Tuesday, November 29, 2022

வாசி யோகம் + குளறுபடிகள்

வாசி யோகம் + சித்த வித்தை குளறுபடிகள்” இன்று ஆன்மீகவாதிகள் முதலில் கற்க விரும்பும் வித்தை என்பது வாசி யோகம் அல்லவா? .ஆனால் அவர்கள் முதலில் தீட்சையாக பெற்றுகொள்வதோ எதுவெனில் சித்த வித்தையையே தான் அல்லவா/.ஏனெனில் வாசி யோகம் என்பது நாடைமுறையில் வழக்கத்தில் இல்லை என்பதே உண்மை.ஏன்,எப்படி என்பதை சற்று கூர்மையாக சிந்திக்கில் விளங்கும். 'வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை ” (கம்பளிச் சட்டைமுனி பா:13;அ-1)’.புசுண்டர்,போகர் தட்சிணமூர்த்தி போன்ற அனேகம் சித்தர்கள் நூலில் இவ்வண்ணம் வாசி என்றும் மவுனம் என்றும் இருவகை சம்பிரதாயங்கள் உண்டு என சொல்ல கேட்கின்றோம் அல்லவா? அவை குறித்து பார்ப்போம். இரண்டு வித்தைகளும் பிராணாயாமங்கள் என பொதுவாக வரைமுறைபடுத்தப்பட்டுள்ளன என்பது போக அதன் நிஜசொரூபம் விளங்க சொல்லபடவில்லை அல்லவா?.வாருங்கள் பார்ப்போம். பூரகம் ரேசகம் என இரண்டு மூச்சு,உட்கும்பகம் வெளிகும்பகம் என இரண்டு இடைவெளி நிறுத்தம் ,ஆக என நான்கு பிரிவு.இதில் சந்திர சூரிய அக்கினி ந கலை மூன்று, இடை பிங்கலை சுழுனை நாடி இயக்கம் மூன்று.இவை சாத்திரங்களால் விளக்கபெற்றவை. எனின் வித்தைகளின் வித்யாசம் என்பது சூட்சுமம் தான். வாசிக்கு ஆதாரம் சிவம், சிவ எனும் மந்திரம் மூச்சோடு வாசிக்கபடுவதனால் வாசி என்றாயிற்று. ‘வாசி வாசி என வாசித்த பொருள் ஒன்று,சிவா சிவா என சிந்தித்த பொருள் ஒன்று’ என்பது சித்தர் பாடல்.வகரம் உள்மூச்சினில்கொண்டு சிகரத்தை ரேசிக்க வாசியாம்.’அம்’ என மூலத்திலும் ‘மம்’ என துவாதசாந்தவெளியிலும் சிந்தித்து கும்பித்தல் நடைமுறை. வகரம் என்பது சிவ ரூபம் சிகரம் சக்தி ரூபம் என கொள்ளபடுகின்றது. வகரம் இடை நாடியின் கண்ணும் சிகரம் பிங்கலை நாடியின் கண்ணும் அகரம் சுழினையின் கண்ணும் நிலைநிறுத்தபடுகின்றது.இவ்வண்ணம் ஏகதேசம் பொருள் ஒருவாறு கொள்க. மவுனம் எனும் வித்தைக்கு ஆதாரம் நாதம் விந்து என்பவை மட்டுமே.இவ்வித்தையில் இடைபிங்கலை என இருநாடி பிரிவு கவனத்தில் கொள்ளபடுவதில்லை, கும்பகம் என்பதும் செய்யபடுவதில்லை. பூரகம் ரேசகம் எனும் இரு பிரிவு மட்டுமே ஆதாரம்.உட்புகு மூச்சு விந்து எனவும் வெளியாகும் மூச்சு நாதம் எனவும் கவனத்தில் கொள்ளபடுகின்றது.உட்புகும் சுவாசமானது உள்ளே விந்துவினில் சென்று புகுந்து சுழன்று அக்கினி பீடத்தில் உரசி வெளியாக நாதமாகின்றது. ஆக பிரம்மசரியம் பிராணாயாமம் என கொண்டு இயக்க நடைமுறை.. ஆனால் மக்கள் இவற்றின் வேறுபாடு இயக்க சாத்திய சங்கதிகள் அறியாமல் வாசி யோகம் என்றால் சித்த வித்தையே எனவும் போட்டு குழப்பி கொள்கின்றனர். வாசிக்கு ஆதார சக்கரங்கள் சுழுனை நாடி சூரிய சந்திர கலை மந்திரங்கள் என உண்டு,மூலமுதல் ஆறு ஆதாரங்கள் முடியாக சஹஸ்ராரம்.ஆனால், மவுன வித்தைக்கு இவை ஒன்றும் இல்லை, கண்டத்தின் மேல் ஸ்தான இயக்கம்.கண்டத்தில் இருந்து பதினாறு ஸ்தானங்கள்.மனோன்மணி முடி

No comments:

Post a Comment