Tuesday, November 29, 2022
சுவாச கலை
சுவாச கலை
Hseija Ed Rian: நாசிக்கு வெளியே மூச்சு ஓடாதவர்?
x
Hseija Ed Rian: நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத ஒருவரையாவது உங்க கண்ணால பாத்திருக்கீங்களா ஐயா?
Hseija Ed Rian: மூச்சு ஆடாம அவர் என்கிட்ட பேசணும்...அதுக்கு தான்
Hseija Ed Rian: அதுக்காக அடக்கமாகி சமாதியிலே போயி மூச்சு அடங்கினவரை காட்டி இவருக்கு மூச்சு ஆடலைணு சொல்லகூடாது
Hseija Ed Rian: பைபிளிலே இருக்கிறது என்னண்ணா, நாசியில் முச்சு உள்ளவனை நம்பாதேண்ணு தான்....அப்படீண்ணா அவன் பேசறதை நம்பாதேண்ணு அர்த்தம்...அதுக்காக தான் மூச்சு ஆடாதவன் சொல்றத நம்பலாம் என்கிறேன்...மூச்சு ஆடாதவர் என்கிட்ட பேசணும் என்கிறேன்....தப்பா எடுத்துக்கவேணாம்
Hseija Ed Rian: ஆதிமெய் உதய பூரணத்தில் அப்படி எதாவது சொல்லபட்டிருக்கா ஐயா?...மூச்சு துண்டாடபடுவது நிக்குணு சொல்லி இருக்கு அப்படித்தானே..அப்ப எப்படி பேச்சு வரும் ஐயா?... பேச்சும் மூச்சும் சேர்ந்தல்லவா இருக்கு?
Hseija Ed Rian: மூச்சு “துண்டாடபடுவது”நிற்க்கும் என சொல்லப்பட்டிருப்பதை ...இப்போதைய ஞானிகள் மூச்சு “ஆடாத’என மாற்றிவிட்டனர்..... என்ன பாவம் இது?..அனியாயம் தான்
விஜயகுமார் சு: பிரணாயாமத்தில் எட்டுபங்கு காற்றுமட்டுமே நின்று நான்கு பங்கு துண்டாடப்படுகிறது என்று படித்திருக்கிறேன்
விஜயகுமார் சு: இந்த நாலு கலை பாழ் போகாமல் உள்ளடக்குவதே வித்தை என்றும் படித்திருக்கிறேன்
Hseija Ed Rian: விஜயகுமார்...சொல்வது உண்மை தான்...அது காற்று வித்தை...பிராண வித்தை கலை வித்தை ...இப்படி வித்தைகள் எண்ணற்ரு கிடக்கிரதே...அதுல இது எது ஐயா?
Hseija Ed Rian: ஒரு ராஜ நாகத்தை சடாரென மிக அருகில் பார்த்த உடனேயே....அக்கணத்தில் மூச்சானது படாரென வெடித்து கிளம்பும்...தாறுமாறாக ஓடும்...வியர்வை கொட்டி வடியும்...கண்,கால் மெய் தெரியாது ..காது பஞ்சடைந்து போகும்...இது எதனால்
நடக்கிறது?...நாகத்தைற்க்கும் மூச்சுக்கும் தொடர்பே இல்லை அல்லவா?...பின் எப்படி மூச்சு வெடிக்கிறது?..ஐயா?
விஜயகுமார் சு: அதீத பயம்
Hseija Ed Rian: மூச்சுக்கா அதீத பயம்?
விஜயகுமார் சு: மனம் பயத்திற்கு ஆட்படுகிறது.அதன் விழைவே
Hseija Ed Rian: மனம் பயத்திற்க்கு ஆட்படும் போது வெடிக்கும் எனில்....மனம் கோவத்திற்க்கு ஆட்படும் போது துடிக்கும் எனில் ...மனம் அருளுக்கு ஆட்படும் போது மட்டும் ஏன் அடங்காது?...அதுக்கு பிராணாயாமம் தான் வேணுமா என்ன?
Hseija Ed Rian: பிரானாயாமத்தைவிட மூச்சு துண்டாடபடுவதை தவிற்க்க அற்புதமான மாத்திரை சன்மார்க்கத்தில் இருக்கிறதல்லவா/
விஜயகுமார் சு: இந்த நான்கு விரட்கடை விரையமாக மாறுவது என்னவாகும்?
Hseija Ed Rian: நான்கு விரற்கடை என்பது எது?
விஜயகுமார் சு: தோத்திரம் செய்யும் போது சுவாசம் நடக்காதா ஐயா?
Hseija Ed Rian: உள்மூச்சா ...வெளி மூச்சா விரயமாகிறது என்பதை கவனிக்கவும்...
விஜயகுமார் சு: வெளிமூச்சு அல்லவா விரையமாகும்
Hseija Ed Rian: இந்த நான்கு விரற்கடை எதுவென்பதை அறிந்து ..அதை விசாரம் செய்தால் தான் விஷயம் புரியும்
Hseija Ed Rian: ஆமா...வெளிமூச்சு தான் விரயமாகும்...அது எங்கிருந்து விரயமாகும்? எந்த பகுதியிலிருந்து?
