Thursday, December 8, 2022

ஞானமோ= ஞானும்==

=ஞானமோ= ஞானும்== குருவே,குருவே,  காப்பாற்ற வேணும் குருவே என கேட்டு நின்றான் அந்த அபலை சீடன். அவன் தோற்றத்தையே அளந்த குருவிற்க்கு புலப்பட்டது ரொம்ப தூரம் வழி நடந்து வந்திருக்கிறான்.... ஆயினும் அவன் கண்களில் அந்த திடமான தீட்சண்யமும் நன்றாக தெரிந்தது. அந்த முகத்தின் ஜொலிப்பும்... கண்களின் கம்பீரியமும்..., அந்த நிதர்சனமும்...,அவன் சரியான திசையையே நாடி செல்கின்றான் என்று பிரதிபலித்தது..... குருவானவர் புன்முறுவலோடும்  வாக்ஞையோடும் அவனை ஆரத்தழுவினார், குழந்தாய்... ஆருயிர் செல்லமே...நீ அடைய தகுதியானவனே..ஞானத்தின் உண்மை  தெரிந்துகொள்ள தகுந்தவனே..ஆயினும் சற்று செவி சாய்ப்பாயாக.... உன் சித்தம் தற்போது சற்று கலங்கி இருப்பது நிதர்சனமான உண்மை..., ஏனெனில் நீ பலகாலமாய் கற்றுக்  கண்ட உண்மைகள் உன்னை திருப்தியடைய செய்ய மறுக்கின்றன......என ஆழமாய் உணர்கின்றேன்..... ஆம், உன் சிந்தைகள் பலவீனமாக இருப்பதற்கு  இதுவே காரணம் தான்....சற்று இளைப்பாறுவாய் குழந்தாய்...காலம் கனியட்டும்... உலகின் பல பல பிறவிகள் தோன்றி மறையும்  என்று  அறிந்திரா விட்டால் இப்பொழுது  கலக்கமடைவது மெய்யே.... தன் அறிவால்....ஒன்றா இரண்டா பல கற்பகாலங்கள் கழித்தாய்?..கோடான கோடி யுகாந்திரங்கள் கடந்தாய்..மகனே சற்று நிதானிப்பாய்..எண்ணமற்ற எண்ணிலடங்கா கோடி எத்தணை காலம் கழிந்தனவே.....  அது மட்டுமல்ல,  கோடாண கோடி காலங்கள் வீணாக கழிந்தனவே... என்ற எண்ணம்  எண்ணில் அடங்காதது கரை காணாது....எழுத்தினால் இலக்கம் எழுத முடியாதது.... அவ் எண்ணில் பல கோடி  துன்பமும்... துயரங்களும்..... கோடானு கோடி.வினைகளும் கோடி....வினைப்பயன்கலும் பற்பல கோடி  மலை  போல அடுக்குகள் உள்ளது.... உதிர்ந்த கண்ணீர் அளவோ..கடல் போல...  எத்தனை பிறவிகள்...., எத்தனை முன்னோக்கிய பிரயாணங்கள்....., எத்தனை பின்னோக்கிய பிரயாணங்கள்......இத்தொகுப்புகள் அனைத்தும் இப்போதும் உன்னிடம் இருக்கின்றனவே குழந்தாய்.... எத்தனை பிறவிகளின் வினை தொகுப்புகளின் பயன்களை நீ களைவாய் மகனே....எத்தனை கொலை புலை தவிர்ப்பாய்.....நீ என்ன என்று பார்க்கின்றாயா.... கண்ணே...எத்தனை கோடி வினைகளை... நீ தவிர்த்து புண்ணியம் அதிகரித்து கொண்டாலும்..... அதை விட லட்சம் கோடி வினைகள்.... மீண்டும் உன்னில் இருந்து எழும்ப காண்பாய்...ஒரு காலும் உன்னால் இதை களைந்து முன்னால் பிரயாணிக்க உன்னால் இயலாதே.......சற்று சிந்திப்பாய்..... ஞானம் இது மட்டுமா..சற்று தியானிப்பதால் கிடைத்துவிடுமென்று.... நினைத்தாயோ...சற்று பிராணாயாம.... தாரணை.... சாதனங்களினால் அடைந்து விட முடியுமென்று நினைத்தாயோ.....சற்று நிதானிப்பாய் மகனே..... உன் முதுகில் பாரமாக தொங்கி கொண்டிருக்கும் வினைபயனின் அளவு தெரிந்திருந்தால் நீ மூச்சடங்கி நின்றுவிடுவாயே... ஏது செய்து இவற்றை கடந்து முன்னேறுவது...? நீ...வினைதொகுப்பை என்ன செய்து நொடி நேரத்தில்  கடந்து வருவாய் ....... முன்னோக்கி..முன்னோக்கி.... உதறி விட்டு....உதறி விட்டு...... தொலைத்து....தொலைத்து.... தாவி...தாவி... குதிப்பாய்..மகனே...

No comments:

Post a Comment