Tuesday, November 29, 2022

வாலையை பூசிக்க சித்தனாவாய்

Monday, August 6, 2018 வாலையை பூசிக்க சித்தனாவாய் கொங்கணர் அவர் பாட்டுக்கு சொல்லிகிட்டு போயிட்டார்,வாலையை பூசிக்க யாரும் பதினெண் சித்தராவர்.பதினெட்ட்டு மெய்யும் உணர்பவர் அல்லவா பதினெண் சித்தர். வாலை என்றால் பத்து வயது பருவ பெண்பிள்ளையை நாம் எல்லோரும் சொல்லிகிட்டு இருக்கோம். ஆனால் என்றும் பத்து வயதுடையவளாய் விலங்கும் தமிழை மறந்துவிடுகிறோம். தமிழ் தாயே தான் வாலை தெய்வம்,சித்தர்களுக்கு தாயான தயாபரம். பதினெட்டு அங்கங்களுடன் திகழும் சொரூபம் அவள் திருமேனி,அதுவெ பதினெண் மெய்.அதில் பனிரெண்டு உயிர்நிலை இயக்கம்.இவை ஒருங்கே அலங்கிருதமாய் திகழும் பொன்மேனி கிரணோதயம். ”அ-ஆ-னா....ஆ-வன்.னா” என தொடங்கி ‘னெள-வன் -னா” என முடியும் மூவெழுத்து மும்மொழி சொருபம் அவள் அங்க துலக்கம்.வாலையின் அட்சரம் மூன்றாகும் அதை வாய் கொண்ட்டு சொல்பவர் யார் காணும் என கொங்கணர் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பாடி போகின்றார்.....வாயுள்ள பிள்ளை பிழைக்கும்..அல்லவா?

No comments:

Post a Comment