விஜயகுமார் சு: இந்த நான்கு என்பது சந்திர கலையாக குறிக்கப்படும்.பதியின் கலை நாலாகும் பனிரென்டை பற்றிகொண்டு ரவியும்மதியும் ஒன்றாகி சுழி அகரமாய் தோணும்
Hseija Ed Rian: மொத்தம் 12 அங்குலம் உண்டு தானே?..அது எங்கிருந்து அளக்கப்படுகிறது?
விஜயகுமார் சு: அது எரிக்கப்பெற்று சக்தியாக வெளியேறும்
Hseija Ed Rian: பதியின் கலை தான் நான்கு..சரி தான்...பதியென்பது யாது?..
விஜயகுமார் சு: நாசியிலிருந்து
Hseija Ed Rian: இல்லை
விஜயகுமார் சு: பதி என்பது பெண்ணாக உருவகப்படுத்தப்படும் சந்திரன்
விஜயகுமார் சு: இல்லை......பின் எங்கிருந்து ஐயா?
Hseija Ed Rian: பதி புருவத்தடி முனைகீழ் அண்ணாகென்னும் பவழ நிரம் போன்றிருக்கும் திரிகோணந்தாந் துதி பெறு சிங்குவை உபஸ்த்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனமாச்சு
Hseija Ed Rian: புருவமத்திக்கும் அண்ணக்கிற்க்கும் நான்கு விரற்கடை அளவு....இது மேலேறாது இங்கிருந்து வெளிப்படும், புருவமத்தியில் இருந்து கீழ் நோக்கி சலிக்கும் வாயுவுக்கு சந்திரன் எனவும் அபானன் எனவும் பெயர். இது 12 அங்குலம் இருக்கும்...அதாவது உள் மூச்சு. அது போல வெளிப்படும் மூச்சு பிரானன் எனும் சூரியன்...12 கலையில் நாலு கலை வெளியேறும்.
Hseija Ed Rian: கீழ்முகமானது சந்திரன்,மேல் முகமானது சூரியன். .இத மேல்முகமான சூரியனில் கலை நாலை சோர்ந்து போகாது மதிமண்டலத்தில் செலுத்த அமிர்தமாகும்.
Hseija Ed Rian: அண்ணாகில் இருந்து பிரானனானது இரு மாறலாய் வெளியேறும்...அதை வெளியேறாது அண்ணாக்கினுள் மேல் முகமாக செலுத்த வேண்டும்...கண்டு கண்டு மனம் தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டிவையும் சேர்ந்து போமே...என அகத்தியர் சொல்லுவது இதையே
விஜயகுமார் சு: செலுத்தும் முறை ஐயா?
Hseija Ed Rian: செலுத்தும் முறை உண்டு...அதை வாத கற்ப்பம் என்பர்
விஜயகுமார் சு: ஆம் அந்த இடம்தான் வேண்டும்.அதை செலுத்தும் முறையே என் தேடல்
Hseija Ed Rian: பிறந்த குழந்தைக்கு இந்த வித்தை தெரியும்....அது இயற்கையாக உள்ல வித்தையே....நாம் அதை மறந்து விட்டோம்...இப்போது அலைகின்றோம்...
Hseija Ed Rian: ஊதுகின்ற ஊதறிந்தால் அவனே சித்தன் -உத்தமனே பதினாறும் பதியேயாகும்- வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிராகும் மார்க்கம் கண்டு-சோதி பர்பூரனம் இவை மூன்றும் தூங்காமல் தூங்கியே காக்கும் போது -ஆதியென்ற பராபருனும் பரையும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே....அகத்தியர் ஞானம்
விஜயகுமார் சு: இதற்கு விளக்கம் வேண்டும் ஐயா
Hseija Ed Rian: குகை என்பது அண்ணாக்கின் வட்டம்...துருத்தி என்பது வயறு...காற்று மூச்சு...ரசம் கெந்தகம் நாத விந்துக்கள்...புடம் போடுவது என்பது ஊதி அக்கினியேற்றுதல்....அப்போது கற்ப்பம் ரெடி
விஜயகுமார் சு: இதற்கு இடம்பொருள்ஏவல. உண்டா ஐயா?
Hseija Ed Rian: சதா இருப்பதே சகஜம் என பெயர். இது சகஜ வித்தை ...எப்போதும் செய்யலாம்...
Hseija Ed Rian: எல்லா மதத்திலும் இது உண்டு...மெய்வழியிலும் இது உண்டு
Hseija Ed Rian: ரூஹூவென இஸ்லாமில் இருக்கிறது. ஐந்து விதமான ரூஹூக்கல் உண்டு. அதன் யாது நிலைகல் உண்டு.
Hseija Ed Rian: அறிந்தவர்கள் இருக்கிறார்கள்...இது தான் நாசிக்கு வெளியே மூச்சு ஆடாத தவ நிலை...கலை பிரிந்து நாசிக்கு வெளியே ஆடாமல் அண்ணாக்கிற்க்கு மேலெறும்
விஜயகுமார் சு: நன்றி ஐயா கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
Muthu Kumar: ஐயா தங்கள் ஞானத்தை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Hseija Ed Rian: மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...
Hseija Ed Rian: இப்படி அகார ஜீவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.
Hseija Ed Rian: அறிவார் அறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்....இதுவும் பெருமானார் சொன்னதே...
நன்றி
ரியான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment