Friday, November 4, 2022

குருவின் வித்தை

 குருவின் வித்தை


ஐய்யா, நாம நிறைய்ய ஞானிமார்கலை பார்க்கிறோம், சீடர்கள் ஏராளம் இருக்கிரவங்களும் இருக்காங்க, சீடர்களையே கொள்ளாதவங்கலையும் பார்க்கிறோம். ஆயிரம் சீடர்கள் இருந்தாலும் ஆயிரம் பேரும் ஒரே குருவின் ஒரே வித்தையை ஒரே மாதிரி செய்தாலும் அவங்க ஆயிரம் பேரும் ஞானநிலையை அடைவது இல்லை என்பதையும் கவனிக்கிறோம். ஆனால் அது ஏன் என விசாரிப்பதில்லை தானே?. ஆம், நமுக்கு அதன் நிஜ செய்கை தெரியாது. நாம் எத்தனை பிறவிகலை எடுத்திருக்கிறோம், இனி எத்தனை பிறவிகளை பழைய வினை பயன்கலால் எடுக்க போகிறோம் என்பது தெரிந்தால் தான் ஒரு வித்தையின் முடிவும் தெரியும்.


ஒரு லிட்டர் நெய்யை ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பீங்கானில் ஊற்றினால் அது நிறைந்து தளும்பும் நிலையில் இருக்கும். ஆனால் அதே ஒரு லிட்டர் நெய்யை ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பீங்கானில் விட்டுகிட்டு நிறைந்து தளும்பும் என எதிர்பார்ப்பது எப்படி முட்டாள் தனமோ, அது போலத்தான் ஆயிரம் கோடி கால சென்மத்து வினைபயன் கொண்டவனிடம் ஒரு வித்தையும் நிறைப்பதற்க்கும், நூறு கோடி கால சென்மத்து வினை பயன் கொண்டவனிடத்தில் நிறைப்பதற்க்கும் உள்ள வித்யாசம்.


ஆகவே வித்தையின் விளைவு அவனின் வினை பயன் தொகுப்புகளின் பரிணாமத்தில் இருக்கின்றது. வித்தையானது எத்தனை கால வினைப்பயனை கரைக்கும் என்றோ எரிக்கும் என்றோ தெரியாமல் வித்தையினை செய்கின்றோம். வித்தைகளோ பல கோணங்களில் உள்ளவை. மெழுகுவர்த்தியின் பிரகாசமும் அதன் வியாப்தியும் அதன் வெப்ப அளவும் கொண்டவை முதல் சூரிய தேஜஸும் சூரிய வெப்ப அளவும் கொண்ட வித்தைகள் வரைக்கும் நிலுவையில் இருக்கின்ரன. ஒவ்வொன்றும் வினை புரியும் தன்மையும் வேறுபாடே. ஆனால் நமது வினை தொகுப்பின் ஆழம், எத்தனை பிறவிகளின் சுமையினை சுமந்து கொண்டு திரிகிறோம் என்பது நமுக்கு தெரியாது. இனி எத்தனை பிறவிகள் தேவை எனவும் நமுக்கு தெரியாது.


ஆகையினால் வித்தைகள் செய்வதினால் மட்டும் நாம் முன்னேற்றம் அடைந்து விட முடியாது. நம்முடைய வினை பயன் மூட்டைகளை அவிழ்த்து அவற்றை சாம்பலாக்குதலில் தான் விஷயம் இருக்கின்ரது, அல்லது வினை பயன் மூட்டைகளை களைந்து விடும் மர்மம் நாம் அறிந்திருக்க வேண்டும்.இவை ஒன்றும் செய்யாமல் வித்தையினை மட்டும் செய்து கொண்டு அங்கலாய்ப்பு கொள்வதினால் எந்த பிரயோஜனமும் நிகழபோவதில்லை.


இங்கு தான் இவற்றை கடந்து போக சூட்சுமமான நுணுக்கம் தேவை என புலப்படுகிரது. வாழ்க்கை என்பது ஒரு பருவ மாற்ற நிகழ்வுக்கு உட்பட்டது. சதா ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு தக்கபடி மாற்றம் நிகழ்கிறது என காண்கிறோம். பெண் ஏழு வயதிலும் ஆண் எட்டு வயதிலும் மாற்றத்தை அடைகிறான். இது ஒவ்வொரு மடங்காக மாற்றத்தை கொள்கின்றன அல்லவா?


இப்படியான பல மாற்றங்களை சீக்கிரம் கடந்து போக தகுந்த குறுக்கு வித்தை குருமார்கள் கைகொண்டிருப்பார்கள். ஷார்ட் கட் என நாம் சொல்லுவோமே, அப்படி சில சங்கதிகள்.அதுல ஒண்ணு தான் "வாசிமார்க்கம்.

No comments:

Post a Comment