...குரு ஸ்லோஹ ரஹஸ்யம்...
உண்மையின் மறை ரஹஸ்யம் எப்பொழுதும் வெளியரங்கமாக வைக்கப்பட்டிருக்காது. குரு சாட்சாத் பரப்பிரம்மம் எனும் மந்திரமும் அப்படியே ரஹஸ்யமானது.
அஞ்ஞானம் என்பது உண்மையில் இருப்பில் இல்லாதது. இருள் என்பது எப்படி இருப்பு வடிவம் இல்லாததோ அதுபோல அஞ்ஞானமும் இருப்பு நிலை அற்றது.ஆனால நிஜமாக இருப்பதை போன்று தோற்றப்புலனாகும்.
உண்மையில் வெளிச்சமான ஞானம் பிரகாசிக்கும் போது அஞ்ஞானமான இருள் இல்லாதது எனும் போதம் மலர்கின்றது.நிச்சயமாக இருள் என நினைத்திருந்த இடத்தில் அனாதியாகவே சுயம் பிரகாசமாக இருந்தது பிரம்மமே அன்றி வேறொன்றல்ல. அதை எக்காலத்திலும் இருள் மூடினதும் இல்லை.
குரு எனும் சொல்லில் வரும் கு என்பது உண்மையில் அஞ்ஞானம் இல்லை. அது சதா இருப்பு நிலை கொண்ட பிரம்மமே அன்றி வேறொன்றல்ல. ரு என்பது அதன் விளக்கம்.அதாவது பிரம்ம பிரகாசம் எனப்பொருள். கு என்பது அத்வைதப்பிரம்மம்.
குரு சாந்தாதத் பரப்பிரம்மம்
ReplyDelete