Monday, November 28, 2022

பிறவி

பிறவி ஸாதி அவ்வளவு ஒன்றும் நிசாரமானவன் அல்ல என அங்குள்ள அனைவருக்கும் தெரியும்,எல்லா ஞான கோட்பாடுகளும் அன்றைய சூழலில் நிலுவையில் இருந்த ஒன்று கூட விடாமல் ஸாதி ஹிரிதிஸ்தம் பண்ணியிருந்தான்,அவற்றை நன்றாக மனனம் செய்து உட்கருத்தை அறிந்திருந்தான். பூர்வஜன்ம புண்ணியம் என ஒன்று இருந்ததினால் தான் அவன் நிச்சயம் ஒரு பிக்குவாக முடிந்திருந்தது, அதுவும் சாட்சாத் பகவான் புத்தர்பிரான் உயிருடன் நடமாடிகொண்டிருக்கையிலேயே அவருடன் கூட வசித்து அவர் சொற்பொழிவை காதுகளால் பருகி புத்த தம்மத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடிந்தவனாயிருந்தான். பனிரெண்டாயிரத்து சொச்சம் பிக்குகள் புத்தரை சதா சூழ்ந்து இருந்தனர்,எல்லோரும் தம்மத்தை நன்றாக கிரகித்திருந்தனர், அதன் நுணுக்கங்களை விளங்கியிருந்தனர். மறுபிறவி மற்றும் அனத்தா கோட்பாடுகளின் ஆழம் ஒருபோதும் அவர்கள் மனதை அசைக்கவில்லை,சந்தேகத்துக்கு இடமளிக்காவண்ணம் அவர்கள் சோதாபன்னர்களாக இருந்தனர், அசஞ்சல சித்தர்கள். புத்தர் மஹா போதி ஞானம் அடைந்து கொள்ளும் முன்பாக பல பிறவிகளின் ஊடாக பிறந்து கர்மங்கலை துய்த்து மேல்நிலைக்கு வந்தவர், போதிசத்துவர்களாக பல பிரவி, கடைசியில் பூரன ஞானம் எய்தினார் என ஸாதி அறிந்திருந்தார். பல சமயங்களில் இதன் நுணுக்கம் குறித்து தன் உடனான பிக்குகளிடம் கலந்துரையாடல், வாதம் , அறிவு பரிமாற்றம் என நிகழ்த்தியிருந்தார் ஸாதி. ஆனால் ஒரு போதும் ஏனைய பிக்குக்கள் ஸாதியின் கருத்தை ஏற்கவில்லை, அவர்கள் எதிர்த்தனர். ஸாதிக்கு மறுபிறப்பின் கொள்கையை விளக்கமுற்பட்டனர் சகதோழர்கள்.ஆனால் ஸாதிக்கு நண்பர்கள் சொல்லுவது புரியவில்லை, எத்தனை முறை சொன்னாலும் ஸாதியை அவரின் கருத்தை அவரின் கொள்கையை எவரும் ஏற்கவில்லை. தற்போது புத்தர் பூரணஞானியாக இருக்கிறார், இதே புத்தர் தான் போதிசத்துவராக ஏராளம் முறை பிறந்திருக்கிறார் என்றார் ஸாதி.ஆனால் ஏனைய புத்த பிக்குகள் இல்லை என்ரார்கள். புத்தராக இந்த பிரவியில் வருவதற்க்கு அனேகம் பிறவிகள் பிறந்தது தான் உண்மை, ஆனால் பிறந்தது இதே புத்தர் அல்ல என்றார்கள் நண்பர்கள். ஆனால் ஸாதிக்கு இது எவ்வண்ணம் என புரியவில்லை. என்றும் மதியம் பிட்சை அருந்தியபின் புத்தர் மரத்தடியில் நீண்ட நேரம் சொற்பொழிவாற்றுவது வழக்கம். பிக்கு ஆனந்தர் விஷயத்தை புத்தரின் காதுக்கு கொண்டு சென்றார்.ஸாதி வரவழைக்கபட்டார். புத்தர் ஸாதியிடம் அவரின் புரிதலை வினவினார்,ஸாதி தன்னுடைய ஆழ்ந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தினார். புத்தர் மவுனமாக சிறிது நேரம் அமர்ந்திருந்தார். கூட்டத்தினரை நோக்கி முகமுயர்த்திய புத்தர் வினவினர், ‘..பிக்குகளே இதுவா புத்தரின் கோட்பாடு?’...”இல்லை” என்றனர் பிக்குக்கள் ஒருமித்த குரலில்.”ஸாதீ..” அன்புடன் அழைத்தார் புத்தர்.... ‘இங்கு ஒரு நபர் இல்லை... இங்கு பிறந்து இருக்கின்றவர் என ஒருவர் இல்லை. அனேகம் போதிசத்துவர்கள் பிறந்தது உண்மை...ஆனால் புத்தர் இதற்க்கு முன் பிறந்ததில்லை.... ஸாதிக்கு ஒன்றும் விலங்கவில்லை...கடைசி வரைக்கு இந்த கோட்பாட்டை விலங்கி கொள்ளாமலேயே...புத்த சங்கத்தை விட்டு விலகி போனார்...அவருக்கு புரியவேயில்லை இதன் நுணுக்கம்

No comments:

Post a Comment