Tuesday, November 29, 2022

சாவு பொய்யாச்சே என்பது மெய்

==சாவு பொய்யாச்சே என்பது மெய்==== மனுஷன் நரனாக பிறந்து அறிவு மாணிக்கத்தை பெற்று தேவராகணும் எங்கிற யோசனை அருமை தான் ஐய்யனே, ஆயினும் சற்று சந்தேக நிவர்த்தி வேணுங்கிறேன், தெளிவுக்குத்தான்... சாதி மனுக்குலம் எல்லாம் ஜீவன் என்னவென கண்டறிந்து, அந்த அறிவின் தெளிவினால் ஜென்ம சாபல்ய பலன் அடையட்டும் என்பதும் அருமை தானுங்கோ... ஆனால் அழியகூடிய தூலத்தை விடுத்து அழியா சுவர்ண தேகம் பெற்று எக்காலத்துக்கும் மரணமில்லா பெருவாழ்வு வாழ எத்தனிப்பதும் அருமை தானுங்கோ... தன்னில் தனியனாகிய வஜ்ஜிர மாணிக்கத்தை கைபோட்டு அதில் சென்று உட்புகுந்து, அந்த ஜீவமாளிகையில் பரகாய பிரவேசம் பண்ணுவதும் அருமை தானுங்கோ... ஆனால் நிச்சயமாக அறியவேண்டிய மற்றொரு கேள்விக்கு பதில் கூட தெரியவேணுமுங்கோ... ”உன் ஜீவனை நீ உன் வாழ்நாளில் ஒருமுறையேனும் திரும்பி பாராவிட்டால், அது உன்னை தூக்கி போட்டு விட்டு அலகை எனும் பிசாசிடம் உன்னை ஒப்படைத்து விடும் என்கின்றார்களே அது எப்படி?.. உன்னுடைய ஜீவனை அலகை பிடித்து கொண்டு எக்கோடி காலத்துக்கும் நரக வாதனைக்கே ஆளாக்குவான் என்கிறார்களே, அது எப்படி?.. உண்மையில் உன் ஜீவனை அலகை பிடித்துகொள்ளுவான் என்பது நிச்சயமான உண்மை தானா என சற்று சிந்தித்து பதில் சொல் செல்வமே!!. ....”நீ” உன் ஜீவனை பாராமல் அசட்டை செய்தால் உன் ஜீவனை அலகை கொண்டு போய்விடுவான் என்கிறார்களே, அப்போது அதே ஜீவனில் ”நீ” போய் குடியிருந்தால் மட்டும் அலகை உன் ஜீவனை கொண்டு போகாமல் உன்னை நித்திய ஜீவமாளிகையில் வைத்திருப்பான் என்கிறது என்ன அறிவு? ”நீ” ஜீவனோடு ஐக்கியமானால் உன்னை அலகை விட்டு விலகிவிடுவானாம், ஆனால் ஜீவனோடு ”நீ” சேராவிட்டால் ஜீவனை அலகை கொண்டு சென்றுவிடுவானாம், அது எப்படி? ஜீவனை விட ‘நீ’ பெரியவனோ?..உண்மையில் அலகை கொண்டு போவது யாரை-உன்னையா அல்லது உன் ஜீவனையா Hseija Ed Rian சொப்பனத்தில் வந்த குரு சொன்ன உபதேசம் சேவலில்லா பெட்டை முட்டையிட்டதொக்கும்(பீரப்பா

No comments:

Post a Comment