Monday, November 28, 2022
ஆன்மீகம் ஒரு பொழுதுபோக்கா!
ஆன்மீகம் ஒரு பொழுதுபோக்கா!
இச்சைக்கிருந்தும் இறையாசை இன்றேல் பச்சைக்கிருந்தும் பசிதாகம் வேண்டேல் உச்சிக்கிருந்தும் ஒருபோது உண்ணல் பச்சைக்கிளியே பரந்தாமன் வாராரோ.....
சாதாரன மக்கள் ஆன்மீகம் என்பது சும்மா ஒரு பொழுதுபோக்காக ஆன்மார்த்தமாக வைத்துகொள்வது கிடையாது, எல்லாம் தெரிந்துகொள்வது அவ்வளவுதான், அல்லாது இந்த சென்மசாபல்யம் கிடைக்கவேண்டும் எனும் ஆழ்ந்த உணர்வு தோன்றுவது கிடையாது, ஆழத்தின் ஆழத்தில் பீறிட்டெழும் வெடிப்பு தான் ஆன்மீகத்தின் உச்சத்தை தொடும், அடையத்துடிக்கும் ஏகாக்கிரதை, பந்தங்களின் மேல் விரக்தி, இது இரண்டும் சேர்ந்ததுதான் பக்தி எனப்படுகின்றது.சும்மா வெறும்பாட்டுக்கு நானும் ஆன்மீகவாதி தான்ணு இருக்கிற பலபேரை தெரியும், அதன் விளைவாக எழுந்தபாடல் இது.
இதன் விளக்கம் வருமாறு:
”இச்சைக்கு என ஆன்மீகத்தை கொண்டு நடப்பர், ஆனால் இறை ஆசை என்பது ஆழமாக இருக்காது, அன்பு பக்தி பெருக்கெடுத்து ஆற்றாத புண்ணைப்போன்று சதா ஆழ்மனதில் படர்ந்து ஒருவித ஏக்கத்தையும் துன்பத்தையும் வருத்தத்தையும் தராமல் இருப்பின்,பச்சையான துளசி இலையை பறித்து தின்று கொண்டு விரதம் இருப்பவர்கள் பலர்,அதுபோல பசி தாகத்தத்தை அடக்கி விரதம் இருப்பவர்கள் பலர், உச்சிவேளையில் மட்டும் ஒருபோது சிறிது உணவு மட்டும் கொண்டு விரதம் இருப்பவர்கள் பலர், இவ்வண்ணமான விரதங்களை கொண்டிருப்பவர்கள் பால் கருணைகொண்டு பச்சைமால் அருகில் உறையும் பச்சைகிளியான ஸ்ரீதேவியே பரந்தாமன் வருவாரோ?” என கேள்வியாக கேட்க்கபட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment