Saturday, November 5, 2022

தன் முனைப்பு விடைபெற வேண்டும்

 தன் முனைப்பு விடைபெற வேண்டும்.


விரலை பிடித்துகொண்டே அடம்பிடிக்கும் குழந்தையிடம் இருந்து விடுவித்து கொள்ளாமல் இயைந்து இருப்பதுபோல இவ்வுலகில் இருந்து தன் முனைப்பு விடைபெற வேண்டும்.


அடுத்து பிறக்க மாட்டேன், இதோடு என் சோலி முடிஞ்சுது என நினைப்பவன் மரணத்தை பயப்படுகிறான்... வாழ்வு முடிவதில்லை, கர்மம் தொடரும் என உணர்ந்தவன் சத் கர்மங்களில் ஊறி நனைகிறான்,,, மரணத்தை வாழ்வின் ஒரு அங்கம் என கண்டு மனநிறைவோடு சந்தோஷமாக இறை சரணாகதியுடன் ஆனந்தமாக மரணத்தை கைகூப்பி வணங்குகின்றான், ஆம் மரணம் அவனுக்கு தேவை... அதற்க்கும் நன்றி செலுத்துகின்றான், அவன் பரிணாம மேம்படுதல் மரணத்துக்கு அப்பால் நிலைகொண்டுள்ளது என அவன் அறிந்திருக்கிறான். அவன் பிரணவத்தை மனதில் நிறுத்தி அக்கரைக்கு பிரயாணப்படுகிறான், அடுத்த கர்ம பூமிக்கு..அவனை வளப்படுத்திக்கொள்ள

 அவர்களுக்கு அவர்கள் முறை, நமுக்கு நமது முறை...முக்திக்கு பொருள் பல சம்பிரதாயங்களில் பலதாக சொல்லப்படுகிரது.முக்தி என்றால் என்ன என்பதையும் அதன் வகைவேறுபாடுகளையும் தரம் திரித்து ஞானகோவையில் விளக்கப்பட்டுள்ளது காணலாம்

ஓளி காண்பது தான் முக்தி என்பார் சிலர் உளர்,காயம் கனகமாவது தான் முக்தி என்பார் சிலர், இந்திரிய அடக்கம் முக்தி என்பார் சிலர், மனோலயம் முக்தி என்பார் சிலர்,பிரான அடக்கம் தான் முக்தி என்பார் சிலர், அட்டமா சித்தி கொளல் முக்தி என்பார் சிலர், பரதேவதை தரிசனம் முக்தி என்பார் சிலர், மரணமில்லாதிருத்தல் முக்தி என்பார் சிலர், தானம் முக்தி என்பார் சிலர், கர்மம் முடிவு முக்தி என்பார் சிலர்...இப்படி அனேகம் கலைஞானங்கள் அடைதல் முக்தி என்பாருமுளர். எது முக்தி என திரிதறிதல் விஞ்ஞானகலர் இயல்பு

இல்லாத ஆன்மாவுக்கு ஊட்டுகிற எண்ணமே பொய்..அடிக்கிற காற்றுக்கு ஆடுர தூசிக்கு யார் ஊட்டணும்

No comments:

Post a Comment