இருதயத்தின் வலி
துக்கம் தொண்டையை கவ்வியது என சொல்ல கேட்டிருக்கிறோம்,இருதயம் நொறுங்கும் வலி அனுபவிக்கிறேன் என சொல்லகேட்கின்றோம்.இவை எதை குறிக்கின்றது என யாராவது எண்ணி பார்த்ததுண்டா?.ரெம்ப ஆழமான நேசம் பிரிவை அனுபவிக்கும் போது அதன் தாக்கம் வார்த்தைக்கு அதீதமாக அனுபவத்தில் இருக்கும்.ஆழமான காதல் பிரிவை சந்திக்கும் போதும் இவ்வண்ணம் நிகழும்.நம்பிக்கையானவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போதும் தாங்கமுடியாத குமுறல் அனுபம் தான்.இது போன்று நிஜமான வாழ்வை கொண்டவர்களுக்கு இந்த மாதிரி அனுபவங்கள் தவிர்க்கமுடியாதவை. நிஜமற்ற வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு இப்படியான அனுபவம் ஏற்பட சாத்தியமே இல்லை என்பதும் நிதர்சனம்.
கேள்வி என்னவென்றால்,இவை அனைத்தையும் அனுபவிப்பது மனம், துக்கப்படுவது ,வலியை அனுபவிப்பது எல்லாம் மனமே தான்.ஆனால் தொண்டை அடைப்பது ஏன்?,தொண்டை கவ்வுவது ஏன்?.இருதயம் கனப்பது ஏன்?.இருதயத்தில் சதா சொல்லமுடியாத துக்க அனுபவம் ஏன்?.ஏன் இருதயம் விம்முகின்றது?.மனம் மூளையில் இருக்கின்றதென்றால் நெஞ்சு ஏன் விம்முகின்றது?.ஏன் பிராணன் நெடுமூச்சாக வெளிவருகின்றது?.
No comments:
Post a Comment