Thursday, November 3, 2022

வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும்

 

வெட்டாத சக்கரமும் இறையாத தீர்த்தமும் 

உலகத்தில் தீர்த்தம் என்பது பரிசுத்தமாகும் பண்பை கொண்டதுவாம். ஏதொன்று அசுத்தத்தை மாற்றி பரிசுத்தப்படுத்துகிறதோ அது தீர்த்தம்.”அண்ணாக்கென்றதின் மேற்புறத்தில் கொண்டது அக்கினி தீர்த்தமாம் ஞானபெண்ணே” என்பர் சித்தர்கள்.அதுவே இறையாத தீர்த்தம்,கண்களில் இருந்து வழியும் நீர் இறைக்கப்படுகிறது....அது இறையாத தீர்த்தம் இல்லை. அப்படியான தீர்த்தத்தில் இருக்கும் புட்பமே எட்டாத புட்பம்...எல்லா நீர்நிலைகளில் இருக்கும் புட்பங்களும் எட்டி பறிக்கமுடியும் தன்மையிலே இருக்க, அக்கினி தீர்த்தத்தில் இருக்கும் புட்பமோ எட்டி பறிக்க முடியாது இருக்கின்றதுவாம்.அந்த புட்பத்தின் மத்தியில் இருக்கும் மணியானதுவோ ஷண்முகமான மவுன மணியாயிருக்க அந்த ஷ்ண்முகங்களும் வெட்டப்பட்ட நிலயில் அல்லாமல் சக்கரவடிவமாய் இருக்கிறதாம்.ஏனெனில் வெட்டப்பட்ட முகங்களை உடைய மணியானது சக்கரமாய் இருக்காது, ஆனால் வெட்டாத சக்கரமாய் இருக்கும் ஷண்முக மவுனமணியானது புருவமத்தியில் இருக்கும் ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது.
  

No comments:

Post a Comment