Monday, November 28, 2022
நாம ரூப விவர்ஜிதம் பிரம்மம் நிரஞ்ஞன நிராகாரம்
நாம ரூப விவர்ஜிதம் பிரம்மம் நிரஞ்ஞன நிராகாரம்
இங்கு நாமம் என சொல்லபடாத வஸ்து ஒன்றில்லை,பிரபஞ்சத்து வஸ்துக்கள் அனைத்தும் நாமங்களால் பகுக்கபட்டிருக்கின்றன. உண்மையில் பிரம்மம் என சொல்லபடுவதும் கூட வியவகார நிமித்தமாக சொல்லபட்டிருக்கின்றதே.
நாம் அனைவரும் நாமத்தால் கட்டபட்டிருக்கின்றோம்.பிறந்த குழந்தைக்கு முதல் சடங்கு நாமகரணம் தான்.அது முதல் நம்மோடு ஒட்டிகொண்டிருக்கின்றது நாமம்.இவ்வண்ணம் நாமமும் நம் ரூபமும் ‘நான்’ என கொண்டு திரிகிறோம்.
ஆழ்ந்த தூக்கத்தில் கூட நம் பிரக்ஞையில் ஆழ்ந்து ததாத்மியம் கொண்டு திகழ்வது தான் இந்த நாமம்..ஜாக்ரத்தில் நம் தூலசரீரம் தான் ‘நான்’ என சதா நினைப்பில் பிரக்ஞையில் வேரூன்றி திகழ்கின்றது. சூட்சுமத்தில் நாமம் சூட்சும சரீரமாக திகழ்கின்றது.எங்கு எந்த காலத்தில் அழைத்தாலும் அழைப்பது ‘என் நாமம்’ என பிரக்ஞை கொண்டு திகழ்கின்றது.
ஒரு புறம் தூலசரீரம் தான் ‘நான்’ என்பது ,மறுபுறம் ‘என் நாமம்’ என ஒன்று. இவை இரண்டின் மத்தியில் பிரம்மம் திகழ்கின்றது.’நாம ருப விவர்ஜிதம்’ என்பது இவற்றை விட்டு விட்டது என பொருள்.’நிரஞ்ஞனம் ‘ என்பது பற்றற்றது என பொருள்.இங்கே பற்றற்றது என்பது ‘நாமம் அற்றது’ என பொருள் கொள்க. நிராகாரம் என்பது உடலற்றது அல்லது ரூபமற்றது என பொருள் கொள்க.இவற்றின் மத்தியில் “பிரம்மம்” எனும் பதம் வைக்கபட்டுள்ளது.
முன் சொல்லபட்ட ‘நாமரூபவும்’ பின் சொல்லபட்ட நிரஞ்ஞன நிராகாரம் என்பதும் ஒருபொருளின் இருபுறங்கள், அவத்தைகள் மட்டுமே.
தூலசரீரம் நிலையற்றது, இந்த நிலையற்ற தூலத்தில் நாமம் நிலையாக இருக்கின்றது என மயங்குகின்றோம். நாமம் குழந்தையாக இருக்கும் போதும் ஒன்று தான், படுகிழவனாகும் போதும் அதே நாமம் தான்.இது மயக்கம் ஒன்று.
இரண்டாவது மயக்கம்தூலம் ஒருபோதும் ஒரே போன்ற தூலம் அல்ல.நிமிட நேரத்துக்கு முன் இருந்த தூலம் அல்ல நிமிட நேரத்துக்கு பின் இருக்கும் தூலம். கன நேரத்துக்கு கனம் தூல உடல் மாறுகின்றது, செல்கள் மாறுகின்றன, இரத்தம் தசை நரம்பு தோல் என அனைத்தும் புதியவைகளாக மாறிகொண்டேயிருக்கின்றது. ஆனால் இதை ஆழ்ந்து கவனிக்காமல் அன்றும் இன்றும் தூலம் நிலையானது, ‘நான் நிலையானவன்’ என கொண்டு திரிகின்றோம்.
இவை இரண்டும் மயக்கம்...பிரம்மம் இல்லாதது..பிரம்மம் அல்லாதது...இவை இரண்டும் அற்றது பிரம்மம்.அதாவது அத்வைதம் நாமரூபம் பரம்.பராபரம்....விக்ஞானமயம்.
=நிமிஷ நாமி
Hseija Ed Rian நிமிஷ நாமி என்னுடைய புனை பெயர்...அப்பப்ப புது புது பெயரை மாற்றும் யுக்தி.ரமணர் புத்தர் எனும் நாமங்கல் சுட்டும் பொருள் தான் மெய்பொருள். நம்மில் இயங்கும் ஜீவஸ்வரூபம்...அக்ஷர ரூபம்..சூட்சும தேகம்
Hseija Ed Rian நிமிஷ நாமி என்னுடைய புனை பெயர்...அப்பப்ப புது புது பெயரை மாற்றும் யுக்தி.ரமணர் புத்தர் எனும் நாமங்கல் சுட்டும் பொருள் தான் மெய்பொருள். நம்மில் இயங்கும் ஜீவஸ்வரூபம்...அக்ஷர ரூபம்..சூட்சும தேகம்.
Hseija Ed Rian தூல சரீரம் ஒரு முனை, சூட்சும தேகம் மறு முனை. இதன் மத்யம் காரன சரீரம். சாதாரணமாக நாம் ஸ்தூலம் ,அடுத்து அதனுள் சூட்சுமம், அதை கடந்து காரன தேகம் என சொல்வோம். ஆனால் அதன் புரிதல் வேறு. காரனமானது மத்திபமானது.இரு முனையும் அற்றது..இரண்டற்றது.
Hseija Ed Rian ஞதுரு ஒரு முனை, ஞேயம் மறுமுனை, ஞானம் மத்தியமானது.இரண்டுக்கும் நடுவே உலாவுவது...உறைவது..இதையே ஹ்ருதயம் என்பர்.ஹ்ருதயம் என்பதன் தாத்பரியமாவது மத்யம் என சொல்லுவது தான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment