Monday, November 28, 2022

ஞானக்கொடியும் வள்ளலாரும்

ஞானக்கொடியும் வள்ளலாரும் வெளிமுகமாக கொடி கட்டிக்கொண்டமையால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள் என வள்ளல் பிரான் அருளிசெய்து வடலூரில் கொடிகட்டிகொண்டார்கள். 140 வருடங்கள் ஆகின்றன அவர் கொடி கட்டி பறக்கவிட்டு, என்னதான் வெளிமுகமாக கட்டியும் நம்மவர்களுக்கு புரியவா போகிறது, நாம தான் வடிகட்டின முட்டள்களாச்சே,அப்படி கட்டினா ஒண்ணும் நமக்கு எங்க விளங்கபோகுது? நம்முடைய நாபி முதல் புருவமத்தியீறாக ஒரு நாடி இருக்குதாம், அதில் புருவத்தின் உள்ளாக ஒரு வபை உள்ளதாம்,அதில் வெள்ளயும் பொன்வண்ணமாயும் நிறங்களுண்டாம்,அது ஏறவும் இறங்கவும் செய்யுமாம்.ஏறினா என்ன செய்யும் இறங்கினா என்ன செய்யும்,யார் இருக்கா சொல்லித்தர? சொன்னாத்தானே புரியும் அது என்ன என்று? இல்லேண்ணா ஏதோ மகான் சொல்லி இருக்கார் என்று சொல்லி நான் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம் நின்று வார்த்தை ஜாலப்போர் தான் நடக்கும், எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது கேக்கிறவனுக்கு வெளங்கவும் செய்யாது பாக்கிறவன் தலைலே அடிச்சுக்கிட்டு போவான்.அப்படித்தானே? நாபி முதல் இருக்கிற நாடி ஏன் கொஞ்சம் கீழால இறங்கி மூலாதாரத்திலே இருந்து தொடங்கவில்லை? சித்தர்கள் எல்லாம் நாடிகள் எல்லாம் மூலத்தில் இருந்து தொடங்குவதாக தானே சொல்கிறார்கள்? பிறகு ஏன் வள்ளலார் மட்டும் நாபி முதல் புருவமத்தி ஈறாக என்று சொல்கிறார்? ஏன் சித்தர்கள் எல்லாம் இந்த நாடியே பாக்கவில்லையா என்ன? இந்த உலகத்துல வந்தவர் ஒருவரும் நாபியில்லாமல் பொறக்கமாட்டார்கள், மட்டுமல்ல ஒரு்வருக்கும் தந்தையிடம் நேரடி தொடர்பும் இருக்காது,தாயிடமே இருக்கும். வள்ளலார் கட்டியகொடி என்பதை சொல் வழக்கில் நாபிக்கொடி எனலாம்,ஏனெனில் அதற்க்கு நாபியே ஆதாரம்,அவருடைய மார்க்கவும் அதுவே.அதனாலேயே வடலூரில் எல்லோரும் காணும்படிக்கு கட்டி வைத்தார்.அண்ணைக்கு கட்டினது கட்டின மாதிரி தான் இண்ணளவும் இருக்கு. அப்படி இருக்கிற நாபிக்கு தந்தையிடம் தொடர்பு இருக்கிறது,அது தூலத்தில் விட்டு் சூட்சுமத்தில் இருக்கிறதல்லவா?அப்படி எந்த ஒரு மனிதருக்கும் நாபி என்பது தாய் தந்தை என்பவர்களின் சங்கம வெளிபாடேயாம்.அவ்விடத்திலிருந்து மேலெழும்புவது அவர்கள் சங்கமத்தினால் வெளிப்படும் ஆன்மாவேயாகும். அது மேலெழும்பும் நாடியே வள்ளலார் கூறும் நாடி,அந்நாடி புருவத்திடை முற்றுப்பெற்று ஆன்மா அங்கு நிலை பெறுகிறது,தந்தையின் அணுவோடும் தாயின் கருவோடும், அதுவே ரெண்டு வண்ணங்கள். அது கீழ்முகமாயிறங்குவது என்பது அதோகதி எனப்படும்,அப்படி விடாது அந்த ஆன்ம நிலை தனை கடவுள் நிலையுடன் அருள் எனும் நூலை கொண்டு சேர்க்கவேண்டும்,இதுவே சன்மார்க்க கொடி.அதாவது சாகாதவனே சன்மார்க்கி.கொடிகட்டி கொள்வீர் விரைந்தே.

No comments:

Post a Comment