Friday, November 4, 2022

அத்வைதம்

 அத்வைதம்


”தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்”.
-வள்ளல் பெருமானார்.

ஒரு கண்ணாடி வைத்து அதன் முன் விளக்கு ஏற்றி சாதனை பண்ணுவதை பார்த்திருக்கின்றோம்,கண்மணி தீட்சை நயன தீட்சை என மக்களை நம்ப வைத்து கண்மணியில் தெரியும் விளக்கின் பிரதி பிம்பத்தை உற்று பார்க்க சொல்லி, அது தான் ஜோதி எனவும், அங்கு தான் ஜீவன் இருக்கின்றது என சொல்லியும், இது தான் வள்ளலார் சொல்லியிருக்கின்ற கண்மணி தவம் என சொல்லியும், இதன் உட்புகுந்து தான் முக்திக்கு செல்ல வேண்டும் என சொல்லியும்,கண்மணியில் உணர்வை வைத்து சாதனை செய்தால் கண்மணியில் மத்தியில் இருக்கும் துவாரத்தில் இருக்கும் மலமாகிய ஏழு திரைகளும் அகன்று திருகதவு திரந்து பிரம்ம ரந்திரம் புகுந்து மோட்சம் அடையலாம் என பிதற்றி திரியும் கூட்டத்தினரை பல இடங்களில் பார்க்கின்றோம். உண்மையில் வள்ளலார் சொன்ன தியானம் இதுவா என சற்று ஆலோசித்து பாருங்களேன்.

“பார்க்கும் தான் கெடுவது அதவைதம், பார்க்கபடும் பொருளும் கெடுவது அதீதம்” என வள்ளலார் எதை பொருளாக சொல்லுகின்றாராம்?. கண்மணியில் பிரதிபலிக்கின்ற விளக்கு வெளிச்சத்தையா,அல்லது கண்மணியில் உருவமாக பாவிக்கப்படும் பிம்பத்தையா?.எனில் ”பார்க்கும் தான்” கெடுவது எங்ஙனம், பார்க்கபடும் பொருளும் கெடுவது எங்ஙனமாம்?.கூமுட்ட பயலுக தானும் கெட்டு இருக்கிறவனையும் கெடுத்து குட்டிசுவராக்கிட்டு இருக்கானுவ.

No comments:

Post a Comment