Tuesday, November 29, 2022

நடு நாடியும் நடு மூக்கும்

நடு நாடியும் நடு மூக்கும் ‘நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை தேட்டமுமில்லை சிவனவனாமே’ ‘நயனமிரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர் வெழா வாயுவை உள்ளே அடக்கி துயரற நாடியே தூங்க வல்லார்க்கு பயனிது காயம் பயமில்லை தானே’.. இவ்வாறாக திருமந்திரமும் .. “விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்; விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம் ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன் உலகமெலாந் தானவ துண்மை யாகும்; நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக் கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம் கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே. 26: பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம் தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு; சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்; திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்; காப்பதற்கு நடுநாடி யூடே சென்று கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே. 27: கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம் கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்; விண்ணான பெருவெளிக்கு ளீன மானால் விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்; ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்; அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்? அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;” இவ்வாறாக புசுண்டர் பிரானும் .... சொல்லும் நுண்ணிய நுணுக்கம் என்பது தான் நடுமூக்கும் நடு நாடியும் அல்லவா? இரண்டு கண்களும் மூக்கும் சரியாக செங்குத்து கோணத்தில் சந்திக்கும் இடமே சுழுமுனை எனும் ‘பாலம்’.இந்த பாலத்தினுள் தான் ‘க’ எனும் பரமான்மா உறைவிடம்.அதனால் இது கபாலம் என்றாயிற்று.’முச்சந்தி’ என்பதும் இவ்விடம் தான். மனமானது இவ்விடத்தில் நிலை கொள்ள அச்சணமே வலது இடது நாசிகளின் ஊடான இயக்கம் மேல்முகப்படும் என்பது அனுபவ உண்மை.. கொஞ்சம் பக்கத்துல வாசி வாசிக்க வந்திருக்கோம்ண்ணு தோணுது...அப்புறம் பார்ப்போம் வாசிக்கறது எப்படீண்ணு

No comments:

Post a Comment