Monday, November 28, 2022
The Spiritual Seed
The Spiritual Seed
மண்ணை கிளற கிளற அது அருமையான வளம் பெறும்,
விதை விதைப்பவன் மண்னை நன்றாக அறிந்திருப்பான்... மண்ணில் இருக்கும் சின்ன சின்ன கூழாங்கற்களை பொறுக்கி மாற்றுவதும் அவன் கடமையே அல்லவா?
மண் பக்குவமாகும் போது விதை தானே விழும்.
பக்குவம் ஆகாத மண்ணில் விதை விழுந்து என்ன பயன்..விதை முளைக்குமா?
சில பேருக்கு ஆசை இருக்கும்... ஆவல் இருக்கும்... ஆன்மீக தாகம் இருக்கும் என்பதும் சரி.. ஆனால் விதை முளைக்க அதுமட்டும் போதாது... அருமையாக விதையை கவ்வி மூடிகொள்ளுகிற பசையான மண் வேண்டும்.. நீர் நயப்பு இருக்கவேண்டும்.... அதிக ஆழமாகவும் விதை செல்ல கூடாது.. வெகு மேலாகவும் விதை இருக்ககூடாது... காகம் கிளி முதலியவை கொண்டு சென்றுவிடும்.
இதை தான் மனம் என்கிறோம்... மனமும் மண்ணும் ஒன்றே தான். இதனாலத்தான் மண்டையில களிமண்ணா இருக்கு என நையாண்டித்தனமாக பேசுவர் ஞானிகள்.
கொஞ்சம் விதை இருக்கிறது...பார்க்கும் இடமெல்லாம் நிலமும் இருக்கிறது.... விதை விதைப்பவன் கண்டமேனிக்கு விதையை அள்ளி வீசிகிட்டு போவானா...?
அது மாதிரித்தான்...மனம் என்பது விளைநிலம்...அதை பண் படுத்தி நீர் ஓட வாய்க்கால் போட்டு அதை கிளறி..எரு விட்டு அப்புறம் சீஸண் பார்த்து தானே விதையை போடுவான் விவசாயி....ஒரு விவசாயியே இப்படி என்றால் ஆன்மீக விதை விதைக்கிறவன் என்னவெலாம் பார்க்க வேண்டும்
கொஞ்சம் விதைகள் விதைத்து இருக்கிறேன்..அந்த விதைகள் அனேகம் விதைகளை தூவ வேண்டும்...பல விருட்சங்கல் முளைக்கவேண்டும்...இங்கு நான் என ஆக ஒன்றும் இல்லை..எல்லாம் இறை சித்தமே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment