Saturday, November 5, 2022

பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?

 பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?



தலைப்பை பாத்துகிட்டு சிரிக்காதீக!!!!...பாத்திரம் என்றால் தீட்சை பெற்றுகொள்ள தகுந்தவன் என பொருள் சொல்றாங்க மகான்கள்.


பரமோன்னத குருவை அடைவது என்பது இப்பிறவியின் பயன் மட்டுமல்ல, பலபிறவிகளின் பலன். எண்ணற்ற பிறவிகளின் பலனே குரு வடிவமாக எழுந்தருளுகின்றது. அதை பயன்படுத்திகொள்வதும் அவனவன் செய்த புண்ணிய ஸுஹ்ருதமேயாம் என்பதில் ஐய்யமில்லை.


பிறப்பிலேயே உலக விஷயங்களில் வேட்க்கையற்று இவற்றை கடந்த எதையோ சாதிக்க வேண்டும் எனும் உந்துதலோடு பிறப்பவன், எதனையும் பொருட்படுத்தாது இளம் பிராயத்திலேயே மூகனாக ஏகனாக எதையோ தேடிகொண்டிருக்கும் தன்மை பொருந்தியவனாக ஒன்றிலும் பற்றில்லாதவனாக வேட்கை மிகுந்தவனாக திரிவான், காய்ந்த சருகு போல....குருவின் திருவுரு தரிசித்த மத்திரத்தாலேயே அவனில் ஆனந்தம் அணை உடைந்தாற்போல் குதூகலிக்கும்,ஏன் என்றோ எதற்க்கு என்றோ அவனையும் அறியாமல் எழும் எழுச்சி அது.அவனுக்கு கேள்வி என கேட்க்க ஒன்றுமில்லாமல் இருக்கும்...சந்தேகம் என ஒன்று அவன் மனதில் கூட துளிர் விடாதிருக்கும்..ஏதோ ஜென்மத்து உறவு போல குருவிடம் பழகுவான்.. ஒன்றையும் கேட்டு பெற்றுகொள்ள வேண்டும் எனும் சிந்தை கூட அவனிடம் இருக்காது... குருவுக்கு தெரியும், எப்போது எதை எவ்வண்ணம் கொடுக்கவேண்டும் என நிதர்சித்திருப்பான்...அவனுக்கு என தேவை ஒன்று இருக்காது, சேலையும் நூலும் போல குருவிடம் இருப்பான்...பூரண சரணாகதியுடையவனாயிருப்பான். குரு ஒன்றை சூசகமாக சொன்னால் கூட பஞ்சை போல பற்றிகொள்ளும் திறம் கொண்டவனாயிருப்பான். இவன் உத்தம பாத்திரம்

No comments:

Post a Comment