Tuesday, November 29, 2022

ஊர்த்வ மூலம்

ஊர்த்வ மூலம் ஸ்ரீ -பகவத் கீதை அத்தியாயம் 15 - வசனம் 1 மூலம்= ஸ்ரீ-பகவான் உவாச ஊர்த்வா-மூலம் அத:ஷாகம் அஷ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம் சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ் தம் வேத ஸ வேத-வித் உரை= ஸ்ரீபகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஊர்த்வ-மூலம் — மேலே வேர்களுடன்; அத: — கீழ் நோக்கிய; ஷாகம் — கிளைகள்; அஷ்வத்தம் — ஆலமரம்; ப்ராஹு: — கூறப்படுகின்றது; அவ்யயம் — நித்தியமான; சந்தாம்ஸி — வேத பதங்கள்; யஸ்ய — அதன்; பர்ணானி — இலைகள்; ய: — எவனொருவன்; தம் — அதை; வேத — அறிகின்றானோ; ஸ:-அவன், வேத — வித்—வேதங்களை அறிந்தவன். இங்கே ஒரு விஷயம் விளக்கம் வேறுபாடுகளுக்குட் சிக்கி தவிக்கின்றது. எது மூலம், எது எதுக்கு மூலம் என அறிந்து கொள்ளுவது நலம். சித்தர் பாடல்களில் பார்த்தீர்களானால் மூலம்ண்ணா இடுப்புக்கு கீழ குதத்திற்க்கு மேல ந்ணு சொல்லி வெச்சிருப்பாங்க. பிரானன் அங்கிருந்து உதயமாகி சிரசளவு சென்று மீண்டு நாசி வழி வெளிய வீணாகின்றது என காணலாம். அப்போ மூலம் கீழயா அல்லது மேலயாண்ணு சந்தேகம் வருவது இயற்கை. தக்க குரு இதன் விளக்கத்தை சொல்லி புரிய வைக்கவில்லையென்றாகில் குழம்பிகிட்டே தான் வாழ்க்கை முழுசும் அலைவான்.தலையடி உச்சியில் உள்ளது மூலம் என திருமந்திரம் சொல்வதையும் காண்கிறோம். இதுக்கு தான் மூலம் அறியாமல் முக்தி இல்லை என்கிறோம்.மூலம் அறிந்தாக்கால் முக்தியும் உண்டாமே.விஷயம் தெரியாமல் ஏதையோ கேட்டுகிட்டு எதையோ புருஞ்சுகிட்டு காளைமாடு மோண்டுகிட்டு நடக்கிற மாதிரி நடப்பாங்க.

No comments:

Post a Comment