Wednesday, November 30, 2022

அவதாரம் என்பதன் மெய்ரகசியம்

அவதாரம் என்பதன் மெய்ரகசியம் பிலிப்பு என்பவன் இயேசுவை நோக்கி ஆண்டவரே உம்முடைய பிதாவை காட்டித்தாரும் என கேட்டான்.அதற்க்கு இயேசு,பிலிப்புவே இத்தனை காலம் என்கூட இருந்தும் என்னை அறியாமல் இருக்கின்றாயா .”மெய்யாக மெய்யாக என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான்.நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்” என்றார். சனாதன தர்ம கோட்பாடுகளில் மிக ரகசியம் பொதிந்தது இந்த அவதார தத்துவம்.அதாவது கடவுளே மனிதனாக வெளிப்பட்டு தோன்றி மக்களிடம் வசிப்பது தான் அவதாரம் . இந்த தத்துவ போத உண்மை ரகசியத்தினை உணர்ந்து தெளிந்து பரிபூரணமானவர்களையே அவதாரபுருஷர்கள் என்கிறோம். உண்மையில் இவ்வுலகத்தில் நடமாடும் அனைத்து மனிதகோலங்களும் இறை அவதாரங்களே தான் எனும் ஆழ்ந்த அறிவு மிளிர சடபோதம் கெட்டு அவதாரபோதம் உதயம் செய்யும்.அவர்கள் அவதாரபுருஷர்கள் ஆக அறியபடுகின்றனர். ‘நான்..நான்” என கொண்டாடி அபிமானிக்கும் இந்த உடல் உயிர் இரண்டும் ”‘நான் அல்ல”. “நான் அல்ல” என மறுக்கும் பொருளாக இருக்கும் இவை இரண்டும் மெய்யாகவே மெய்யாகவே சிவசக்தி சொரூபமான மெய்மை கோலம். ஆதி அனாதியான சொரூபம். அறிவு கெட்டு “நான்” என சொல்கிறோம். இருப்பது “அச்சொரூபமே”. என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான்., நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்.ஆமென்

No comments:

Post a Comment