Monday, November 28, 2022
“ம்
“ம்”
தமிழ் எழுத்துக்களில் ஒன்று. மேலும் தமிழ் நெடுங்கணக்கில் மெய்யெழுத்தான ஓர் மெல்லெழுத்து. “ம்” - அது தனக்குள்ளேயே சுழன்றாடும் ஓர் உசும்புதல். மேலும் அது புரிந்து உணர்தலின் ஒப்புதல் வெளிப்பாடு - ஆன்மாவின் சாட்சி ! அதற்கு தொடக்கமும் இல்லை ! முடிவும் இல்லை !
குருபிரானின் குருகுலத்தில் வாழ்பவர்களுக்கு – மந்திர உச்சரிப்பில் “ம்” மை சற்று அழுத்தமாகவும் நீட்டியும் சொல்லி குரு பிரான் பழக்குவார்கள்.
சான்றோர் இதை மகர மெய் எழுத்து என குறிக்கின்றனர். மகரம் என்பதை பொன்னம்பல மேட்டில் உதிக்கும் ஒளி என்பர்.
ம் + அகரம் = மகரம்.
“அகரம்” என்பதற்கு கற்றோர் பலவிதமாக விளக்கம் அளித்திருந்தாலும் உள்ளார்ந்த புரிதலில் அது ஞான சூரியனாக விளங்கும் சற்குருபிரானிடமிருந்து வெளிப்படும் ஞானோபதேசப் பேரொளி என்றால் அது மிகையல்ல.
“ஓம்” என்ற பிரணவ மந்திரத்திலும்
குர்ரானின் தலைவாசலில் ஒளிரும் - அலிஃப் லாம் மீம் என்பதிலும்
“ம்” பிரம்மோபதேச பீடமாய் இசைந்துகொண்டிருப்பதால் இதை அவரவர் தங்களின் ஆன்மீகத் தேடுதலில் தொடர்வதே சிறந்தது.
தெளிந்தோடும் ஆற்று நீரில் தன் தாகத்திற்கு ஒருவன் தன் இரு கைகளைக் கொண்டு அன்னீரை அள்ளிப் பருகி தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுதல் போலே – நாம் “ம்” எனும் புதையலான ஊற்றிலிருந்து சிறிது அள்ளிப் பருகி உள்ளோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment