Wednesday, November 30, 2022
கடவுள்-அல்லா-சிவன் -விஷ்ணு இவர்களுக்கு மேல் யார்?
கடவுள்-அல்லா-சிவன் -விஷ்ணு இவர்களுக்கு மேல் யார்? - Part 1
சேலம் வாசவி ஹாலில் அந்த நிறைந்த சபையில், ””எம்மைத் தவிர உனக்கு வேறு நாதியே இல்லை-எம் கை விட்டால் எமன் கையில் தான் நீ மாட்டுவாய்”” என்று பேசி விட்டோமே என்று இங்கு வந்த பின் தவநேரத்தில் ஒவ்வொரு தெய்வ எல்லைகளாக இருந்து இருந்து கவனித்து பார்த்தோம்.கடவுள்-சிவம்-அல்லா-மகாவிஷ்ணு என்று சொல்லுகிறார்களே, அந்த ஆட்சிபீட எல்லைகள், அவர்களின் பவிசுகள், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக ஏறி ஏறி நின்று பார்த்தோம்.அந்த எல்லைகளும் கடந்து அதற்க்கு மேலும் ஏறி ”ஏகராசிகுவியல்” என்று சொல்ல பெறுகின்ற அந்த அதிமகோன்னத எல்லையில் நின்று பார்த்தோம். அங்கு பார்க்கையில் எம்மைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.ஆகவே,நாம் அப்படி சொன்னது சரிதான் என்று தீர்க்கமாக கண்டோம்.-------மெய்வழி என்பதுவும் அந்த பதநிலையில் இருப்பதுவே.
==மார்க்கநாத வான்கோடி மெய்குரு.
Surya Chandra ஒரு மனிதன் ஜீவசிவத்தை உணர்ந்து தன்மயமாகிறானே அவனே சிவன்....அதாவது, எவனொருவன் ஜீவனை கண்டு அந்த ஜீவனே அனைத்திற்க்குள்ளும் பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம் என தெளிவுறுகிறானே அவனுக்கு சிவன் என பெயர். இருப்பது ஒன்றே தான்..அதுவே ஜீவனாகவும் ஜீவசிவமுமாக இருக்கிறது. அதனாலத்தான் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி என ஆண்டவரை திதித்துகொண்டிருந்த வள்ளலார்,அந்த அருட்பெரும்ஜோதியில் கலக்கபோகிறேன் என சொல்லாமல் ,”எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து கொள்ளபோகிறேன்” என விலக்கமாக சொல்லிவிட்டு போனார்..நமக்குத்தான் அது விளங்காமல் போச்சு...அருட்பெரும் ஜோதியில் கலக்காமல் எல்லா ஜிவனிலும் கலக்கும் கரணம் இதுவே...இதுவே “இயற்கை உண்மை கடவுள்
Salai Jayaraman Surya Chandra நவகோளின் பிடியில் அகப்பட்டு சின்னாபின்னமாகி மறுபடி மரணம் மறுபடி ஜனனம் என்ற கிரகவினையின் அசைவுநிலையில் 12 ராசி லக்னம் என்ற பிறவிப் பிணியின் ஜனன நிலையினை ஏக ராசி என்ற வைராக்யமணி மேடை கம்பத்தில் மூச்சோடா பெருநிலையில் கை வர வாகப் பெறப் பெற்ற எங்கள் குல தைய்வம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் ஒருவரே தங்கள் பெற்ற அனுபவத்தை பெருங்கருணை கொண்டு அறிவித்துள்ளார்கள். இந்தப் பெருநிலையில் விஷ்ணுவின் அம்சமான இராமபிரான் மட்டும் 7 நிலைகள் கைவரவாகப் பெற்ற வரலாறு உண்டு. ஏழு விருக்ஷங்களை ஓர் அம்பு கொண்டு வீழ்த்தியவன் இராமன். 12 இராசிகளின் வீர்யத்தை ஏக இராசியாக்கிக் கொண்டவர்கள் எம்மான் சாலை ஆண்டவர்கள். அடி முடி நடு கண்டு நடு நின்ற பருப்பொருளை கைக்கொள்ளுதல் ஏக ராசி என விளங்கிக் கொள்க
Salai Jayaraman Surya Chandra இது வசனம் இல்லதம்பி வாழ்க்கை. நமக்கு வெளிசுவாசம் தேவையற்ற ஒன்று. நீங்கள் மூச்சிழுக்கவேண்டிய அவசியமே இல்லை. அண்ணாக்கு உண்ணாக்கு போன்ற வார்த்தைகள் தான் புண்ணாக்கான வசனங்கள் (நாக்கைப் புண்ணாக்கும் வசனங்கள் ) தேனடைக்குத் தேன் போன்றதுதான் நமக்கு சுவாசமும்) தேனடை நிரம்பி வழியும் நிலையில் இருந்தாலும் புதிதாகக் ெகாண்டு வரப்படும் தேனை உள்வாங்கிக் கொள்வது போலத் தான் நம் சுவாசமும் . தண்ணீருள் சுவாசிக்காமல் உயிர் பிரியாமல் தாக்குப் பிடித்து உள்ளடங்கி இருப்பது போல் புற வாழ்வில் அண்டப் பெருவெளியைத் தியானிக்காமல் ஆயிரம் கண்கொண்ட ஒரு இருதய வாசலை அறிந்து அதில் ஏகிக் கொண்டோமானால் ஏக ராசி என்ன அண்ட சராசரங்களும் நம் வசந்தான். இருதய அடைப்பா அல்லது திறப்பா என்பது அவனவன் பணிவாலும் விசுவாசத்தாலும் பெறப்படுவது. நம் தலையை சீர் செய்ய சனி பகவானின் த மச குணத்தால தான் முடியும். நூலறிவு கொண்டோரின் தலைக்கனத்தை சனீஸ்வரன் ஒருவரால் தான் தட்டி வைக்க முடியும் உதாரணம் இன்றைய மெய்வழிச்சாலை
Salai Jayaraman Surya Chandra ஏக ராசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சுவாசிக்கக் கூடாது. கோள்கள் சுவாசிப்பது இல்லை. நித்தியனுக்கு சுவாசம் தேவையற்றது. சுவாசம் பூமியில் உள்ளவர்களுக்குத்தான். தேவர்கள் சுவாசிப்பதில்லை. சாவா வரம் என்ற அமரத்துவத்தை அண்டவெளியில் கைக் கொள்வார்கள். சுவாசிப்பவன் வைராக்யமற்றவன். அசுவாசி வைராக்யமான வன்
Hseija Ed Rian Salai Jayaraman ஐயா தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்..நீங்கள் ஆண்டவர் என்றால் மயிரும் மட்டையுமான தூலதெகத்தை கண்டிருப்பீர்கள். நானோ “சர்வ மக்களிடத்திலுமுள்ள யுகவான் சாலை ஆண்டவர்கலை” ena தரிசித்து வாழ்பவன்.
Salai Jayaraman Surya Chandra வாலையின் மகத்துவம் கேலிக்கு ஆகாது. ஏற்கனவே வித்வகர்மாக்கள் நிறையக் கேட்டு என் மூக்கை உடைத்து சுவாசத்தை நிறுத்தி விட்டார்கள் தாயே. இங்கே சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆத்ம கலை உங்களுக்கு டைம் பாஸ். நீங்கள் நிறையப் படித்தவர்கள். அடக்கம் அமரருள் உய்க்கும் இது தான் சுவாச ரகசியம் நான் சுவாசிப்பது
Hseija Ed Rian அச்சம்,மடம்,னாணம்,பயிர்ப்பு.(மடம் என்பது கணவன் பொய்யே சொன்னாலும் அதை மெய் என்று முழுக்க நம்பும் குணம்.பயிர்ப்பு என்பது அவனுக்கு பணிவிடை,கணவனை தவிர பிறரிடம் புழங்க அருவருப்பு)=ஞான்ம் பெற்றவர்களில் பெண்கள் சிலரே.ஏனெனில் ஒரு மெய்ஞான ஆசாரியரை தெய்வ இச்சையோடு அணுகியதும் ஊரே படர் விரிக்கும்.அதை மிதித்து ஏறவே இந்த நான்கு ஆபரணங்கள் தரபெற்றன. இல்லாவிட்டால் அவர்களில் ஒரு குஞ்சு கூட இருக்கமுடியாது.(சாலை ஆண்டவர்கள் வாக்கு
Salai Jayaraman மெய்வழி ஆண்டவர்கள் திருவாக்கியம்
------------------------------
குருபிரான் சன்னதியில் இருக்கும் போதும்
அவர்களின் வாசகங்களைக் கேட்கும்
போதும் கேட்டு மறுமுறை சிந்திக்கும்
போதும் சுவாசம் இலாபத்தில் மாறி விடும் .
அதாவது உள்வாங்குவது அதிகமாகவும்
வெளியேறுவது குறைவாகவும் இருக்கும் .
இவ்வாறு சுவாசம் இலாப முகத்தில்
இயங்கும் .
இது தான் பிராணாயாமத்தின் இரகசியம்
Salai Jayaraman Mathi Salai Jayaraman //அய்யா இதில் அடக்கம் என்பது பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?//
நிறையச் சொல்ல உள்ளம் விழைகிறது. உணர்வில் ஓர் நெருடல் தடையிடுகிறது. ஆண்டவர்கள் தங்கள் குரு பிரானிடம் பிறவா நெறிப் பிறப்பு என்னும் மறு ஜென்ம புதுப்பிறப்பினை விளக்குங்கால் இவ்வாறு கூறுகிறார்கள். அதாவது தான் பெற்ற அனுபவமானது ."உயிரற்ற உடலில் உயிர் வந்தது போலவும் " போலி பாசாங்கு ஞானத்தினால் தான் அடைந்த உடல் உபாதைகள் நீங்கிப் பேரின்ப பெருவெளியில் தங்கள் திருஷ்டிகள் இரண்டு நிலைக்கப் பெற்றவர்களால் மீண்டும் இப்பூமிப் பரப்பிற்கு திரும்பி வர திருஉளம் இல்லாதவர்களாய் ஆழ்ந்த சொக்க நிலையில் நிலைகொண்டார். மறுபடியும் தங்கள் குரு கொண்டல் அவர்களின் பெரு உதவியால் அசைவுநிலைக்கு பூமிக்குத் திரும்பினார்கள். இதே அனுபவம் வள்ளல் பெருந்தகைக்கு ஏற்பட்டு பொன்னுடம்பில் ஏகிக் கொண்டார்கள். உணர்வற்ற உடலுக்கு உயிர் வருவதும் உயிருள்ள யாக்கையை உணர்வற்ற உயிர்க்கும் போக்குவரத்தாக ஆக்கிக் கொள்வதும் அமரத்து மாகிய அடக்க நிலை என எம்பெருமானர் எங்களுக்கு அருளிச்செய்தார்கள்.
இதையே
அடக்கம் அடக்கமென்பார் அடக்கம் அறிந்திலர்.
அடக்கி ஆக்க தெரிந்தவர் தாம் வான அனந்தர்க்கே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment