Wednesday, November 30, 2022
மண்மனம்
=====மண்மனம்====
கொஞ்ச நாள் சாப்பிடாம இருந்தா என்னாகும்?..கொஞ்ச கொஞ்சமா சோர்வு வரும்,கொஞ்ச கொஞ்சமா தூக்கம் அதிகரிக்கும், கொஞ்ச கொஞ்சமா அசதியாகும், கொஞ்ச கொஞ்சமா நினைவு தடுமாறும், கொஞ்ச கொஞ்சமா மயக்கம் அதிகரிக்கும், கொஞ்ச கொஞ்சமா நினைவு தவறும், கொஞ்ச கொஞ்சமா கோமாவுக்கு போவோம்.தண்ணீர் அருந்தாமல் இருந்தாலும் இப்படியே ஆகும், கடைசியில் சாவு வரும். ஏன் இப்படி நிகழ்கின்றது?.
உடலுக்கு உணவு தேவை அல்லவா, தண்ணீர் தேவை அல்லவா?. இதெல்லாம் அத்யாவசியமான விஷயங்களாயிற்றே, இது கூடவா தெரியவில்லை என நீங்கள் சொல்வது கேட்கின்றது.உயிர் வாழ இவை இன்றி அமையாது அல்லவா?.சரி தான். இவை முக்கியமானவை தான், ஆனால் இதை விட முக்கியமானவையும் இருக்கின்றன. அது என்னவாம்?.
உடலுக்கு மனதுக்கு ஒவ்வாமை எனும் குணம் கூட இருக்கிறதல்லவா?. உணவு என எதையும் சாப்பிட்டால் உடல் ஏற்று கொள்ளுமா,இல்லை அல்லவா? நீர் என்று நீர் தன்மை கொண்ட எதையும் உடலும் மனமும் ஏற்று கொள்ளுமா, இல்லை அல்லவா?.உடலுக்கு தேவையான சத்துக்கள் விட்டாமின்கள் புரதம் கால்சியம் சல்பர் என அனைத்து தனிம இயற்கை விஷயங்களும் தக்க அளவில் தக்க முறையில் மட்டுமே உடலும் மனமும் ஏற்றுகொள்ளும் அல்லவா?. எதாவது ஒரு தனிமம் அல்லது ஒரு நுண் ஊட்டசத்து அதிகமாயினும் உடலுக்கும் மனதுக்கும் சிக்கல் தால், குறைந்து விட்டாலும் சிக்கல் தான் அல்லவா?. தேவையானவை தேவைக்கு உள்ளே சென்றால் தான் உடலும் மனமும் ஒத்து இயங்கும், ஆரோக்கியமாக நிலை நிற்கும். இல்லையெனில் நோய் வந்து மரணம் நேரிடும். இவை விகிதாசார முறைப்படி உட்கொள்ளப்படவில்லையென்றாலும் அந்த குறைவு நோய் போல உடலிலும் மனதிலும் தென்பட்டு பிரச்சினைகளை உண்டு பண்ணிகொண்டிருக்கும் அல்லவா?
இந்த உலகத்து தனிம ,சத்துக்களையே உடலும் மனமும் ஏற்று கொள்ளும், இதுல போயி பல விதமான சத்துக்களும் தனிமங்களும் செடி கொடிகள் காய் கனிகளும் விஷங்களாக இருக்கின்றன.இப்படியானவற்றை ஏன் விஷ வகைகள் என்கிறோம், அவை உடலுக்கும் மனதுக்கும் உயிருக்கும் ஊறு விளைவிக்கின்றன என்பதனாலேயே அல்லவா?.உண்மையில் அவை விஷங்களா என்றால் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். ஏனெனில் அவை மனித உடலுக்கும் மனதுக்கும் தான் விஷங்களாக அமைகின்றன. நாம் விஷம் என ஒதுக்கி வைத்திருக்கும் பொருட்களை உண்ணுகின்ற சில விலங்குகளை பார்கின்றோம், அவை நாம் விஷங்கள் என ஒதுக்கி வைத்திருக்கின்றனவற்றை உட்கொண்டால் அவற்றிற்க்கு எந்த நோயோ பிரச்சினைகளோ இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதையும் காண்கின்றோம்.ஏனெனில் அவற்றின் மரபணு மூலகூறுகள் அந்த தன்மையில் இருப்பதினால் நாம் விஷம் என கருதும் பொருட்கள் அவற்றிற்கு விஷம் அல்லாமல் அமைகின்றன. அப்போது விஷம் என்பது அந்த பொருளில் இல்லை, உடலின் ஒவ்வாத தன்மைக்கே விஷம் என கொள்ளப்படுகின்றது என புரிந்து கொள்ளலாம்.அல்லவா?.
நீரழிவு நோயாளிகளுக்கு சாதாரணமாக சீக்கிரம் கிட்னி செயலிழந்து விடும், அதனால் அவர்கள் ரெத்தத்தில் இருந்து உப்பு பிரிந்து செல்லாமல் உடலிலேயே தங்கி விடும் பிரச்சினை அதிகம் இருக்கும். இதை யூரிக் ஆசிட் டெஸ்ட் என பார்த்து தெரிந்து கொள்ளுவார்கள். அதிகமாக ரெத்தத்தில் யூரிக் ஆசிட் கூடிகொண்டே வந்தால் இந்த நோயாளி ஒரு வித பைத்தியக்காரன் போலவே ஆகிவிடுவான்.ஏனெனில் இந்த யூரிக் ஆசிட் இவன் மனதில் வினை புரிய ஆரம்பித்து விடும்.மனம் தன் இயல்பு நிலையில் இருந்து யூரிக் ஆஸிட்டின் தாக்கத்தால் தன்னுடைய இயல்பு ஃப்ரீக்வன்ஸி நிலையில் இருந்து மாறும்.இதுபோலத்தான் உடலில் பல விகிதாசார முறைப்படியான சத்துக்களும் தனிமங்களும் ரெத்தத்தில் அதிகமாகவோ குறைவாகவோ அமைய ஏற்பட்டால் மனம் தன் இயல்பு நிலையில் இருந்து மாற்றம் பெற்று மற்றொரு அலைவரிசையில் இயங்க் ஆரம்பிக்கும். இவ்வண்ணம் உணவு முறைகள் மாற்றத்தினாலும் அருந்தும் தண்ணீரின் மாற்றத்தினாலும் மனம் இயல்பு நிலை மாற்றம் அடைந்து அலைவரிசை மாற்றம் பெற்று கோபம் எரிச்சல் சோர்வு தள்ளாட்டம் மவுனம் போதை எனும் அவத்தைகளுக்கு போகின்றது. சரக்கு அடிச்சு கிக்கு ஏறினவன் கண்டமேனிக்கு பேசிகிட்டு திரிகிறது இதனால் தான்.மனம் சுய இழப்பு நிலைக்கு போய் விடுவதினால் தான் இது ஏற்படுகின்றது.
ஆகையினால் ,இந்த பூமியின் மண்ணின் விளைச்சலுக்கு ஏற்ப காய் கனிகளுக்கு தனிம சத்துக்களும் விட்டாமின்களும் செறிவு உண்டாகின்றது. ஒவ்வொரு பிரதேசங்களில் விளையும் ஒரே ரகம் ஒரே விதமான காய்கனிகள் கூட வித்யாசமான ஊட்டசத்து தனிம சத்து வேறு பாடு கொண்டவையாக இருக்கும்.அவற்றை உண்பதினால் வேறுபாடான உடல் மன நிகழ்வுகள் உண்டாகும்.மண் வேறு பாட்டினால் மன வேறுபாடு உண்டாவது இயற்கையான நிகழ்வு. அல்லவா?.
இந்த பூவுலக மண்ணில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் தனிமங்களினால் இந்த உலகில் வசிக்கும் நம்முடைய மனமும் கட்டமைக்கபட்டிருக்கின்றன என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். வேறொரு கிரகத்தில் இருந்து கொண்டு வந்த எதாவது உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த கிரகத்தின் தன்மைக்கு நம் மனம் மாறுபாடு கொள்ள ஆரம்பித்துவிடும்.இங்கே இருக்கும் கஞ்சா அடிக்கிறவன் கூட ஏதோ கிரகத்தில் மிதக்கிறான் எனில் ஏதோ ஒரு கிரகத்தின் உணவுகளையே இங்கிருக்கிறவன் சதா உட்கொள்ளுகின்றான் எனில் அவனுடைய மனமானது நம்முடைய மன எண்ண அலைவரிசையில் இன்றி மற்றொரு அலைவரிசைக்கு போய் விடும்.அப்போது நாம் அவனை பைத்தியம் என சொல்லிவிடுவோம். அவனுக்கு இங்கே இருக்கும் பச்சை நிறம் மங்சளாக தெரியும், தீயில் கைபட்டால் சுடு உணர்ச்சி தெரியாது. எந்த கசப்பு சாப்பிட்டாலும் கசப்பு உணர்ச்சி தெரியாது. அதி தூரத்தில் இருக்கும் மணத்தையும் அவன் நாசி உணர ஆரம்பிக்கும் என மனம் மற்றொரு கோணத்துக்கு விரிய ஆரம்பிக்கும்.எல்லாம் நாம் உண்ணும் உணவும் அருந்தும் தண்ணீரும் செய்யும் ஜாலம் தான், மற்றொன்றுமல்ல.
இனி மற்றொரு பதிவில் கர்ம பிறப்பும் மன நிகழ்வும் பற்றி விரிவாக விசாரம் பண்ணுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment