Tuesday, November 29, 2022

தான்

 தான் என்பது மனம் இருப்பதினால் மட்டும் அல்லவா இருக்கிறது...மனமற்ற தூக்கத்தில் கூட நான் என்பது இருப்பதில்லையே...அப்போது தான் என்பது மனம் தானே.. மனதின் அங்கமே தானே?  மனதினால் செய்யப்படும் தியானம்... பிணத்தை சுட மீண்டும் பிணத்தையே நாடுகிறீர்கள். மனத்தை கொண்டு மனத்தால் விளைந்த உடம்பை சுட வேண்டும் என்கிறீர்கள், மரத்தினால் செய்த கோடாரி எங்காவது மரத்தை வெட்டுமா...? -நன்றி: ரியான் அய்யா Hseija Ed Rian தூலம் சூக்குமம் காரணம் என சொல்லபடும் உடல் மூன்றும் மனம் அல்ல.ஆனால் மனம் இவற்றில் வியாபகம்.. விஸ்வ தைஜச, ப்ராக்ஜ எனும் நாமதேயத்தால் Hseija Ed Rian ‘நான்’ ..’நான்’ என எது அறியபடுகிறதோ அது மனமே மனதை அறிய மனதால் சுட்டிகாட்டப்படும் வஸ்த்து வித்தான ஆன்மா Hseija Ed Rian வியவகாரத்தில் மனம் எனவும் அந்தரங்கத்தில் ‘நான்’ எனவும் இருவாக பிளந்து நிற்பது எதுவோ அதுவே ஒன்றான ஆன்மம்..இவ்விரு ரூபம் ஒன்றாக இரண்டற்ற சொரூபம் மனதுக்கும் அப்பாற்பட்டு ‘நன்’னுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது என கொள்ளலாம் Kalai Vendhan சித்தவித்தை பண்ணுபவர்கள் உள்மூச்சினையும் வெளிமூச்சினையும் கவனித்து அதன் சத்தத்தினை சூட்சுமமாக கவனித்தாலே போதும்....கிரியா யோகம் பண்ணுபவர்களுக்கு என தனியாக மந்திரங்கள் உண்டு.மனமானது சத்தத்தில் லயனமாகும் தன்மையது. மனம் லயமாகும்போது பிராணனும் லயமடைகிறது....அனால் நிச்சயமாக கவனிக்கவேண்டியது தன்னுடைய சத்தத்தை தானே கேட்க்கவேண்டும் என்பதே....தன்னுடைய மூக்கினூடே உள்ளும் புறமும் வந்துசெல்லும் தூலமான காற்றினை மனத்தால் கவனித்தால் ஆவதொன்றில்லை...காற்றினை எங்கும் கொண்டுசெல்வது வித்தை இல்லை...வித்தை என்பது பிராணனை கொண்டு செல்வதே....பிராணன் சத்தத்துடன் இயங்குகிறது....சத்தமெ பிராணன். தன்னுடைய சத்தமாகிய பிராணனை தன் உள் இருக்கும் ஆகாயத்தில் லயனம் செய்வதே லட்சியம் ஆகும்.. ------- நன்றி ரியான் அண்ணன்  துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும். இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது. ஆகவே எல்லாம் பிரம்மம் (சர்வம் கல்விதம் பிரம்மம்) பிரம்மத்தை சத்தியம் என்போமானால் சத்தியமே சர்வம்  ஆத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தியாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும், இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது  மனம் நான்கு விதமாக திகழ்கிறது. 1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம். 2. மனத்தை அடக்கியாளும் புத்தி. 3.எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம் 4. அதன் சுத்த நிலையாகிய சித்தம். இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம்  சுழுத்தி: தூக்க நிலையில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் மனிதன் கடவுளோடு இதயத்தின் ஒன்றி இருக்கின்றான். மனது சுதந்திரமின்றி பிராண சக்தியால் இழுக்கப்பட்டு தூக்க நிலைக்கு போவதால் அங்கிருந்து கடவுள் அறிவை கொண்டு வர முடியவில்லை. ஆனால் தானாகவே உலகத்தை உதறி தள்ளிவிட்டு புத்தி கூர்மையால் அகங்காரத்தையும் தள்ளிவிட்டு இதயக் குகையில் இருக்கும் தன்னுடையை சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமாயானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. கடவுளின் அருள் ஏற்படுகிறது. இது தான் உண்மை ஞான அறிவு, இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம். தத்துவங்களையும் எளிதாக அறியலாம். மனம் இப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குரவரத்து வைத்துக்கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும் Mathi ஒருவர் தொட்டுக்காட்டவே அது மிளிரும்...இல்லையெனில் மிளிராது, அறிவு பற்றாது...அறிவிற்க்கு தீட்சை அறிவின் வாயிலாகவே , மனதின் வாயிலாக இருக்கமுடியாது அல்லவா...அதுபோல ஜீவனுக்கு போகும் வாசல் மிகவும் இடுக்கமானது, அதை கண்டடைந்தவர்கள் ஒரு சிலரே  "உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்த நாதமும் கருத்தரிப்பதற்கு முன் காயம் என்ன சோணிதம் அருள்தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்" "சுக்கில துளையிலே சுரோணிதக் கருவுளே முச்சதுர வாசல் தன்னில் முளைத்தெழுந்த வோட்டினில்" உருத்தரிப்பதற்க்கு முன் உயிர் புகுந்த நாதமும் என்பதில் வரும் நாதமானதை அறிந்து பற்றிகொள்பவன் உண்மையில் பாக்கியசாலியே...வணங்கத்தகுந்தவனே...அவனே நாதனுமாவான். சுக்கிலதுளியின் உள் இருக்கும் உயிரின் உள்ளாக அமைந்திருக்கும் நாதமே பிரம்ம சொரூபம்..அதுவே பிரம்மசரியம். நன்றி: ரியான் அய்யா

No comments:

Post a Comment