Wednesday, December 7, 2022

இயற்கை உண்மை கடவுள்

===== இயற்கை உண்மை கடவுள் ===== இயற்கை என்பதனை நாம் காணும் இயற்கை என கொள்ளக்கூடாது, நாம் காணும் இயற்கை என்பது ஒரு வரையறைக்குள் பட்டது... அதாவது ஐந்து இந்திரிய அளவுக்கு உட்பட்டதே நாம் அறியமுடிகிற இயற்கை... வள்ளலார் சொல்லும் இயற்கை என்பது அதீத விரிவு கொண்டது... அதை புரிந்துகொள்ளவேண்டும். அப்படி இயற்கையாகவே இருக்கிறவர் தாம் இறைவன்.... அது அவருடைய இருப்புநிலை அதை விளக்கமுடியாது..... நாம் காணும் இயற்கை என்பது அவருடைய விளக்க நிலை... அதாவது விளக்க நிலை என்பது அவர் இன்றி இவை ஒன்றும் இல்லை.. இதுவே விளக்க  நிலை... விளக்க நிலை என்பது கடவுளின் ஏகதேசம்..... அந்த ஏகதேசத்தினல் அவருடைய அளப்பற்ற இருப்பு நிலையை அனுமானிக்க கூட இயலாத வண்ணமுடையது.... ஏகதேசமான விளக்க நிலை எனும் இப்பிரபஞ்சம் கூட எல்லையற்று இருக்கிறது... இதிலிருந்து அவருடைய இருப்புநிலையின் தன்மை ஏகதேசமாக விளங்கும் அப்படிப்பட்ட ஒன்றை ஒரு சின்ன உருவத்துள் அடக்கி சொரூபமாக்குவது என்பது அவர் விளக்கநிலையை அவமத்திப்பது போன்றாம். ஆன்மாக்கள் தோறும் அவருடைய ஏகதேச விளக்க நிலையே விளங்குகிறது... அவருடைய இருப்பு நிலை அன்று... அவருடைய இருப்பு நிலை என்பது அவருக்கே உரித்தானது... பகிர்ந்தளிக்க முடியாத வண்னம் பெருவெளி சொரூபம்.... விளக்க நிலையே பற்பலவற்றாலும் பற்பலவிதமாக விளங்குகிறது... இதுவெல்லாம் கூட அவருடைய ஏகதேசத்தில் ஒரு அணுப்பொடி ஏகதேசமே...... விளங்கிகொள்ளவும்.... அதன் அளப்பு என்னவென்று.... சும்மா புருவமத்தி... புருவமத்தி என கூக்கிரலிடுவது அல்ல...... அப்படி எல்லையற்ற  ஒன்றை அதன் இருப்பு நிலையை ஏகதேசமாக பற்றுவதே "பற்றற்றான் பாதம் பற்றுதல்”... அதுவும் சின்ன ஏகதேசமே.... ஒரு நூல் அளவு என வேண்டுமானால் சொல்லலாம் அந்த இருப்பு நிலையின் ஏகதேசமே “தயவு”.... அதனாலேயே தான் வள்ளலார் அதனை கெட்டியாக பற்றினார்... அது கடவுளின் விளக்கம்...... ஏகதேசம் ஆனாலும்.... இது தான்.. "இயற்கையில் தானே இருக்கின்றவராய் விளங்குகின்றவரும், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் இருக்கின்றவரும்” என்பதன் பொருள்.... இப்படி அறிபவன் புருவமத்தியை விட்டு விடுவான்... அவன் அறிவு விரிய தொடங்கும்.... அவன் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே ஒரு கோணத்தில் பார்க்க தொடங்குவான்.... அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என பார்ப்பது இப்படியே.... “இப்போது என்னுடைய அறிவு அண்டங்டாங்களுக்குப்குப்பாலும்  விரிந்திருக்கிறது” என வள்ளலார் சொல்லுவது என்னவென விளங்க தொடங்கும்..... அறிவு வரும் போது பற்றுதலும் விடுதலும் இருக்காது.... எல்லாத்தையும் கடவுளின் ஏகதேச விளக்கமாக பார்க்கும் போது விட்டு விடுவது என இருக்காது... ஆனால் புருவமத்தி தான் எல்லாம் என்பதும் இருக்காது அது உண்மையில் தனியாக பற்றுவது இல்லை... இருப்பதை வளர்த்துகொள்வதே.... தயவு என்பது நம் கூடவே இருப்பது, கடவுளின் ஏகதேச விளக்கம்.. அதை பற்றுதல் என்பது கூட இல்லை... அதை வளர்ப்பது...அதற்க்கு உணவு கொடுப்பது... அதுவாகவே இருப்பது.... அதை "அறிய” வேண்டும் என்பது தான் ‘அறிவு”.... சும்மா வாயினால் சொல்லும் தயவு என்பதுவல்ல அது.... அறிகிற தயவு... உணர்கிற தயவு... அது அறிவு இல்லாததனாலேயே.... பற்றுதல்...வேண்டாம் என தோன்றுகிறது.... உண்மை என்னவென அறியும் போது இவை இருக்காது... உண்மை மட்டும் இருக்கும்... அது அறிவு வரும் வரை இப்படியே தான் இருக்கும்... இருக்கிறதை அறிந்து கொண்டாலே போதுமானது... அதை கவனிக்க அது விழிப்புக்கு வரும்... அதை வளர்த்துகொள்ல அது வளரும்.... முதலில் இந்த தயவை புரிந்து அதனை கவனிக்க அது அதனுடைய சொரூபத்தை அறிவிக்கும்.... அப்படி அதன் சொரூப விளக்க நிலைகளை கவனித்து ஆழமாக செல்லுவது சத்விசாரம்... இவை ரெண்டும் சார்ந்து இருக்கிறது..... தயவு இல்லாமல் சத்விசாரம் பயனற்றது.. கேள்வி: காண்பவை அனைத்தும் அவன் விளக்கமாக இருக்க அவனின் இருப்பை மறைக்கும் மறைப்பு எது? உண்மை தான், அவன் இருப்பை மறைப்பு என்பது அணுகமுடியாது... ஆனால் மறைப்பு என நாம் தான் சொல்கிறோமேயொழிய அவன் சொல்லவில்லை என்பதை கவனிக்க, அதாவது மறைப்பு என்பது நமக்கு தான்.... அது நம்மாலே, நம்மிலே தான் நிறையாக இருக்கிறது.... அதுவே ஆணவம் எனும் பெருமறைப்பு. அது எந்த விதத்தாலும் அகலாது இறை அருளால் தான் அகலும்... ஆனால் அதன் தாக்கத்தை குறைத்து பக்குவப்படுத்த அறிவெனிம் வித்தியா தத்துவத்தால் முடியும்... அப்படி நன்முயற்சியில் இருப்போமாகில் கிடைக்கவேண்டியது கிடைக்கும் எனவல்லவா பெருமானார் சொல்லுகிறார்?... மட்டுமல்ல இரண்டு படாத பூரனம் என்பது அவன் விளக்கத்தையும் உள்ளடக்கியதே, அவன் இயல்பை நாம் அறிந்து கொள்ளாத படியினால் நமக்கு இரண்டு பட்டதாக தோன்றுகிறது என்பது உண்மை என கொள்ளலாம்.இது நமது சிற்றறிவின் அனுமானமே... பூரண அறிவு தோன்றும் போது மேலும் வெளியாகும் என இறைவன் கருணையினால் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன். கேள்வி: அன்புக்கு அன்னை தெரேசா என்று தானே கூறுகிறோம் அவங்க செய்யாத ஜீவகாருண்யத்தையா நாம் செய்றோம்? புரியாது.. புரியாது ... அது அப்படித்தான்.... தயவை புரியாதவரை புரியவே புரியாது....... ஆன்ம லாபம் அடையவேண்டும் எனும் லட்சியத்தோடு அல்ல தயவு வெளிப்படுவது..... செய்யும் தவம் எல்லாம் உலகில் உள்ள அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபத்தை பெற்றுகொள்ளவேண்டும் என லட்சியம், இது தான் தயவு...... உலகில்பிறந்து செத்துபோன அனைத்து ஜீவஜாலங்களும் ஆன்ம லாபம் பெறவேண்டும் எனும் லட்சியம்தான் தயவு.... உலகில் பிறக்க இருக்கும் அனைத்து ஜீவஜாலங்களும் கூட ஆன்ம லாபத்தை பெற்று கொள்ளவேண்டும் எனும் பேரவா தான் தயவு..... அன்னை தெரசா இதற்க்கு கால் தூசு வராது.... இப்படியான தயா எண்னம் கொண்டவன் எப்படி இருப்பான் என நினைத்து பார்த்ததுண்டாகில் புரியும், அவன் உள்ளத்தயவின் ஆழம்...... பெருங்கடலை விட ஆழமாக அவன் தயவு இருக்கும்.... அவன் எண்ணங்களும் வெளிபாடுகளும் அவ்வண்னம் விளங்கி நிற்க்கும்.... Muthu Kumar:  ஐயா, சத்தியமான உண்மை. யாரொருவர் உலகின் சகல ஜீவன்களும் முக்தியடைய பிரயாசிக்கின்றாறோ அவர்தான் சற்குரு அதுதான் குரு லட்ச்சணம். "இயற்கை உண்மை என்றால் இயற்கையில் என்றென்றும் உள்ளது..என்றென்றும் இருப்பது.. தானே தோன்றி வளர்வது, தனக்கு ஆதாரமாக தானே இருப்பது.. தன்னைபோல வேறொன்றை யாராலும் உருவாக்கமுடியாதது, தனித்தன்மை வாய்ந்தது, உடலங்கலெலாம் உருவாக்க வல்லது.. உடலங்கலெலாம் நிலைநிறுத்த வல்லது, உடலங்கலெலாம் அழிக்கவல்லது... அதுவே ஜீவன் எனும் ஜீவசிவம் ஆக விளங்கிகொண்டிருக்கும் இயற்கை உண்மை கடவுள்." ❣️நன்றி: திரு. ரியான் ஐயா  அவர்கள்.❣️

No comments:

Post a Comment