Thursday, December 8, 2022
அகத்தின் கண்
கண்கள் அனைத்தையும் பார்க்கின்றன மண்ணில் முளைக்கும் புற்பூண்டுகளையும் விண்ணில் இருக்கும்க்கும் விண்மீன்களையும் அவை பார்க்கின்றன, ஆனால் அவற்றிற்கு இறைவனைப் பார்த்து அறியும் ஆற்றல் கிடையாது இறைவனின் உருவத்தையோ அவனுடைய செயல்முறைகளையோ இந்த கண்கள் பார்த்து அறியாது, உருவமும் உருவ அமைப்பும் இல்லாத அவனை உங்களால் எப்படித்தான் கண்டு உணர முடியும், இதற்கு உங்கள் புறக்கண்களை ஏன் வீணாக பயன்படுத்துகின்றீர்கள், ஆனால் இறைவனை பார்ப்பதற்கு உங்களிடம் வேறொரு கண் உண்டு அதற்கு புறக்கண் என்று பெயரிட முடியாது, உங்கள் மனக்கண்ணை திறந்து பாருங்கள் அந்த கண் புறக்கண்ணை விட சக்தி வாய்ந்தது புறக்கண்கள் எதிரில் உள்ளவற்றையும் அண்மையில் உள்ளவற்றையும் மட்டுமே பார்த்து அறிகின்றன, தூரத்தில் உள்ளவை பின்னால் இருப்பவை நாளைக்கு நடக்கப் போகின்றதை நுண்ணிய அமைப்பு பெற்றவை, இவற்றை உங்கள் பறக்கண்ஙகளால் கண்டறிய முடியாது, அனைத்தையும் உங்கள் மனக்கண் எளிதில் பார்த்து தெரிந்து கொண்டு விடும் இறைவனைப் பார்க்கும் ஆற்றல் இந்த கண்ணுக்கு தான் உண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment