்னே என்று ,
குண்டலினி சக்தி ,
அகம் பிர்மாஸ்மி ,
மகா மாயி ,
ஓம் ஆம் ஊம் ,
ஆய்ரா ஊய்ரா என்று உளறுகிறான் .
இதனால் என்ன வந்நுவிடும் ?
அவனைப் பார்த்து 
- முதலிலே 
'னீ என்ன ஜாதி ஐயா ' 
என்று கேட்டால் ,
' னான் சைவன் ' 
என்று சொல்லுகிறான் .

'முதலிலே உனக்குப் பஞ்ஞாட்சரம் 
- அந்ந பிரம்மரகசிய முதலாகிய பஞ்ஞாட்சரம் அல்லவா வெளியாக வேண்டும் .
அதை விட்டு 
வாயிலே ஆய்ரா ஊய்ரா என்கிறாயே ' 
என்று கேட்டால் விழிக்கிறான் 
...
என்று 
னமது குலதெய்வம் 
... மெய்வழி சாலை ஆண்டவர்கள்... எமபடரடிபடு கோடாயிதக்கூர் இராஜகெம்பீர பிரசங்ஙம் வாக்கியம் 290 
ல் அருளியுள்ளார்கள்

No comments:

Post a Comment