Tuesday, November 29, 2022

சங்கநாதம்

இதை சித்தர்கள் சங்கநாதம் என கூறுகிறார்கள். இதைத் தாண்டி குரு உபதேசப்படி இவ்விரு சங்காலும் உள்ளிளுத்த சுவாசத்தை அடக்கி பின் சிலேத்துமநாடி எனப்படும் நடு நாடியாம் சூட்சம நாடி வழியாக ஏற்றுவதைத் தாரை ஊதல் என சித்தர்கள் கூறுகின்றனர். இதற்கு சித்தர் ரகசிய சூட்சம பஞ்சாட்சர மந்திரம் ,எந்திரம்,தந்திரம் மூன்றும் ஒருசேர செயல்பட வேண்டும். அவ்வாறு தாரை ஊத வல்லவர்கள் சிவசக்தி சகிதமாய் சிவமாகவே ஆவார். இதை அறியாமலையே கோடான கோடி மாந்தர்கள் செத்து செத்து பிறக்கின்றனர் என்கிறார் சிவவாக்கியர். நாமென்ற ஒன்று நம் எண்ணங்களே. அது மனதோடு சம்பந்தப் பட்டது. அது 96 தத்துவங்களில் 43தத்துவங்களை தன்னகத்தே கொண்டு பயணிக்கும். பிறகு நானென்ற மனமானது சுக்கல் சுக்கலாகி காணாமல் போய் தானாகி நிற்பான் சிவம். “ஊனுக்குள் நீ நின்று உலவினது பாராமல் நானென்று நலமிழந்தேன் பூரணமே ..” “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாகி நின்றது தற்பரமே…” உயிரை உடலாகக் கொண்டு இவ்வாண்மாவைப் பக்குவ நெறி படுத்த பலகோடி அணுக்களான உடலை தந்து ஒவ்வொரு அணுவிலும் சிவமே நிறைந்து நாம் என்ற ஆணவம் தந்து மனம் எனும் நம்மை கருவியாகக் கொண்டு இவ்வாண்மாக்களை மேல் நெறிப் படுத்துகிறார். இதில் தெளியும் நானென்ற மனம் 43 த்துவங்களைக் கடக்கும் போது காணாமல் போய் அனைத்தும் சிவமாகவே ஆகிறது. சிவசிவ சிவமே சிவசிவ சிவ செம்பொன் … சங்கிரண்டு தாரையொன்று சன்னல் பின்னலாகையால் மங்கி மாழுதே உலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரெண்டையும் தவிர்ந்து தாரையூத வல்லீரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழலாகுமே… நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை நினைப்புமாய் மறைப்புமாய் நின்ற மாயை மாயையே அனைத்துமாய் அண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே

No comments:

Post a Comment