Monday, November 28, 2022
குரு தொட்டு காட்டிய எல்லை
Sunday, July 21, 2019
குரு தொட்டு காட்டிய எல்லை
புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும்.
உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. உண்மையில் குரு பரம்பரையில் முதலில் ஒரு விலக்கை ஏற்றி வைப்பார்கள். அது தான் இலக்கு. அதாவது நமது லட்சியத்தை அன்றே காட்டித்தருவார்கள். அறிவுக்கு அறிவாக கோடி சூரிய பிரகாசத்தை உபதேச சமயத்திலேயே காட்டி விடுவார்கள். அதை பிரயாணம் செய்து அடைவது சீடனின் கடமை.
ஏராளம் ஆன்மீகவாதிகள் ஒரு ஜென்மம் முழுதும் கதை பேசி நம்பி ஏமாந்து கடைசியில் வலிய உணர்ந்தே போயிருக்கின்றனர், சீடர்கள் கூட சிரிக்கும் அளவுக்கு கதி கெட்டு அதோகதியாகி இருக்கின்றனர். சொல்லும் போது பெருசாக சொல்லுவார்கள், அனுபவத்தில் பூச்சியம், தெக்கும் தெரியாது வடக்கும் தெரியாது பெரிய மடாதிபதிகளாக வலம் வருவார்கள். கடைசியில் தலை கூட வெளியே காட்ட முடியாத படிக்கு கேவலமரணம், நாய் கூட இப்படி நாறி சாகாது. அறிவிருந்தும் அதை பிரயோசனபடுத்த தெரியாது நாறி செத்து விடுகிறார்கள். அறியவேண்டிய அறிவை அறியாமல் மிதப்பாக திரிவார்கள். எதாவது கேட்டா நாடி காற்றுண்ணு பதில் வரும்.. யாரிடம் சொல்ல எனத்தான் வந்த வந்த பெரியவர்கள் எல்லாம் சொல்லாமலேயே சென்றிருக்கின்றனர்.
தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே தன்மயமே தான். மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம்.
"நான்" "நான்" என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment