Tuesday, November 29, 2022
மரணம் என்பது என்ன - தொடர்ச்சி
மரணம் என்பது என்ன - தொடர்ச்சி
உலகம் ஆதியில் வெறுமனே தான் இருந்தது... ஆக்ஸிஜனும் இல்லை கார்பண்டை ஆக்ஸைடும்... நைட்ரஜன் மற்றும் அனேகம் வாயுக்கள் இருந்தன... தாவரங்கள் தான் ஆதி உயிர்.. அவை கார்பன்டை ஆக்சைடை கொண்டு வாயு மண்டலத்தில் ஆக்ஸிஜன் பெருக்கி தெவையான அளவு ஆக்சிஜன் பெருகி விட்ட பின்னரே ஏனைய உயிர் வகைகள் தோன்ற ஆரம்பித்தன... தாவரங்கள் தாம் மழையையும் உருவாக்கின...
மனித கருவை படைத்த இறைவன் முன்னரே தாவரங்களை தயவாக கொண்டு மனித கரு வளரவே அமைத்தான்.... தாவரங்கள் இல்லையெனில் எந்த உயிர் இனங்களும் இபூமுகத்தில் இல்லை... மழை இல்லை ஆக்ஸிஜன் இல்லை.... சின்ன அனு உயிர்கள் கூட இருக்காது...
நாம் உயிருடன் இருக்கின்றோம், நமக்கு ஆதாரமானதுவோ நமது பிதா மாதாக்களின் கருசுக்கிலங்கள் இருக்கின்றன.. அவை இல்லையெனில் நாம் இல்லை.. அது போல நமது பிள்ளைகளுக்கு ஆணும் பெண்ணுமாகிய நாம் ஆதாரமாக இருக்கின்றோம்... அப்படி உயிர்கொடியானது ஆதிமுதல் படர்ந்து விரிந்து பூத்து காய்த்துகொண்டே இருக்கின்றது... ஆனால் அந்த கொடியினை காண்பவர் எவரோ அவன் சித்தன்.
உயிர்கொடியானது தான் மட்டும் தன்னுக்குளே வளர்ந்து பூத்து காய்க்கவேண்டுமெனில் ஆதிமுதல் பயிர்கொடியும் உயிர்கொடியுடன் கூடவே வளர்ந்து கொண்டே இருந்திருக்கவேண்டும்... பயிர்கொடி இல்லையெனில் இந்த உலகில் உயிர்கொடியானது இந்த அளவுக்கு படர்ந்து பூத்து காய்த்து வளர்ந்து இருக்காது... உயிர்கொடி மடிந்து போயிருக்கும்... ஆக உயிர்கொடியானது உயிருடன் எக்காலமும் வாழ்ந்திருக்கவே பயிர்கொடியானதும் கூடவே பூத்து காய்த்து வளர்ந்துகொண்டிருக்கிறது... நமக்காக நமது சந்ததிக்காக அவை நம்முடன் வளர்ந்து பூத்து காய்த்து நமக்கு உணவாகி நமக்கு வாழ்வாதரமாகி செழிப்பிக்கின்றது... அந்த பயிர்கொடியும் நம்மை போன்றே ஆதி முதல் அனாதி இறைவனின் சூட்சுமத்தை சுமந்துகொண்டு நம்முடன் வாழ்கின்றது... ஆனால் நாம் அதை அறியாமலிருக்கின்றோம்...
ஜீவ விருட்சத்தின் சூட்சுமங்களை பேசிகொண்டிருக்கிறோம்.. இதை கேட்டவர் கண்டவர் பாக்கியவான்கள் என எழுதபட்டிருந்தது அனாதி காலம் முன்பு... அழிந்து போன அறிவுகள் உயிர்பெறும் காலம் வர இறைவனை போற்றுவோமாக... செத்தவைகள் எல்லாம் உயிர்பெறுமாகட்டும்... செத்தவர்கள் கூடவே உயிர் பெற்று எழும்பட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment