Wednesday, December 7, 2022
ஓசை கொண்ட திருநடனம்
ஓசை கொண்ட திருநடனம்
" ஆசின் மாமறை ஆதிபுராதன
மாசிலாத் தனிகையர் மனுமகன்
ஓசை கொண்ட நடனத்தாலே மனு
ஈசனாகும் இயல்பெடுத்து ஓதுவாம்."
"கூசாமல் ஏறிடும் வாசிமுனையின் மேல்
குருபரன் தன்னிடமே அந்தா
தேசிகர் ஆடும் திருநடனம் கண்டால் தித்திக்கும் உன்னுயிரே."
- பிரம்ம பிரகாச
மெய்வழி ஆண்டவர்கள்
மெய்ஞானிகளின் சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாடவும்-
தங்கள் பாதமெனும் வாசக் கமலத்தால்
தம்மைச் சரணடைந்த சீடர்களை வலிந்து ஆட்கொண்டு
ஜ
தங்கள் ஓசை கொண்ட நடனத்தாலே மனுவை
ஈசனாக்கி விடுகிறார்கள்.
"ஆடிய காலும் அதிற்சிலம்பு
ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலங் குருபரன் கொண்டாடத்
தேடி உளே கௌஜஜௌண்டு தீர்ந்தற்றவாறே."
-திருமந்திரம்2760
திருநடனம் புரியும் திருவடி யும், அத்திருவடியிலிருந்து ஒலிக்கும் மறைச்சிலம்பொலியும், அச்சிலம்பொலியிலிருந்து இசைக்கும் பாசுரங்களும் வழங்குவதற்கு வேண்டியே திருக்கோலம் கொண்டெழுந்து வந்தவன் குருபரன். அவன் திருவருளால் அடியேன் என் உள்ளத்தினுள்ளே அவனைத் தேடிக் கண்டு கொண்டேன்.
என்னை ஆட்கொள்ள வேண்டியே அவன் ஆட நின்றான்.
அந்த மாமணி ஈசனாகிய குருபரன் மலரடித் தாள் நடனமாட, அது நாதப் பிரம்ம சிவநடனம் ஆமே.
குரு பிரானின் ஓசை கொண்ட திருநடனமே நம்மை சிவமாக்கும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment